எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

அத்தியாயம் 12

270 10 0
By SindhuMohan

அலுவலகத்தில் அனைவரும் மதிய உணவுக்குச் சென்றிட மீரா மட்டும் தன் இடத்தில் மேஜையில் கவிழ்ந்திருந்தாள்.

அதற்கு முக்கிய காரணம் அவளது டிப்பென் பாக்ஸில் இருந்த கோதுமை தோசைகளே . ஆசையாய் சப்பாத்தி செய்ய பிசைந்த மாவில் தண்ணீர் அதிகமாக அது தோசையாக மாறிவிட்டிருந்தது. எங்கே இன்னும் மாவு சேர்த்தால் போன தடவை போலவே நான்கு நாட்கள் சப்பாத்தியே சாப்பிட வேண்டிய நிலை வந்துவிடுமோ ? என்ற பயத்தில் விட்டுவிட்டாள்.

ஆனால் கோதுமை தோசை மீராவின் பிடிக்காத உணவுகளில் ஒன்று... அதை வீணாக்கவும் மனம் வரவில்லை , அதை சாப்பிடவும் பிடிக்கவில்லை. அதனால் தான் சோகமே உருவாய் கவிழ்ந்திருந்தாள்.

ஹாய், மிஸ் .மீரா ... அந்த குரல் கூப்பிட்டவர் யார் என்பதை தெரிவிக்க உண்மைதானா என்பதை போல நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் விரிந்தது.

அவன் தான்... ராகுல் !!!

என்னங்க சாப்பிட போகலையா?என்று அவன் கேட்க அவளோ அக்கேள்வி காதில் விழாத அளவு அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஹலோ , உங்களைத்தான் மீரா... என்று அவன் அவள் முகத்திற்கு நேராக விரல் சொடுக்கிய பின்பே தன்னிலை வந்தாள்...

என்ன ராகுல் சார்?

என்ன என்னவா? நான் நீங்க சாப்பிட போகலையான்னு கேட்டேன் .

அது நான்... இல்லை.... இப்போ ... ம்ம்... இப்போ சாப்பிட தான் போறேன் என்று கூறிக்கொண்டே வேக வேக மாக டிப்பன் பாக்ஸை எடுத்துகொண்டு டைனிங் ஹாலுக்கு விரைந்தாள்.

டேபிளில் அமர்ந்த பின்பும் கூட வேகமாய் துடித்த இதயத்தில் கை வைத்தாள். ஸ்டுப்பிட் மீரா , அவனே வந்து பேசினான் , நீ என்னவோ பேய்யை கண்டவளாட்டம் ஓடி வந்திருக்க , அவன் உன்னைய பத்தி என்ன நினைப்பான் .. லூசு லூசு ... என்று அவளை அவளே வசைபாடி கொண்டே சாப்பிட தோசைகளும் உள்ளே போயின..

என்னடா மச்சான் அந்த புள்ளகிட்ட எல்லாம் பேசிட்டு வர்ற? என்று ராகுல் மீராவின் பேசியதை பற்றி அவன் நண்பன் கரன் கேட்டான்..

அதற்கு ராகுல் ஒரு விதமாக சிரித்து வைத்தான்.

டேய் சொல்லுடா, இந்தாதிரி டம்மி பீஸ்சுக கிட்ட எல்லாம் பேச மாட்டியே , சொல்ல போன திரும்பி கூட பார்க்க மாட்ட  .. இப்போ என்னடான்னா நீயா போய் பேசிட்டு இருக்க ?

டேய் கரன் ... டம்மி பீஸ் தான்... ஆனா அதும் ஒரு நாள் நமக்கு உதவும் டா... அதான் கரெக்ட் பண்ணி வைய்கலாம்னு....

அடப்பாவி, அதானே பா்த்தேன் , பலே ஆளுடா நீ என்று கூற... இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.

ஆனால் இவனின் நோக்கத்தை அறியாமல் மீராவோ ராகுல் தன்னிடம் பேசியதால் ஏற்ப்பட்ட வெட்கத்தாலும் , அவனிடம் பேச முடியாத தன் மீதான எரிச்சலாலும் புலம்பிக் கொண்டிருந்தாள்..

என்ன ஆகுமோ!!!!

ஹாய் ...
வண்டியை நிறுத்தி விட்டு படியேற முனைந்த கௌஸிக்கை அக்குரல் தடுத்தது.

புன்னகையுடன் நின்றிருந்தது மிதிலா.

என்ன சார் , அன்னிக்கு பேர் கூட சொல்லாம போயட்டீங்க , பட் நான் கண்டுபிடிச்சிட்டேன் Mr.koushik தானே..

அவன் அதை கண்டுக்காது இப்போ உனக்கு என்ன வேண்டும்? என்பது போல பார்த்து வைத்தான்.

நான் நேத்து நீங்க போன டைம்க்கு தான் இன்னிக்கு காலைல உங்களை பார்க்க வெயிட் பண்ணினேன், பட்  நீங்க நேரமாவே கிளம்பிட்டீங்க போல... என்றவள் அவன் பேசுவான் என்ற எதிர்பார்ப்போடு அவனைப் பார்க்க , அவனோ முகத்தில் சலனமில்லாது நின்றிருந்தான்.

ம்ம்... நான் MBBS சென்னைல படிக்கறேன் , final year... அன்னிக்கு பார்த்தோம்ல அதுக்கப்பறம் காலேஜ் போய்ட்டேன். டூ டேஸ் பேக் தான் வந்தேன், நாளைக்கு கிளம்பிடுவேன், அதான் உங்களைப் பார்த்து பேசலாம்ன்னு வந்தேன்.

ம்ம் ... யு நோ ... நான் உங்களை ஃபர்ஸ்ட் பார்தப்போவே சொல்லனும்ன்னு நினைச்சேன் .. யு ஆர் சோ ஹேன்ட்சம் என்று வெட்கத்துடன் சொல்லிவிட்டு முகத்தில் ஸ்டைலுக்காக  விட்டிருந்த முடிகற்றைகளை ஒதுக்கிவிட்டாள்.

எரிச்சல் எழ கௌசிக் ஏதோ சொல்ல வாய் திறந்த நொடி

மிதிலா ... எப்படி இருக்க? என்ற குரலோடு மீரா வர கூடவே கடைக்கு போய்விட்டு வந்த லலிதாவின் கண்களுக்கு மித்லாவின் புன்னகையோடு சிவந்திருந்த முகம் கண்ணில் பட்டது.

அவளையும் கௌசிக் ஒரு மார்கமாய் பார்த்தவர் இருவரிடமும் ஒரு சிறு புன்னகையை அளித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ம்ம்... ஃபைன்

காலேஜ் லீவா?

ஆமா..

எப்போ வந்த?

Uff... அத தெரிஞ்சு நீங்க என்ன பண்ணபோறீங்க.? என்று மிதிலா கௌஸிக்கிடம் பேச முடியாத எரிச்சலில் வினாவ ... அதை உணராத மீரவோ..

நான் வந்து பார்த்திருப்பேன்... ஆன்ட்டியும் என்னிடம் சொல்லலையே ஏன்னு தெரியலை என்று  சிரத்தையோடு பதிலளித்தாள்.

யு ஆர் அண்பிலிவபில் என்பதை போல மீராவை பார்த்தவள் கௌசிக்கிடம் திரும்பி..
பை கௌசிக் , அப்பறமா பார்க்கலாம் என்று விட்டு நகர்ந்தாள் , பை மித்தி என்ற மீராவின் குரலை கண்டுகொள்ளாமல் .

என்னாச்சுன்னு தெரியலை , என் மேல இவளுக்கு என்ன கோவம் என்று நிலைமை அறியாமல் மீரா கூற

மிதிலா இவளை உதாசீனம் படுத்தியது கூட பிடிபடாமல் பேசும் இவளை பார்த்த கௌசிக்கிர்க்கு கோவம் வந்தது.. இவ்வளவு வயதாகி விட்டது இது கூடவா புரியாமல் போய்விடும் சரியான மரமண்டை, என்ற எண்ணமே நெஞ்சில் நிற்க அவளோ மிதிலாவை  பற்றி பெருமையாய் பேசியபடியே நகர்ந்தாள்.

கேசவன் ஃபைல்லை அம்பிகா பாட்டியிடம் தர அதில் கையெழுத்திட்டு திருப்பிக் கொடுத்தார்.

எப்படிப்பா போகுது வேலை எல்லாம்? ஏதும் பிரச்சனையில்லையே ?

இல்லம்மா ... கம்பனிகளில் எல்லாம் ஏதும் இல்லை, ஆனா எனக்கும் அர்ஜூன்க்கும் தான் வேலைகள் சரியா இருக்கு , ரெண்டு பேர் பார்த்தே முடியலை , ஆனா கௌசிக் எப்படி தான் ஒரே ஆளா சமாளுச்சானோ.. மலைப்பா இருக்கு..

பெருமையில் பூரித்த அம்பிகா பாட்டியின் முகம் சட்டென்று சிறுத்தது...

என்னாச்சும்மா?.

பின்ன என்னப்பா... இந்த மாதிரி கம்பனிக்கே நேரம் காலம் பார்க்காமல் உழைச்சனால தான் அவன் வாழ்கையை பற்றியே எண்ணாமல் இருந்தான்.. அதான் ஏதேதோ சொல்லி அவனை கோயம்பத்தூர் அனுப்பினேன்... ஆனா அங்க என்னாசுன்னே தெரியலை...  உன்னிடம் ஏதேனும் சொன்னனா?

இல்லைம்மா ஆபீஸ் விஷயங்கள் பத்தி மட்டும் தான் பேசுவான்... மத்தத கேட்ட சொல்ற ஆளா அவன்!!!.

அதும் சரி தான் . எங்கே நான் கேட்ட எரிச்சலில் திரும்பி வந்துடுவானோன்ற பயத்துல நான் ஃபோன் கூட பண்றது இல்லை  அவனுக்கு.

சரி தான் ..

என்ன பண்றதுன்னுனே தெரியலை குழப்பமா இருக்கு..

என்ன குழப்பம் பாட்டி? நீ தானே எல்லாத்தையும் குழப்புவ ...உனக்கே குழப்பமா? என்ற சீண்டலோடு தான்வி வந்தாள்.

லொள்ளு டீ உனக்கு!!!

ஹா ஹ.. கூல்  அம்பு செல்லம்... எப்படி இருக்கீங்க uncle?

ஃபோன் டா.. காலேஜ் எப்டி போகுது?

கோயிங் குட் uncle.

ம்ம்..

சரி சொல்லி பாட்டி என்ன குழப்பம்?

எல்லாம் உன் கௌசிக் அண்ணனை பத்திதான்.

அண்ணவ பத்தியா? ஏதேனும் சொன்னாரா? அந்த பெண்கிட்ட பேசிட்டரா? சொல்லு பாட்டி சீக்கரம் excite அஹ் இருக்கு.

ம்க்கும் , உங்கண்ணன் ஒன்னும் சொல்லலை அதான் இப்படி உட்கார்திருக்கேன் என்னபண்ணலாம்னு.

ஏன்மா? ... நம்ம மீராவ கண்காணிக்க வைச்சா ஏஜென்சிக்கிட்டயே இரண்டு பேரையும் கண்காணிக்க சொன்ன  என்ன?

நோ என்று தான்வியும் சரி தான் என்று பாட்டியும் ஏக காலத்தில் சொன்னார்கள்..

சரிதானா? என்ன பாட்டி சொல்ற? முதல்லேயே அண்ணாவ பொய் பேசி , பிளாக்மெயில் பண்ணி அனுபியிருக்கீங்க,  அதுவே மிக பெரிய தப்பு, அண்ணாக்கு தெரிஞ்சா நம்ம முகதில்யே முழிக்கமாட்டார் . இதில் அவங்களை spy வேற பார்க்கசொல்லாம்னு சொல்ற ... உனக்கு பைத்ததியம் பிடிச்சிருக்கா?

இங்க பாரு தான்வி , இது தப்பவே  இருந்தாலும் இத நான் பண்ணத்தான் போறேன்... கௌசிக் விஷயத்துல சரி தப்பு எல்லாம் நான் பார்க்க போறதில்லை. அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும், அவன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் இதுக்காக என்னவேனாலும் நான் பண்ணுவேன் என்று கூறிய பாட்டியை இது எங்க போய் முடியப்போகுதோ என்ற பயத்தோடு பார்த்தாள் தான்வி.

Hai friends ... Nanum regular ah update pannanumnu  thaan try pandraen...but time kidaikarathu illai... But Nan regular update kodukka kandippa muyartchi pandraen...

Innatha update epdi irukkunu comment pannunga... Kandippa vote pannunga... Bye Bye... Adutha update la paarkalam😊

Continue Reading

You'll Also Like

131K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...
21.8K 636 58
ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை
39.6K 2.2K 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உ...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...