எனக்காகவே பிறந்தவள்

Af SindhuMohan

21.7K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை Mere

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 7
எனக்காக 8
எனக்காக 9
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

எனக்காக 10

337 12 1
Af SindhuMohan

மாமா பக்கத்துல இல்லாததால உங்களுக்கு பயம் விட்டு போச்சு அக்கா, எப்போ பாரு ஆன்ட்டி கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க ,பொறுங்க மாமா வந்துன்ன அவர்கிட்ட சொல்லி கொடுக்கிறேன்😾 என்று ஆபீஸ் விட்டு வந்தவள் பானு மற்றும் லலிதாவின் வாக்குவாதம் காதில் விழ பானுவிடம் மேற்கூறியது போல வம்பிழுத்தாள் மீரா.

அய்யோ பயந்துடேன் பா😧...
போட்டுக்கொடுக்குற மூஞ்சிய பாரு, அவரு இங்க வந்தாலே அவர் கிளம்பர வர வீட்டு பக்கம் எட்டிபார்க்காத ஆளு நீ, நீ எல்லாம் பேசரதுக்கே லாயிக்கிலை.

ஹி ஹி ஹி😬😬 அது எல்லாம் ஒரு மரியாதை தான்...

மண்ணாங்கட்டி...

சரி சரி போய் வேலைய பாருங்க சிஸ்டர், நானும் போய்...

என்ன கொரியன் சீரியல் பார்க்கணும் அதானே ??

க க க போ😋...

சரி வா டீ குடிச்சிட்டு போலாம்..

இல்லைக்கா , போய் மொதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு தான் சாப்பிடற வேலை எல்லாம்...

ஓகே ஓகே...

Bye க்கா.... Bye da செல்லம்👋...
என்று பானுவிடமும் அவள் வயிற்றிலிருக்கும் அவள் பிள்ளையிடமும் விடைபெற்றுக்கொண்டு படிகளில் ஏறினாள் மீரா.

இதே நேரம் தன் பைக்கை நிறுத்திவிட்டு வந்த கௌசிக்கிற்க்கு இவர்களது சம்பாஷனைகள் காதில் விழ மீராவிடம் பேசவேண்டும் என்று எண்ணியவன் அவள் சென்றுவிடப் போகிறாளோ என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான்.

மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தவள் தன் பின்னால் நடை சத்தம் கேட்க திரும்பியவள் கௌசிக்கை கண்டவுடன் அகல புன்னகையை😊 அவனுக்கு அளித்தாள்.

எப்படி அவளைக் கூப்பிட்டு பேசுவது என்று தடுமாற்றத்தில் இருந்த கௌசிக்கிர்க்கு பெரும் அறுதலாகி போனது அவளது புன்னகை.

ஹாய்🙂 என்ற சொல்லை அவளது புன்னகைக்கு பதில் ஆக்கினான்.

ஹாய்.... நீங்க தான் third floor க்கு புதுசா வந்திருக்கீங்களா? என்று படிகளில் எறிக்கொண்டே கேட்க,
ஆமாம் என்று அவளை இரண்டு படிகள் விட்டு தொடர்ந்த கௌசிக்கின் பதில் சென்று சேர்ந்தது.

நினைச்சேன், நான் மீரா, உங்க வீட்டுக்கு எதிர் வீடு தான்.. நீங்க வந்து எவ்ளோ நாள் ஆச்சு பாருங்க நம்ம இப்போ தான் மீட் பண்றோம் .... நான் ஒரு intro கொடுக்கணும்னு நினைப்பேன் ஆனா உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு விட்டுட்டேன் என்று அவனிடம் சொன்னவள் மனதில் ரகுராமும் லலித்தவும் அவளிடம் கூறியது நினைவில் வந்தது.

ஓஹ்...

ம்ம்...நீங்க???

அம்..அது....எஸ்.. நானும் தான்... பேசணும்னு நினைச்சேன்... என்று அவன் திணற

ஹ ஹ ஹ... நான் உங்க பேர் எண்ணனுனு தெரிஞ்சுக்க கேட்டேன்?

டேய் கௌசிக் மடையா 🤦 என்னடா ஆச்சு உனக்கு? என்று தன்னை தானே நொந்தவன் ...

ஒஹ்... ஐ ஆம் கௌசிக்....

எத்தனையோ பெரிய பெரிய மனுஷங்க கூட எல்லாம் சரளமாக பேசுபவன் ஏனோ இந்த பெண்ணிடம் தான் பேச திணறுவதை நினைத்து அதிர்ச்சி கொண்டான்.

எங்க வொர்க் பண்றீங்க?

அவன் பதில் அளிக்க , அவள் தான் வேலை செய்யும் நிறுவனத்தை பற்றி அவன் கேட்காமலேயே கூறினாள்.

அவன் வெறும் தலையசைப்போடு அதனை கேட்டுக்கொண்டான்..

ம்ம் ..நீங்க மட்டும் தான் இங்க இருக்கீங்களா ? உங்க ஃபேமிலி எல்லாம் எப்போ வருவாங்க???

எனக்கு அப்படி யாரும் இல்லை ... நான் மட்டும் தான் இங்க இருப்பேன்...

என்ன தான் மனதை திடமாக வைத்திருந்தாலும் தனக்கு யாரும் இல்லை என்ற பொழுது அவனது குரல் தழுதழுத்தது.

அதனை கேட்டவள் சட்டென்று நின்று விட ...

அவளை நிமிர்ந்து என்ன ? என்பது போல பார்த்தான்.

மண்ணிச்சிருங்க கௌசிக் சார்😟... I am so sorry 😒.. நான் இப்படி கேட்டிருக்க கூடாது... Sorry..என்று அவனிடம் அவள் கேட்ட பொழுது அவளது முகத்தில் தெரிந்த பதற்றம் ,கவலை , பயம் என்ற உணர்வுகளை கண்டவன் முகம் மென்மையாக...

அதனால் தோன்றிய சிறு புன்னகையோடு😇 அவளை பார்த்தவன் ... இட்ஸ் ஓகே மீரா.. என்றான் இயல்பாக..

இன்னும் அவள் முகம் தெளிவாகாமல் இருக்க..

இதுல ஒன்னும் தப்பில்லை... தெரிஞ்சுக்க தானே கேட்டீங்க ... அதுக்கு போய் எதுக்கு மன்னிப்பு எல்லாம்.. இட்ஸ் ரியலி ஓகே...

ஹ்ம்ம்... என்று விட்டு அவள் படியேற ..
அவளது மௌனம் அவனை எதோ செய்தது...

நீங்க உங்க ஃபேமிலி கூட தான் இருக்கீங்களா ? என்று அவன் தனக்கு அவளை பற்றி நன்கு அறிந்த செய்தியை அவளை பேச வைய்க்கும் பொருட்டு கேட்க...

அந்த கேள்வியில் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது... எனக்கும் உங்களை மாதிரி தான் அப்பா அம்மா இல்லை... ஆனா சித்தி சித்தப்பா இருக்காங்க...அவங்க தான் என்னை வளர்த்தி படிக்க வெச்சாங்க... அப்பறம் ரெண்டு வாலு தங்கைகள் இருக்காங்க.. அவங்க தான் என்னோட ஃபேமிலி..

அங்க தங்கச்சிங்க ஸ்கூல் , சித்தப்பா சித்தி வேலை எல்லாம் ஊர்ல தான் இருக்கிறனால நான் மட்டும் தான் இங்க இருக்கேன்...ரகுராம் uncle சித்தப்பாவின் நண்பர்... அதனால் தான் இங்க எனக்கு வேலை கிடைச்சுன்ன தைரியமா இங்க இருக்க விட்ருக்காங்க...

கௌஸிகிர்க்கும் வந்த நாள் அன்று ரகுராமின் மிரட்டல்கள் நியபகம் வந்தது.

பேசிக்கொண்டே ஏறியவர்கள் தங்களின் வீட்டுக்கு வந்துவிட...

பை ..கௌசிக் சார்.. நாளைக்கு பார்க்கலாம்... என்று மீரா செல்ல எத்தனித்தாள்.

ம்ம்...மீரா..

சொல்லுங்க கௌசிக் சார்?

அது உங்க மொபைல் ஆன் ஆகியதா?

ஓ... அது விழுந்த அதிர்ச்சியில் மயக்கம் போட்டுறுச்சு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த உடனே முளிச்சுகிச்சு..ஹி ஹி...

ஓஹோ... அம்... பைன்..

அது கீழ விழுகறதும் மயக்கம் போடறதும் சாதாரணம்💁... என்ன ஒரு வாரம் முன்ன தான் டெம்பர் கிளாஸ் போட்டேன் அதான் அது உடைஞ்சுன்ன மனசுக்கு கஷ்டமாயிருச்சு🥺..

அடிக்கடி விழறது வழக்கமா🙄...? அவளது பொறுப்பு தன்மையை அறிந்து கொண்டவன்🙎...

அப்போ சரி... ம்ம்.. ஓகே பை மிஸ் மீரா...

அச்சோ மிஸ் எல்லாம் வேணாம் கௌசிக் சார்... வெறும் மீரானே கூப்பிடுங்க...

ஓகே.. நீங்களும் சார் வேண்டாம்🥳... ஜஸ்ட் கால் மீ கௌசிக்.. தட்ஸ் பைன்...

ஓகே கௌசிக் ☺️.

வீட்டிற்கு வந்துவிட்ட இருவரின் எண்ணங்களிலும் அடுத்தவரின் நினைவுகளே உழன்றது.

ஒரு நாள் இவளிடம் பேசுவதற்கே இவ்வளவு சிரமமாக இருக்கிறது... இவளிடம் எப்படி பழகி எப்படி இவளை பற்றி தெரிந்து கொள்ளுவது... முடியாது என்று திடமாக நின்றிருக்க வேண்டுமோ... என்பது போன்ற எண்ணங்கள் கௌஸிக்கின் மனதில் வலம் வர ஆரம்பித்தது.

எத்தனையோ விஷயங்களை சர்வ சாதரணமாக சாதிப்பவன் ஒரு சிறு பெண்ணின் சினேகிதற்திர்க்காக கலங்கி நிற்கிறான்... இவன் இப்படி என்றால் நம் மீரா!!?

எப்படி மீரா?...

எப்படி டீ... எப்படி உன்னால ஒருத்தங்க கிட்ட அதும் இன்னிக்கு தான் பார்த்த ஒருத்தங்க கிட்ட இப்படி பேச முடிஞ்சுது..?பேச மட்டுமா?? அவன் முன்னாடி அழுது அல்லவா தொலஞ்ச..

இது எப்படி நடந்துச்சு?

நான் இப்படி பேசுபவள் இல்லயே... அப்படி இருந்திருந்தா இந்நேரம் ராகுல் கூட பேசியிருக்களாமே?

மே பி.. நான் இப்போ இம்ப்ரூவ் ஆகிட்டேன்னு நினைக்கிறேன்...
எஸ்... வெரி குட் மீரா!!..

வசுந்தரா அக்காட்ட மொதல்ல இத சொல்லணும்...அவங்க தான் மொதல்ல பயப்படாம எல்லார் கிட்டையும் பேச சொல்லுவாங்க...

இத இன்னும் இம்ப்ரூவ் பண்ண ராகுல் கிட்ட கூட பேச முடியும்... வாவ்... சூப்பர் ல ஜி சங் உப்பா (கொரியன் ஹீரோ)..

உப்பா நான் இன்னிக்கு கௌசிக்ன்னு ஒரு பையனா மீட் பண்ணினேன்... ஏதிர்த்த வீட்டுக்கு தான் வந்திருக்கார்... நல்ல பையன்... அவருக்கு யாருமே இல்லையாம்... பாவம் ல... பட் இனி அவர் நம்ம ப்ரெண்ட்டாக மாத்திடலாம்.. ஓகே யா??

என்று சுவற்றில் மாட்டியிருந்த அவளது ஹீரோவிடம் பேசிக்கொண்டாள்.

அம்பிகா பாட்டி இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளானை போட்டால் இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்களே ? ம்.. போக போக பார்க்கலாம்.

Hai friends.. padichu paarthitu vote pannunga pa.. and comment pannunga..
Thank you...













Fortsæt med at læse

You'll Also Like

328K 9.5K 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சம...
84K 4.6K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
134K 3.5K 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே க...
20.6K 861 57
💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்...