எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 15

277 10 2
By SindhuMohan

கௌசிக்... பிளீஸ்... இன்னிக்கு ஒரு நாள் விட்டுடேன்... டயர்டா இருக்கு.... என்று மீராவின் குரல் காதில் விழ...

இதயத்தில் ஒரு திக்கொடு ," என்னடா நடக்குது இங்க?" என்றபடி நாமும் கொஞ்சம்  டீசெண்ட்ட் ஆ நடந்துகோங்கப்பா , நாங்க வரப்போறோம் என்ற படி நாம் உள்ளே போக...

அங்கே நடந்து கொண்டிருந்ததை பார்த்தவுடன் க்கும்... அதானே பார்த்தோம் இதுக எல்லாம் அதுக்கு சரிபட்டு வராதுகப்பா... என்ற நினைப்பு எழுந்தாலும்.. அங்கே நடந்து கொண்டிருந்தது ஆச்சர்யமான  ஒன்று தான்...

மீரா ஏதோ சினிங்கி கொண்டே  துணியை மடித்து வைய்த்துகொண்டிருக்க, கௌசிக் தரையில் கால் நீட்டி  சுவரில் சாய்ந்து மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான் .. அவள் புலம்புவது காதில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளாமல்...

துணியை மடித்து பீரோவில் அடுக்கிவிட்டு வந்தவள் அவன் அருகில் அமர்ந்து கையை நீட்டினாள்.

தன் சட்டை பாக்கெட்டில் இருந்த அவளது மொபைலை கொடுக்க போனவன் கிட்சன் ஸ்லேப்...

சுத்தம் பண்ணிட்டேன் சாமி... காலைலேயே பண்ணிட்டேன்... இப்பவாது மொபைலை கொடு.... என்ற படி அவனை முறைக்க...

ஒரு குறும்பு புன்னகையோடு அவளிடம் மொபைலை அளித்தான்...

அதை வாங்கிக்கொண்ட பின்பும் அவள் முகம் உம் மென்றே இருக்க...
அவன் கண் அகலாது அவளையே புன்னகையோடு பார்த்தான்...

அவன் பார்த்துகொண்டு இருப்பது தெரிந்தாலும் மூஞ்சியில் சிரிப்பு காட்டாமல் மொபைலை பார்த்தவள் ஐந்து ஆறு நொடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் சிரித்து விட...

உனக்கு வராதத எல்லாம் ஏன் முயற்சி பண்ற?

போ கௌசி...

(கௌசி 😳)

இன்னிக்கு லீவ் நாள் தானே இன்னிக்கு கூட ஃப்ரீ ய இருக்க விடாம பாரு வேளை செய்ய வைய்கர... ஒரு நாள் இதுக்கும் லீவ் விட்டா என்னவாம்... பாரு மொதல்ல என்னோட வீடு எவ்ளோ lively யா இருக்கும் , இப்போ பாரு எப்படி அலங்கோலமாக இருக்குன்னு..

Oh... அப்டியா?? I think Meera you should Google it for the meaning of அலங்கோலம்!!!

உண்மை தான் அவளுக்கு அதற்கான பொருள் தெரியவில்லை என்பது வீட்டை சுற்றி கண்களை அலைய விட்ட நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது...

முதலில் அவள் வீடு  எப்படி அழகாக  இருந்தது என்று பார்த்திருப்போம் ... ஆனால் இன்று அதற்கு எதிர்மாறாக இருந்தது ..

கிட்சேனில் பார்திரங்கள் கழுவி அடுக்கப்பட்டிருந்தது... ஹாலில் சிதறிய பொருட்கள் எல்லாம் அது அது இடத்தில் இருந்தன... துணிகள் மடிக்கப்பட்டு பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ... அழுக்கு துணிகள் அதனுடைய கூடையில் இருந்தது... தரை கூட்டப்பட்டு சுத்தமாக இருந்தது...

இது தான் அவளுக்கு அலங்கோலமாக தெரிகின்றது...

அவன் அப்படி சொன்னவுடன் அவள் பளிப்பு காட்ட...

அவளை நோக்கி திரும்பி சம்மணம் போட்டு அமர்ந்தவன் ...

மீரா .. எப்பையுமே நம்மள சுத்தி இருக்க இடங்களை சுத்தமா வைச்சுக்கணும். அப்போ தான் எப்பையுமா நம்மள சுத்தி பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும்... You are not a child... You also know that... But you are bit lazy... That's why I am insisting you to do the work without leave ... இப்போ தான் நீ இத ஆரம்பிச்சிருக்க... கொஞ்ச நாள் போக போக இது உனக்கு பழகிடும் and also உனக்கே கச கசன்னு இருந்தா பிடிக்காம போகிடும், ஆன இப்போ ஒரு நாள் தளர்த்துனா கூட உனக்கு நாளைக்கு  நாளைக்கு என்று தாள்ளிப்போடும் எண்ணம் வந்திடும்  என்று கூறி முடிக்க...

அவன் சொல்வது தனது நலனுக்கு தான் என்று புரிந்து புன்னகைத்தாள், இருந்தாலும் வேண்டுமென்றே
அவன் கால்லை தொட்டு கும்பிடுவதை போல செய்கை செய்தவள் கௌசிக் தெய்வமே நீ என்ன சொன்னாலும் செய்யறேன் ... போதும் உன் உபதேசம், விட்டுட்டேன் என்னை என்று கும்பிட...

அவள் தலையில் நங் கென்று கொட்டியவன்  எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு .. சாயங்காலம் இங்கிலீஷ் கிளாஸ் இருக்கு மறந்தடாத என்பதாய் சொல்லிவிட்டு அகன்றான்...

இங்கிலீஷ் ஷா.... விநாயகா ... இவனிடம் இருந்து என்னைய காப்பாதேன் என்று பொய்யாய் கதறினாள் அவள்.

இப்படி அவன் அறிவுரைகள் வழங்குவதை   அவன் அவள் புரிந்து கொள்ள குழந்தைக்கு சொல்வதை போல சொல்லிக் கொடுப்பதை எல்லாம் புரிந்தும்  இவள் கிண்டல் பண்ணி கொண்டிருக்க  அவள் அறியவில்லை அவன் ஓரு வார்த்தை எத்தனை பேரின் தலை எழுத்தை மாற்ற கூடியது... எத்தனை வலிமையானது என்பதனை..

வீட்டிற்கு வந்தவன் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிவிட்டு அர்ஜுன் உடனான மீட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவன் குளியலறையில் நுழைந்தான்..

முகத்தில் தண்ணீரை இரைத்தவன் கண்ணாடியில் பார்க்க ஏனோ அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது, எப்போதும் போல உதட்டளவில் அல்லது மனதில் இருந்து வருவதை அவன் கண்கள் காட்டிக்கொடுத்து...

என்றும் வெறுமையாய் தெரியும் கண்கள் சில நாட்களாய் ஏதோ ஒரு உணர்வை தாங்கி நிற்கின்றன.

என்றிலிருந்து என்பதை அவன் அறியான்... ஆனால் யாரால் அது என்பதை நன்கு உணர்ந்தான்... அதற்கு அவன் மனதில் தோழி என்று வரித்து வைத்திருக்கும் மீரா வினால் என்பதையும் அறிவான்..

அவன் முதலில் அவளது கள்ளம் கபடமற்ற உள்ளத்தை பார்த்து கண்டிப்பாக அவளே அகிலனுக்கு பொருத்தமானவளாக இருப்பாள் என்று நினைத்தான்... மேலும் அவளிடம் பேச்சு கொடுத்ததில் அந்த ராகுல் மீது அவளுக்கு இருப்பது ஒரு நடிகர் மீது ஏற்படும் ஈர்ப்பு போல தானே தவிர காதல் கீதல் எல்லாம் எதும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டவன் , இவள் தான் அந்த வீட்டின் மருமகள் ஆகவேண்டும் , இதை பற்றி பாட்டியிடம் பேசிவிட்டு இங்கிருந்து கிளம்ப வேண்டும்... என்று ஒரு முடிவோடு இருந்தவன் அவள் காஃபி சாப்பிட கூப்பிட அவள் வீட்டுக்கு சென்றவன் அவன் வைத்திருந்த எண்ணத்தை அடியோடு கை விட்டான்..

ஒரு வீட்டை அவன் அதற்கு முன்பு இவ்வளவு அலங்கோலமாக  பார்த்ததே இல்லை... ஒரு பெண்ணால் தான் ஒரு வீடு கோவில் ஆவதும் குப்பைகூடம் அவாதும்... அப்படி இருக்க இவளை எப்படி அந்த வீட்டின் மருமகள் ஆக்குவது... முடியவே முடியாது....

மேலும் அவள் கொடுத்த காஃபி யை குடித்தவுடன் அந்த முடியாது என்ற நிலைப்பாடு 100 சதவிகிதம் உறுதியானது..

நமக்கு தான் தெரியுமே மீராவின் கை மனத்தை...

ஆனால் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என்று போக போக ஏனோ அந்த நிலைப்பாடு உடைய ஆரம்பித்தது...

அவள் தான் வீட்டை சுத்தம் செய்யவேண்டும் என்று இல்லயே... அங்கே வேலைக்காரர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்களே அவர்கள் பார்த்து கொள்வார்கள் ... என்று ஒரு மனம் சொல்ல...

என்ன இருந்தாலும் ஒரு சுய ஒழுக்கம் வேண்டாமா இவளுக்கு... அதும் அகிலன் மிகவும் சுத்தம் பார்ப்பவன் சிறுவயதில் இருந்தே அவனுக்கு எல்லாம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுவான்...
ஒரு சில நாள் தான்வியும் தானுமே எடுத்ததை எடுத்த இடத்தில் வைய்க்காமல் இருப்பதற்கு அவனிடம் திட்டு வாங்கியது நினைவில் வந்தது...

தான் மாறிவிட்டாலும் இன்னும் தான்வி அகிலனி்டம் திட்டு வாங்குவது அவன் அறியாத விஷயமில்லை...

ஆதலால் இவள் அவனுக்கு ஒத்து வர மாட்டாள் என்று இன்னொரு மனம் இடித்துறைத்தது...

இருந்தாலும்................

சரி , இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை , அவளுக்கு நான் எல்லாவற்றையும் புரிய வைக்கிறேன் ... என்னால் அவளை மாற்ற முடியும் என்ற வைராக்கியத்தோடு மீராவை மாற்ற களம் இறங்கினான்.

அதற்கு முதல் படியாய் ஒரு ஞாயிறு அன்று அவள் வீட்டுக்கு சென்றான்.

லேப்டாப்பில் கொரியன் சீரியல் பார்துகொண்டிருப்பதை கண்டவன்

என்ன மீரா ஃப்ரீ ஆ?

ஆமா கௌசிக் சார்... இன்னிக்கு நோ வொர்க்... Only entertainment தான்...

Oh... that's good...

டீ குடிக்கரீங்களா கௌசிக் சார்?

மனதிற்குள் பதரியவன் அதை வெளிக்காட்டாமல் ... No Meera , just now had breakfast...

Oh... Super super சார்... நானும் இப்போ தான் சாப்பிட்டேன்...என்று அருகில் இருந்த தட்டை காமித்தாள்... கை கூட தட்டிலயே கழுவி வைத்திருந்தாள்..

அதை கண்டவன் முகம் சுருங்கியது...

அதை கண்டவள் வேக வேகமா அதை சிங்கிள் கொண்டு போய் போட்டாள்... சின்கிலும் பாத்திரம் நிரம்பி வழிந்தது...

அவன் வீட்டை மறுபடியும் சுத்தியும் பார்க்க ...
ஹி ஹி என்னடா வீடு ரொம்ப கேவலமா இருக்கேன்னு பார்கரீங்களா... என்ன பண்றது எனக்கு டைம் கிடைக்கவே மட்டேங்கிறது... இல்லைனா  neat ஆ இருக்கும்...

அன்னைக்கு இப்படி தான் இருந்தது என்று, முதன் முதலில் பார்த்தபோது முகத்தில் காட்டாமல் அடக்கிய  உணர்வுகளை இன்று முகத்தில் காட்டினான்...

ஹி ஹி ... அதான் சொன்னேனே டைம் இல்லைன்னு... ஹி ஹி..

Oh.. you are free now ,right?

அது....

What... You are watching the serial only ,right ..  then we will clean this ...

என்ற படி அவன் கீழே கிடந்த பொருட்களை செல்ஃப் களில் அடுக்கி வைக்க ஆரம்பிக்க...

அச்சோ நீங்க விடுங்க , நான் கொஞ்சம் பொறுத்து எடுத்து வைத்து கொள்கிறேன்...

No problem Meera... I am also free today... I will help you ..
என்றதாய் அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் வேலையை தொடர...

அவன் செய்வது மீரவிர்க்கு சங்கடத்தை அளித்தது...

லேப்டாப் பை பாவமாய் பார்த்தவள் அதில் ஓடிய கொரியன் சீரியலை அணைக்க மனமில்லாமல் அணைத்து விட்டு , அவனை வேளை செய்ய விடமால் இவள் அவன் செய்த வேலையை செய்ய ஆரம்பித்தாள்...

அதுவே இன்று பார்த்த வீடாய் சுத்தபத்தமாய் இருந்தது...

அதே போல அவள் ஆங்கிலத்தில் தத்தி (என்னைய மாதிரியே 😁... Anyone else???)
என்பது புரிய அதற்கும் பாடம் தினமும் நடத்த ஆரம்பித்தான்...

எனவே மீராவின் வாழ்கையை அவளுக்கே தெரியாமல் நேர்த்தியாய் மாற்ற ஆரம்பித்தான்... அவளும் மாற தொடங்கினாள்... அதே போல் அவர்கள் இருவருக்கிடையே  ஒரு அழகான நட்பும் வளர்ந்தது ...

Hai my dear friends... Vote pannunga pa... Maranthudaatheenga...


Continue Reading

You'll Also Like

248K 8.8K 41
💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.
12.6K 1.2K 33
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
56.6K 2.3K 36
காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உ...
84K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...