எனக்காகவே பிறந்தவள்

By SindhuMohan

21.8K 636 245

ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை More

எனக்காக 1
எனக்காக 2
எனக்காக 3
எனக்காக 4
Another Story..
எனக்காக 5
எனக்காக 6
எனக்காக 8
எனக்காக 9
எனக்காக 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
Your Opinion???
அத்தியாயம் 55
அத்தியாயம் 56

எனக்காக 7

416 16 5
By SindhuMohan

கௌசிக் கோவை வந்து சேர்ந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

அன்று அவர்களது உரையாடலுக்குப் பிறகு அங்கு கம்பனிகளில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு எல்லா பொறுப்புகளையும் கேசவன் மற்றும் அர்ஜுன் அவர்களிடம் பார்க்க சொல்லிவிட்டு பதினைந்து நாட்களில் அங்கிருந்து கோயம்புத்தூர் கிளம்பினான் நம் கௌசிக்.

அவன் இங்கு வருவதற்குள் அந்த வீட்டை தன் பெயரில் அல்லாது தான்வியின் பெயரிலேயே வாங்க சொல்ல பாட்டியும் அவனை மறுத்து பேசவில்லை, அவருக்கு அவன் அங்கு செல்லவதே பெரிது என்ற எண்ணத்தில்.

ஏர்போர்ட்டிலேயே விஷ்ணு (அகியின் நண்பன்) கௌசிக்கை வரவேற்க வந்து விட்டான்.

அவனது கண்கள் கௌஸிக்கை ஆர்வத்தோடும் பிரமிப்பு பார்த்துக்கொண்டிருந்தது. அவனும் அகியும் காலேஜ் மேட்ஸ். அகி கௌசிக்கின் திறமை பற்றி இவனிடம் சொல்ல சொல்ல இவனுக்கு கௌசிக் ஒரு ஹீரோ போலவே மாறிவிட்டான்.

அகிலன் விஷ்ணுவின் கம்பனியில் கௌஸிக்கிர்க்கு வேலை வேண்டும் என்று சொன்னவுடன் அப்படி ஒரு சந்தோஷத்துடன் தலை அசைத்தான், இதோ இன்று ஏர்போர்ட்டில் ஒருமணி நேரத்திற்கு முன்பே வந்து அவனை அழைத்துகொண்டு செல்கிறான்.

காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது தனது அருகில் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தவனை இவர் ஏதும் தன்னிடம் பேசமாட்டரா? என்று ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

மொபைலில் இருந்து நிமிர்ந்த கௌசிக்,

மிஸ்டர். விஷ்ணு..

சொல்லுங்க அண்ணா..? ம்ம் அண்ணானு கூப்பிடவா? என்று தயங்கிக்கொண்டே கேட்க, முகத்தில் சிறு புன்னகையுடன் தலை அசைத்தான்.

ஆனா ஆபீஸ்ல என்னை கௌசிக்கென்றே கூப்பிடுங்க.

பரவாயில்ல அண்ணா, நான் அண்ணனே...

நோப், ஆபீஸ்ல நீங்க MD.. அதனால் இடத்திற்கு தகுந்தாற்போல நமது பேச்சும் இருப்பதே சரி என்று கண்டிப்புடன் சொல்ல..இவன் தலை வேகமாய் அசைந்தது.

பின்னர் கௌசிக் தொழில் விஷயமாய் நிறைய கேள்விகள் கேட்க பதில் சொல்லியவன் ஒரு சின்ன விஷயத்தை கூட எவ்வளவு கூர்மையாய் கேட்கிறார் என்ற பிரமிப்பு அதிகமாகியது.

பேசியபடி வர கௌஸிக்கின் விநாயகா அபார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

இவனுடைய வீட்டு பொருட்கள் எல்லாம் நேற்றே இங்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆதலால் கையில் ஒரு சின்ன பிரீப்கேசுடன் இறங்கியவன் விஷ்ணுவிற்கு விடை கொடுத்துவிட்டு அபார்ட்மெண்டில் நுழைந்தான்.

விசாரித்த வாட்ச்மேனிடம் தான் யார் என்பதை தெரிவித்துவிட்டு உள்ளே சென்றவனுக்கு சாவி கீழ் பிளாட்டில் குடியிருக்கும் செகரட்ரியிடம் இருப்பதை பற்றி அகிலன் சொன்னது நினைவில் வர

அங்கே கிரவுண்ட் புளோரில் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி இருந்த தன் ராயல் என்ஃபீல்டு மற்றும் தனது காரான ஹூண்டாய் Aura வை சேதாரம் இல்லாமல் சேர்த்து இருக்கிறார்களா? என்று பார்வை இட்டவன் மீண்டும் அவற்றை மூடிவைத்து விட்டு ஃபர்ஸ்ட் புளோருக்குச் சென்றான்..

அங்கே எதிர்க்க எதிர்க்க இருந்த இரண்டு வீடுகளில் இவன் பார்க்கவேண்டிய நபர் எதில் இருப்பார் என்பது அறியாததால் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினான்.

ஒரு நிமிட காத்திருப்பிற்கு பின் திறக்கப்பட்ட கதவிற்கு பின் ஒரு இளம் பெண்ணின் முகம் எட்டிப்பார்த்தது.

இங்க ரகுராம் சார் வீடு ??

இவன் கேட்டது அவள் காதிலே விழவே இல்லாமல் இவனை பார்த்தவுடன் முழு கதவையும் திறந்து விட்டு கண்கள் விரிய இவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

கௌஷிக்கிற்கு இது எல்லாம் சகஜமே... என்றுமே இவனை பார்த்தவுடன் வழியும் பெண்களில் இவளும் ஒருத்தி.. 20 அல்லது 21 வயதிற்கு மேல் இருக்கும், எங்கயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்திருப்பாள் போல ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட்டுடனும் ஒப்பனை முகத்துடனும் காணப்பட்டாள், ஒப்பனை இல்லாமல் இருந்திருந்தால் இயற்கை அழகில் அழகாய் இருந்திருப்பாள்.

இவன் அவளது முகத்திற்கு நேராக சொடக்கிட அதில் தெளிந்தவள்
எஸ் சொல்லுங்க சார்?

இது ரகுராம் சார் வீடு தானே?

இல்லை எதிர்த்த வீடு .

நன்றி.

ம்ம்... ஐ ஏம் மிதிலா.

ஓஹ்.. என்றவன் திரும்பி நாலு எட்டில் இருந்த எதிர்த்த வீட்டு காலிங் பெல்லை அமுக்கினான்.

யுவர் நேம்?

அவளை திரும்பி அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் முன்னாடி கதவு திறந்தவுடன் தன் பார்வையை அங்கே மாற்றினான்.

அங்கேயும் ஒரு இளம் பெண்னே கதவை திறந்தாள்.. ஆனால் வகிட்டில் குங்குமத்தோடும், மேடிட்ட வயிற்றோடும்.. தாய்மையின் பூர்ப்பு அவளது முகத்திற்கு மிக்க அழகை சேர்த்திருந்தது.

யாருங்க?

ரகுராம் சார்?

இருக்காரு! நீங்க?

நான் மேல் வீட்டுக்கு வந்திருக்கேன்..சாவி சார் கிட்ட இருக்குன்னு சொன்னாங்க..

ஒஹ்..நீங்களா...வாங்க சார்.. அப்பா உள்ள தான் இருக்காரு, என்றவள் கதவை நன்கு திறந்து அவன் உள்ளே வர வழி விட்டாள்.

அப்பா ,மேல் வீட்டுக்காரங்க வந்திருக்காரு...

வரேன்மா வரேன்மா..

அதற்குள் அப்பெண் கதவை மூட சென்றவள் இன்னும் தன் வீட்டு வாசலில் நின்று இவர்கள் வீட்டையே பார்த்து கொண்டு நின்றிருந்த மிதிலாவை பார்த்தவள்

என்ன மித்திலா?

ஒன்னுமில்ல என்றவள் வீட்டிற்கு உள்ளே சென்று கதவை அடைத்தாள்.

இவளும் அவளை மாதிரியே பளித்துக்காட்டிக்கொண்டு கதவை அடைத்தாள்.

வாங்க , என்று கை குப்பி வணக்கம் தெரிவித்தபடி வந்தார் ரகுராம், 60 வயதிற்கு மேல் இருக்கும், நெற்றியில் விபூதி பூசி முண்டா பனியனோடு காட்சியளித்தார்.

வணக்கம் சார்.

உட்காருங்க தம்பி, பிரயாணம் எல்லாம் சௌக்கியமா இருந்ததா?

ம்ம்..என்று புன்னகை அளித்தவன் , வீட்டு சாவி..

இங்க தான் இருக்கு, லலி மா அந்த மேல் வீட்டு சாவிய எடுத்திட்டு வா டா.

உங்க பேரு பா?
நான் கௌசிக் சார்.

நீங்க மட்டும் தான் இப்போ வந்திருகீங்களா?

ஆமாங்க சார்.

வாங்க தம்பி ... என்று சொல்லிக்கொண்டே வந்தார் அந்த வீட்டின் தலைவி லலி என்கிற லலிதாம்பிகை.

இவங்க என் மனைவி லலிதா, அவங்க என் மகள் பானு,பிரசவத்துக்காக வந்திருக்காங்க.

மம், வணக்கம் ஆன்ட்டி..

வணக்கம் பா, இந்தாங்க வீட்டு சாவி...

நீயே தம்பிக்கிட்ட கொடு ..

இந்தாப்பா வாங்கிக்கோ...

நன்றி ஆன்ட்டி.

ப்ரோக்கர் சொன்னாரு மும்பைகாரங்கன்னு, மும்பை தானாப்பா சொந்த ஊரு?

இல்லைங்க சார், சொந்த ஊர் கோவை தான்...ஆனா அப்பா எல்லாம் மும்பைல செட்டில் ஆகிடாங்க.

நம்ம ஊரு தானா, பரவாலையே... வீட்ல எல்லாம் எப்போ வரான்க பா?

ம்ம்... யாரும் இல்லை நான் மட்டும் தான்.

நீங்க மட்டும் தானா? என்றவர் பார்வை தன் மகளையும் மனைவியையும் யோசனையுடன் பார்க்க, அவர்களது முகத்திலும் இவ்வளவு நேரம் இல்லாத ஒரு கவலையோ குழப்பமோ ஏதோ ஒன்று முகத்தில் தெரிந்தது.

ஓஹ் , உங்களோட எதிர்த்த வீட்ல கூட ஒரு பொண்ணு தான் தங்கியிருக்கா, அவளும் எங்க மக மாதிரி தான், ஏதேனும் ஒன்னுனா நாங்க பார்த்துப்போம்.. ஏன்னா வயசு பிள்ளை பாருங்க, அவங்க சித்தப்பாக்கு அதை தனியா விட இஷ்டம் இல்லை, அப்பறம் எங்களைய பார்த்திட்டு தான் எங்களைய நம்பி விட்டிருக்கார், நம்ம தான பார்த்துக்கணும் என்று புன்னகை சிந்தினார்.

அவர் கூற வருவது கௌஸிகிற்கு நன்கு புரிந்தது. ஏதிர்த்த வீட்டில் இருக்கும் பெண்ணிடம் தனியாக தான் இருக்கிறாள் என்று வாலாட்டி விடாதே , அவளுக்கு துணையாய் நாங்கள் இருக்கிறோம் என்று மிரட்டுவது நன்கு புரிந்தது, யாரோ ஒரு பெண்ணிற்காக இவர் இவ்வளவு தூரம் பேசுவது இவன் மனதில் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தந்தது.

கண்டிப்பா சார்..

சார் எல்லாம் வேண்டாம் , சும்மா அங்கிள்னே கூப்பிடு பா..

ம்ம்..

தம்பிக்கு வேலை எங்கே?

இங்க விஷ்ணு டெக்ஸ்டைல்ஸ்ல M.D க்கு P.A வ வேலை கிடைச்சிருக்கு.

கொஞ்சம் தூரம் தான்... வண்டி வெச்சிருக்கீங்க இல்லையா?

இருக்கு அங்கிள்,

அப்போ சரி, வீட்டை எல்லாம் ஒழுங்கு படுத்தனுமா?

ஆமாங்க.

ஏதேனும் உதவினா கேளுப்பா... பக்கத்துல அதுக்கு தான் நாங்க எல்லாம் இருக்கோம், கூச்சப்படாத.

கண்டிப்பாக அங்கிள், சரி நான் கிளம்பறேன்.

சரி பா...

வரேன் ஆண்ட்டி, வரேங்க .. என்று லலி யிடமும் பானுவிடமும் கை குப்பி வணக்கம் தெரிவித்தபடி அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டை ஒழுங்கு படுத்திவிட்டு, அடுத்த நாள் ஆபீஸ் செல்ல முதலிலேயே டெக்ஸ்டைல் தொழிலில் இருந்ததாலும் மற்றும் இங்கு ஒரே ஒரு கம்பெனி என்பதாலும் அதும் M.Dக்கு P.A என்பதாலும் வேலை பளு அவ்வளவாக இல்லை...

இருந்தாலும் விஷ்ணுவிற்கு படித்து முடித்தவுடன் இந்த கம்பெனியை ஆரம்பித்ததால் இன்னும் அதில் பல நுணுக்கங்கள் அறியாமல் இருந்தான்.. அதலால் கௌசிக் இங்கு வந்தது அவனுக்கு பெரும் பாக்கியம் கிட்டியது போல தோன்றியது.
எல்லா விஷயத்திலும் கௌஸிக்கின் முடிவையே அவன் எதிர்நோக்க முதலில் அதிகாரங்களில் தலை இட தயங்கிய கௌசிக் , விஷ்ணு தன் நிலையை சொல்ல அப்போதிருந்து அவனுக்கு P.A மட்டும் அல்லாது ஒரு குருவாகவும் மாறிப்போனான்....

எல்லாம் சரி ஒரு வாரம் சென்றுவிட்டது... எப்போது அவனின் அவளை பார்க்க போகிறான்...

Hai my dear friends... Vote panna maranthudaatheenga ....




Continue Reading

You'll Also Like

15.8K 549 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
23.7K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
131K 4.7K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...