இன்னார்க்கு இன்னாரென்று...!(...

De NiranjanaNepol

56.3K 3.3K 652

வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில... Mai multe

1 மாமல்லனும் பரஞ்சோதியும்
2 யாரவள்?
3 தெய்வீக அழகு
4 இருவரும் ஒன்று தான்
5 நாம் சந்தித்து விட்டோம்
6 இனம் புரியாத ஒன்று...
7 பிடித்திருக்கிறது
8 விரும்புகிறேன்
9 மனம் உடைந்த மாமல்லன்
10 நீ தான் எனக்கு எல்லாம்
11 புது இடம்
12 எதிர்பாராத திருப்பம்
13 உன்னத உணர்வு
14 வீட்டு சாப்பாடு
15 கசப்பான கடந்த காலம்
16 இதயத்தின் குரல்
17 வெறும் காகிதம் தானே?
18 நிச்சயதார்த்தம்?
20 வரவில்லை...
21 'வீடு', 'இல்லம்' ஆனது
22 கிணற்று தண்ணீர்...
23 வேலைக்காரி
24 பாட்டிக்கு எப்படி தெரியும்?
25 எதிர்பாராத சுவாரஸ்யம்
26 உனக்கு என்ன ஆனது?
27 அதிஷ்டம் அற்றவளா?
28 மாறுதல்...
29 அக்கறை
30 நீண்ட பயணம்
31 என்ன செய்து விட்டாள்?
32 நண்பன் யார்?
33 மனைவியாய்...
33 என்ன அது?
34 வெப்பக் கடத்தல்
35 சிறப்பான போர்வை
36 முன்னா...
37 உங்கள் திட்டமா?
39 மீண்டும் மதுரைக்கே...
40 உளவாளி
39 காத்திருந்த அதிர்ச்சி
40 வரன்
41ஷீலாவின் திட்டம்
42 ஷீலாவா...?
43 எங்கே இருந்தாய்?
44 காதம்பரியின் மகன்
45 சந்திப்பு
46 பிறந்தநாள்
47 ஆபத்தின் விளிம்பில்
48 நினைவுகள்
49 திருமதி மாமல்லன்
50 புதிய வாழ்க்கை
51 இறுதி பகுதி

19 அவள் வருவாள்

863 55 6
De NiranjanaNepol

19 அவள் வருவாள்...!

தனது பழைய நினைவில் இருந்து வெளியே வந்தாள் இளந்தென்றல். அவளால் காதம்பரியையும், அவருடைய மகன் முன்னாவையும் மறக்கவே முடியவில்லை. ஏனென்றால், காதம்பரியை அவளுக்கு மிகவும் பிடிக்கும். காதம்பரி ஒரு நாள் நிச்சயம் வருவார், வந்து தான் கூறியபடி செய்வார் என்று அவள் மனதார நம்பினாள்.

{ காதம்பரியும், கோதையும் நெருங்கிய தோழிகள். திருமணத்திற்கு பிறகு, கோதை தனது கணவருடன் கிராமத்திற்கு சென்று விட்டார். இளந்தென்றல் வளர்ந்த பின், அவளுக்கு படிப்பில் இருந்த பிடிப்பை பார்த்து, அவளுடைய அப்பா, மீண்டும் மதுரைக்கே திரும்பி வர முடிவு செய்தார். அவளுடைய படிப்பு கெட்டுப் போவதை அவர் விரும்பவில்லை.

மதுரைக்கு திரும்பி வந்து விட்டபோதிலும், காதம்பரியை சந்திக்க ஒரு முறை கூட முயலவில்லை கோதை. அதற்கு, அவர்களுக்கு இடையில் இருந்த தகுதி வித்தியாசம் தான் காரணம். ஆனால் விதி அவர்களை சந்திக்க வைத்தது.

தன் வயதுக்கு மீறிய பொறுப்புடன் இருந்த இளந்தென்றலை காதம்பரிக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளை கோதையிடம் வாயார புகழ்ந்து தள்ளினார். அவர்களுக்கு இடையேயான நட்பு மேலும் ஆழமானது.

 கோதையின் குடும்பம் மதுரைக்கு வந்த சில மாதங்களிலேயே, தனது வியாபாரத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்தார் காதம்பரியின் கணவர். அவர்கள் சென்னைக்கு இடம்பெயர தயாரானார்கள். அப்பொழுது தான், இளந்தென்றல் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படையாய் கூறினார் கதம்பரி. இளந்தென்றலின் கழுத்தில் தங்கச் சங்கிலியையும் அணிவித்து தான் கூறிவந்தது விளையாட்டல்ல என்பதையும் நிரூபித்தார். அந்த சம்பவம் தான், இளந்தென்றலின் மனதில் ஊன்றி, பெரிய விருட்சமாய் தழைத்தோங்கி நின்றது. ஆனால், காதம்பரி, தனது முன்னாவிடம் தன் விருப்பத்தை கூறாமலேயே இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார்.

நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் என்று இளந்தென்றல் நம்புவது சரி தான். ஆனால், அவளுடைய கதைக்கான திரைக்கதை, ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்பது அவளுக்கு தெரியாது. அவளை சுற்றி நடப்பது எல்லாமே, அவள் யாருக்காக காத்திருக்கிறாளோ, அவனை நோக்கித் தான் அவளை அழைத்துச் செல்கிறது என்பதும் அவளுக்கு தெரியாது.

காதம்பரி கூறியதைப் போலவே, அவர் ஒன்றும் கூறாமலேயே, இளந்தென்றலை பார்த்த பொழுது, தன் மனதில் வித்தியாசத்தை உணர்ந்தான் மாமல்லன். அவளுக்கும் தன் அம்மாவிற்கும் ஏதோ ஒரு ஒற்றுமையை இருப்பதாய் உணர்ந்தான் அவன். அந்த எண்ணம் அவனை தன் நிலையில் உறுதியாய் நிற்க செய்தது. அப்படித்தான் இளந்தென்றலும்... பாவம் அவள்... தன் கண் முன்னால் இருக்கும் ஒருவனை, எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறாள். விதி அவர்களை எப்படித் தான் இணைக்கிறது என்று பார்ப்போமே...!}

மறுநாள் காலை,

காலை சிற்றுண்டிக்காக தரைதளம் வந்த மாமல்லன், இளந்தென்றல் எதையோ தீவிரமா யோசித்துக் கொண்டிருப்பதை கண்டான். அவன் வந்தது கூட தெரியாமல், அவள், அவன் மீது மோதி கொண்டாள். அவளது கன்னத்தில் இருந்த ஈரம் அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவன் முன் நிற்காமல், அங்கிருந்து விரைந்து சென்றாள் இளந்தென்றல். அதனால் மாமல்லன் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

அவனால் தானே, இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவளால் தனது அம்மாவுடன் இருக்க முடியாமல் போய்விட்டது...? அவளது அழுது சிவந்த கண்கள் அவனது நிம்மதியை குலைத்தது. அவனால் என்ன செய்ய முடியும்? அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி யோசித்தான். அவன் மனதில் ஒரு உபாயம் தோன்றியதால், கண்களை திறந்தான்.  ஒருவேளை, அவன் மனதில் தோன்றிய உபாயம், அவனுக்கே வினையாய் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று தோன்றியது அவனுக்கு.

பரஞ்சோதிக்கு ஃபோன் செய்து, தனது எண்ணத்தை அவனிடம் கூறினான். அதைக் கேட்ட பரஞ்சோதி, வாயடைத்து போனான். அவன் கூறிய விஷயத்தில் சிறிது கூட உடன்பாடு இல்லை பரஞ்சோதிக்கு. ஆனால் மாமல்லன் எதையும் கேட்க தயாராய் இல்லை. இறுதியில், தான் கூறியதை செய்யுமாறு பரஞ்ஜோதிக்கு கட்டளையிட்டான்.

இளந்தென்றலின் அறைக்கு வந்த மாமல்லன், அவளது அறையின் கதவை தட்டினான், அது திறந்தே இருந்த போதிலும். அவனைப் பார்த்த இளந்தென்றல் வெளியே வந்தாள்.

"உன்னோட திங்ஸை எல்லாம் பேக் பண்ணிக்கோ" என்றான்.

எதற்கு? என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் இளந்தென்றல்.

"நீ மதுரைக்கு போய், உங்க அம்மா கூட ஒரு வாரம் தங்க போற"

"என்ன்னனது?" என்றாள் நம்ப முடியாமல்.

"உங்க அம்மா கூட இருக்கிறதுக்கு, நான் உனக்கு ஒரு வாரம் டைம் குடுக்குறேன்"

இது உண்மையிலேயே நடக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவனை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள்.

"இன்னும் ரெண்டு மணி நேரத்தில், நீ ஃபிலைட்ல போர்ட் ஆகணும்... போய் கெளம்பு"

"ஆனா..."

"என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க உனக்கு டைம் இல்ல. போகும் போது பேசிக்கலாம். போய் கெளம்பு." கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நடந்தான்.

என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை இளந்தென்றலுக்கு. அவனுக்கு திடீரென என்னவானது? உண்மையிலேயே அவன் அவளை மதுரைக்கு அனுப்பப் போகிறானா? ஆனால் ஏன்?

அவளது எந்த உடைமையையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லை.  தேவையான அனைத்தும் அவளிடம் மதுரையில் இருந்தது. சாதாரண உடலில் இருந்த அவள், நல்ல உடைக்கு மாறி, தனது கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

குழப்பத்துடன் தனக்காக காத்திருந்த இளந்தென்றலை நோக்கி வந்தான் மாமல்லன். ஆனால் அவன் முகத்தில் எந்த குழப்பமும் இல்லை. அவன் மனதில் என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இளந்தென்றலுக்கு இருந்தது.

"உன்னோட பேக் எங்க?"

"நான் எதுவும் எடுத்துக்கல. எனக்கு தேவையானது எல்லாம் மதுரையில் இருக்கு."

சரி என்று தலையசைத்த மாமல்லன், கிளம்பலாம் என்று சைகை செய்து விட்டு நடந்தான். பேசாமல் அவனை பின்தொடர்ந்தாள் இளந்தென்றல். அவளிடம் ஒரு வெள்ளை நிற உறையை கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பியவன்,

"இது உன்னோட டிக்கெட்ஸ்..." என்றான்.

அந்த உரையை திறந்து, அதில் இருந்த பயண சீட்டுகளை வெளியில் எடுத்தாள் இளந்தென்றல். அவள் திரும்பி வருவதற்கு தேவையான விமான பயண சீட்டும் அதில் இருந்தது. அது, ஒரு வாரத்திற்கு பிறகு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

"என்னோட பேரை யார்கிட்டயும் சொல்லாத. ரங்கநாதன் கிட்ட நீ இருக்கிற வீட்டு தலைவரோட பேர், வேதநாயகம்னு சொல்லி இருக்கோம். நீயும் அதையே மெயின்டெய்ன் பண்ணிக்கோ. மறந்துடாத."

"எதுக்காக என்னை நீங்க மதுரைக்கு அனுப்புறீங்க?"

"உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் நடந்திருக்கு. என்ன தான் ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அவங்களை நல்லா பாத்துக்கிட்டாலும், நீ அவங்க கூட இருக்கணும்னு தான் நினைப்ப. அதனால, போய் அவங்க கூட இருந்துட்டு வா"

அவள் மனதில் எழுந்த வியப்புக்கு அளவே இல்லை. இவன் எந்தவிதமான மனிதன்? இவன் மனதில் இருப்பது என்ன? சாலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த அவனது முகத்தில் அவள் பார்வை ஊன்றி நின்றது.

அதற்குப் பிறகு அவர்கள் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அவளை விமான நிலையத்தில் விட்டு, அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றான் மாமல்லன். அவன் கண்களில் இளந்தென்றல் கண்டதெல்லாம், பயம், குழப்பம், பரிதவிப்பு.

"ஜாக்கிரதையா போயிட்டு வா" என்று மென்று முழுங்கினான்.

"தேங்க்யூ (என்று சற்று நிறுத்தியவள்) எல்லாத்துக்கும்... " என்றாள்.

சரி என்று தலையசைத்தான் மாமல்லன். அவள் நடக்க துவங்கினாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் மாமல்லன், அவள் ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற எண்ணத்துடன்.

உள்ளே செல்வதற்கு முன், ஒரு நிமிடம் நின்றவள், திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் பார்த்தாளே தவிர, அவனைப் பார்த்து சிரிக்கவில்லை. ஆனால் அந்த பார்வை, அவனது உயிரை மீட்டுக் கொண்டு வந்தது போல் இருந்தது அவனுக்கு. அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. புன்னகைத்தபடியே வெளியே வந்து, வண்டியை கிளப்பி, அலுவலகம் சென்றான்.

எம் கே அலுவலகம்

மாமல்லனுக்காக அவனது அறையில்  காத்திருந்தான் பரஞ்சோதி. அவன் தன்னைப் பார்த்து முறைப்பதை உணர்ந்தான் மாமல்லன். அதை கவனிக்காதவன் போல் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

"நெஜமாவே அவங்களை அனுப்பிட்டியா?"

தனது கணினியை உயிரூட்டிய படி ஆம் என்று தலையசைத்தான்.

"நீ என்ன செய்றன்னு தெரிஞ்சு தான் செய்றியா?"

"அதுல உனக்கு சந்தேகமா?" என்றான்.

"அவங்களை மதுரைக்கு அனுப்பனும்னு என்ன அவசியம்?"

"அவ, அவங்க அம்மாவை பாக்கணும்னு விரும்பினா..."

"ஒருவேளை அவங்க... " என்று அவன் முழுதாய் கூறி முடிக்கும் முன், அவனது பேச்சை துண்டித்து,

"நிச்சயம் திரும்பி வருவா" என்றான் மாமல்லன்.

"நீ இப்படி எல்லாம் செய்யறத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மல்லா. எதுக்காக இப்படி எல்லாம் செய்ற? இங்க இருக்க விருப்பமே இல்லாத ஒரு பொண்ணு, மறுபடி திரும்பி வருவாங்கன்னு எப்படி நீ நினைக்கிற? அவங்க அம்மாவுடைய ஆப்பரேஷன் முடிஞ்சிடுச்சு... இதுக்கு அப்புறம் உன்னால அவங்களுக்கு ஆக வேண்டியது எதுவுமே இல்ல. அதை அவங்க தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டா?"

"நான் சொல்றேன் இல்ல...? அவ திரும்பி வருவா..." என்றான் உறுதியாக.

"மல்லா, மனசை அமைதிப்படுத்திக்கிட்டு, நிதானமா யோசிச்சு பாரு. அவங்க உன்னை காதலிக்கல. அப்புறம், அவங்க திரும்பி வருவாங்கன்னு எப்படி நீ நம்புற?"

"அது தான் இளந்தென்றல். அவ மட்டும் இங்கிருந்து போகணும்னு நினைச்சிருந்தா, எப்பவோ அவளால போயிருக்க முடியும்." என்றான் அமைதியாய்.

"நீ நினைக்கிற மாதிரி நடக்கணும்னு தான் என்னோட ஆசையும். ஆனா..."

"கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடு..."

பரஞ்சோதி அங்கிருந்து செல்ல முற்பட்டபோது,

"எனக்கு நல்லது செய்றேன்னு, அவளுக்கு போனை போட்டு, அவகிட்ட எதுவும் சொல்லக்கூடாது..." என்று அவனை எச்சரித்தான் மாமல்லன்.

கடுங்கோபத்துடன் அவனை ஏறிட்டான் பரஞ்சோதி. அவனுக்கு தீர்க்கமாய் புரிந்து போனது. அவன் நினைத்தது சரி தான். இது மாமல்லனை எங்கு கொண்டு நிறுத்தப் போகிறது என்று அவனக்கு புரியவில்லை. ஒரு விதத்தில் இது மாமல்லன் இளந்தென்றலுக்கு வைக்கும் பரீட்சை. அவளிடம் அவனுக்கு பிடித்தது அவளது கண்ணியம் தானே...? எந்த அளவிற்கு மாமல்லன் அவளை காதலிக்கிறானோ, அதற்கு மேல், அவளிடம் மரியாதை கொண்டிருந்தான். அந்த மரியாதைக்கு காரணமே அவளது நேர்கொண்ட பார்வை தான். அவள் தன்னை ஏமாற்ற மாட்டாள் என்ற நம்பிக்கையை விட, அவள் தன்னை ஏமாற்றி விடக்கூடாது என்ற பயம் தான் அவன் முகத்தில் அதிகமாய் தெரிந்தது. அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு விஷயம் துரோகம்.

அவனது கண்களில் தெரிந்த பயத்தை நன்றாகவே உணர்ந்தான் பரஞ்சோதி. அவளை இழந்து விடுவோமோ என்ற பயம்... ஒருவேளை அவள் வராமல் போனால், அவளை நெருப்பில் தள்ளவும் தயங்க மாட்டான்  மாமல்லன்... ஆனால் அதே நேரம், அவனும் அந்த நெருப்பில் விழுந்து சாம்பலாய் போவான்...!

தொடரும்...

Continuă lectura

O să-ți placă și

23.1K 909 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...
19.4K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.