காதலை 💞 தேடி....#KM Stories

Door swarnasenthil

6.4K 1.1K 303

காதலின் 💞தேடலில் நிகழும் தவிப்புகள்..... Meer

காதலை 💞தேடி....
2
3
4
5
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
km

6

241 56 19
Door swarnasenthil

💜🤍💜 காதலை💞 தேடி...💜🤍💜

K💞M Part - 6

கதவை திறந்த ஜனார்த்தனன்..... பாண்டியன் Sir பையன் கதிரா!!?...என்றார்..

ஆமா Sir..
இவன் என் Friend செந்தில்..

புன்னகையுடன் உள்ள வாங்க... என்று வரவேற்றார்....

ஏற்கனவே சோபா வில்... ஒருவர் அமர்ந்திருக்க...

இவர் சென்னையில்... Construction Company Run பண்ணிட்டு இருக்கார்..பேர் மூர்த்தி என்று அறிமுகம் செய்தார்...

தம்பி... என்ன நியாபகம் இருக்கா??...
நானும் உங்க அப்பாவும்
நல்ல பழக்கம்... 
ஒரு தடவ உங்க வீட்டுக்கு கூட...
வந்து இருக்கேன்...

பார்த்த நியாபகம் இருக்கு... Sir...

அப்புறம் கதிர் ஏதாச்சும் சாப்புடறீங்களா??... என்றார் ஜனார்த்தனன்..

இல்ல Sir இருக்கட்டும்.,.
இப்போ தான்.. இவன் வீட்ல சாப்டு கிளம்புனோம்...

பரஸ்பரம் பேசுவதற்கு எதுவும் இல்லாததால்....
சிறிய அமைதி நிலவியது...

தங்கம் விலை இறங்குமா?? Sir என்று அந்த அமைதியை உடைத்தான் செந்தில்...

பிறகு விலைவாசி, பொருளாதாரம் அரசியல், பங்குசந்தை என அனைத்தும் வரிசையாக அலசி ஆராயப்பட்டது...

அவ்வப்போது மௌனம் கலைந்து..
ஆமாம், இல்லை என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பேசி தவித்த கதிர்...

அரைமணி நேரம் கழித்து Watch -ஐ பார்த்தவன் ....
அப்புறம் Sir... Time ஆகிடுச்சு...
நாங்க கிளம்புறோம் என்றான்..

சரிப்பா அப்பாகிட்ட எல்லாம் பேசி இருக்கேன்...

பாப்போம் பிராப்தம் இருந்தா... எல்லாம் நல்லதா நடக்கும்...

சரிங்க Sir.... வறோம்.. என்று விடைபெற்று.... வெளியேறினான்...

வெளியே வந்ததும்.....
என்ன...டா  என்னமோ பண்ண போறேன்னு சொன்ன... உலகத்துலயே நீதான் நல்ல புள்ள மாதிரி... அமைதியின் சொரூபம் மாதிரி... உக்காந்துட்டு இருந்த...

என்னடா செய்யிறது...
ஜனார்த்தனன் sir பேச்சும்.. கண்ணியமும்... என்ன எதுவுமே பேச விடல..டா..

அந்த மூர்த்தி Sir வேற அப்பாவுக்கு நல்ல பழக்கம் டா.. நான் ஏதாச்சும் செய்ய போய்... அப்பா முகத்த பாக்க முடியாம ஆகிடும்..அதான்

அப்போ உன் மாமனார உனக்கு பிடிச்சு போய்டுச்சு.....

பொண்ணும் கூடிய சீக்கிரம் பிடிச்சிடும்..கதிர்.

டேய் சும்மா இரு..டா
அங்க அநாகரிகமா நடந்துக்குறது எனக்கு பிடிக்கல...

அதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பேனா!!....

லேசாக சிரித்த செந்தில்...
ஆத்துல போற பூவோட பயணத்த ஆறு தீர்மானிக்குமா... பூ தீர்மானிக்குமா??...அந்த மாதிரி...

காலைல வரைக்கும் ... உன் கல்யாணத்த பத்தி யோசிக்கவே இல்ல ....திடீர்னு உங்க அப்பா ஏற்பாடு பண்ணி.. இவர போய் பாக்க சொன்னாரு

சரி னு ஒத்துகிட்டே...என்னமோ பண்ண போறேன்னு சொன்ன.. பொட்டிப் பாம்பா.... அமைதியா இருந்துட்ட..

இப்படி உனக்கே தெரியாம... நீ எல்லா விஷயத்துக்கும் ஓகே சொல்ல போற பாரு...

என்ன மீறி எதுவும் நடக்காதுடா...

பாக்க தானே போறேன்... சரி வாடா வெளிய எங்காச்சும் போலாம்...

நான் வரலடா.. மனசு சரியில்லை.. வீட்டுக்கு போறேன்...டா செந்தில்...

சரி...டா

-------------------------------

அம்மா சாதம் பரிமாற...

அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்...கதிர்

சாதம் இன்னும் கொஞ்சம் போடுமா அவனுக்கு...என்றார் அப்பா.

அதெல்லாம் வேண்டாம்.. போதும் என்றான் வேகமாக..

ஏன்??டா கோவமா!!!...

ஒண்ணும் இல்ல ப்பா..

ஜனார்த்தனன் பேசுனாருப்பா... ரொம்ப நல்லபடியா மரியாதையா நடந்துகிட்டியாம்... கூப்டதும் கெளரவம் பாக்காம வந்ததுல ரொம்ப சந்தோசபட்டாரு...ப்பா...

ஊருக்கு போய் நல்ல நாள் பார்த்து...

அப்பா...என் கல்யாணத்துக்கு ஏன்?? இவ்ளோ அவசரம்..காட்றிங்க....

உனக்கு கல்யாணம் வயசு தாண்டா ஆகுது...
இதுல என்னடா அவசரத்த கண்ட...

நாமளா போகல..டா...
தானா தேடி வந்து இருக்கு...

அவர போய் பாத்ததோட இருக்கட்டும்...

தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம் எனக்கு..

நல்ல இடம்.. ப்பா அது...

என்ன ஏன்?? இப்டி வற்புறுத்துறீங்க...

பொரியலை கொஞ்சம் வைத்தவள்.. டேய் யாரும் உன்ன..வற்புறுத்தலடா...
ஏன் இவ்ளோ கோவப்படற...

அவருகிட்ட இருந்து தகவல் வரட்டும்.... நாம போய் பாக்கும்போது உனக்கு பிடிச்சா தான்...
அடுத்த பேச்சு வார்த்தை.. புரியுதா?...
நீ ஒண்ணும் யோசிக்காத விடு...என்றாள் லட்சுமி அம்மா..

இப்போ இப்டி சொல்லிட்டு அப்புறம் என்ன எதுவும் Corner பண்ண கூடாது.. சரியா...

பிடிக்கலைன்னா பிடிக்கலனு சொல்லிடுவேன்..

அண்ணா நீ பிடிக்கலனு...
சொல்லவே மாட்ட...
பார்க்க அவ்ளோ அழகா இருக்காங்களாம்...

நீ பாத்தியா??.. நான் பாக்கல..
அப்பா தான் பாத்து இருக்காரு....

அவளை முறைத்தபடியே எழுந்து..
கை கழுவி விட்டு... ஹாலில் சோபா வில் அமர்ந்து TV யில் Remote எடுத்து சேனல் மாற்றி கொண்டே இருந்தான்...

மெதுவாக..
அண்ணா எதாச்சும் Lock ஆகிட்டியா...

என்னது???

லவ் பன்றியா??

ஹேய் வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு.. அடிக்க போறேன்.. பாரு..

பின்ன அப்பா அவ்ளோ சொல்றாரு... நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணிக்கிறியே...

நல்ல இடம் அழகான பொண்ணுனு சொல்றாங்க வேற என்ன வேணும் உனக்கு...

இப்ப நீ உதை வாங்க போற பாரு என்று விளையாட்டாக கை ஓங்க..

TV திரையில் முல்லை💞யை பார்த்து சேனல் மாற்றுவதை நிறுத்தினான்...

உற்சாக பூவாய் சிரித்தபடி அனைவருக்கும் வணக்கம்...
மீண்டும் இந்த நிகழ்ச்சியில் உங்களை காண்பது மகிழ்ச்சி.... இன்றைய நிகழ்ச்சியில் நாம் பேச இருப்பது.... ஓவியர் திரு ஜெயராமன் என்றதும்... கேமரா அவர் பக்கம் திரும்பியது....

ஹேய்!! அண்ணா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம..அங்க என்ன பாக்குற...Remote-ஐ அவனிடம் இருந்து பிடுங்கி  TV-யை Off செய்தாள்...

ஆத்திரமான கதிர் மீண்டும் அவளிடம் இருந்து வாங்கி..டிவியை On செய்து..

ஹேய்!!! அறிவில்ல பாத்துட்டு தானே இருக்கேன்.. என்றான்..

திரும்பி திரையை பார்த்தவள்... Ohh நீயும் முல்லை 💞Fan ஆகிட்டியா???

என்ன?? சொல்ற..

இன்னைக்கு சின்ன திரைல
ரொம்ப பாப்புலர்
இந்த முல்லை💞 தான்...

ரசிகர் மன்றம் தான் வைக்கல...
Election la மட்டும் முல்ல💞 நின்னா கண்டிப்பா ஜெயிப்பா....

தங்கையை ஒரு முறை பார்த்து... திரும்ப TV யில் முல்லை💞யை பார்த்து கொண்டே...
அவங்க அப்டி என்ன ஸ்பெஷல்..

நானும் அம்மா வும் ஒரே டீ தான் போடறோம்.... அம்மா போட்டா மட்டும் ரசிச்சி குடிப்ப.. நான் போட்டா முகம் சுளிக்கிறல ஏன்??

அதே பால்..அதே தூள்..அதே சர்க்கரை ஆனா..வித்யாசம்
அந்த பொருள Mix பண்ற விதம்.... அதுதான்..

முல்லை💞கிட்ட அழகு...திறமை பண்பு..மூணுமே சரியான அளவுல இருக்கு...

நீ முல்ல💞 Program எதையும் பாத்தது இல்லையா???

இல்ல...

அப்போ பாரு... நான் Disturb பண்ணல... என்று நகர்ந்தாள்...

சோபா வில் அமர்ந்தபடி... தலையணையை மடியில் கிடத்தி ஆர்வமாக நிகழ்ச்சியை பார்க்கலானான்...

கார சாரமான கேள்வியை புன்னகை மாறாமல் பக்குவமாக கேட்டு...
ஈகோ வை பூசி கொள்ளாமல்.. பதில்களை உற்சாகமாக ஆமோதித்து... சரிதான்..

ஆனா சில பேர் இப்டி நினைக்கிறாங்களே..
என்ற எதிர் கருத்தை மென்மையான கேள்வியாக்கிய சாமர்த்தியம் அவனை மிகவும் கவர்ந்தது..

இதையெல்லாம் விட... எந்த வித அலட்டலுமில்லாத Body Language எனப்படும் உடல் மொழியும்... இறுதிவரை உதடுகளில் அமர்ந்த புன்னகையும்...

கதிருக்கு ஒரு வித ரசவாதத்தை நிகழ்த்தி கொண்டு இருந்தது....

அந்த நிகழ்ச்சி முடிந்து அவள் வணக்கம் சொல்லி விடை பெற்ற போது..இவனுக்காகவே அந்த வணக்கம்.. புன்னகையும் செய்யப்பட்டதாக உணர்ந்தான்...

காலையில் அலுவலகத்தில் திடீரென்று பேச்சை முடித்து கொண்டு அவள் புறப்பட்டு சென்றதும் ஏற்பட்ட ஏமாற்றத்தை விட... இப்பொழுது 2 மடங்கு ஏமாற்றத்தை அடைந்தான்....

தன் அறைக்கு வந்தவன் கண்ணாடியில் தன்னையே பார்த்து புன்னகைத்து கொண்டான்...

காலையில் நடந்தவற்றை மறுபடியும் அசைப்போட்டபடி இருந்தான்....

அவளின் புருவங்கள்...
வலது நெற்றியில் ஓரத்தில் எப்போதோ அடிபட்ட தழும்பு....
தலையசைப்பில் நடனமாடும் காதணிகள்....
உதடுகள் விரியும் போது
அகலமாகும் கன்னங்கள்...
கழுத்தில் ஊஞ்சலாடும் இதய வடிவ செயின்.. என்று நுணுக்கமாக யோசிக்கையில்.. கதவு தட்ட படும் ஓசை கேட்டு கலைந்தான்...

கதவை திறக்க..காயத்ரி இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து சரியான அழுத்த காரன் அண்ணா நீ... என்றாள்...

முல்லை💞ய பத்தி அவ்ளோ பேசினப்போ...காலையில அவ உன்னை Meet பண்ணதா சொன்னியா.... என்கிட்ட.

ஹேய்!!அது எப்படி?? உனக்கு...

முல்லை💞 Phone பண்ணி இருக்காங்க ....
Line ல தான் இருக்காங்க ...
போய் பேசு..

நம்ப முடியாத ஆச்சரியத்துடன்... ஹாலில் Charge போட்டு வைத்த மொபைலை எடுத்தான்....

Phone எடுத்து காதில் வைக்கும் முன்பாக Time பார்த்தான்...11:15...

இந்த நேரத்துல..யா??.. என்ற குழப்பதுடன்...
ஹலோ!! கதிர் பேசுறேன்... என்றான்.

                                        தொடரும் 💞...

💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜

Ga verder met lezen

Dit interesseert je vast

130K 8.9K 79
I have been thinking about this plot quite a long time. Today decided to go with it This story depict the initial stages of KM relationship and conti...
105K 7.8K 50
So what goes here in this story??? Well, As expected its the love story of Kathir and Mullai... Is it a normal love story?? No definitly not... No l...
868K 86.4K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...