20-திக் திக்

Start from the beginning
                                    

உடனே நடந்ததை சொல்ல ஆரம்பிக்கவும் இருவருக்குமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் "அப்பறமா?" என்று கேட்ட தாயிடம் "கொண்டு போயி ஒரு இடத்தில் விட்டாங்கம்மா அங்க நான் மட்டும் இல்லம்மா கிட்டதட்ட நூறு பொண்ணுங்களுக்கு மேலன்னு சொல்லலாம் எல்லாருமே என்ன மாதிரி அழுதுட்டே இருந்தாங்க சில பொண்ணுங்கல்லாம் ஸ்கூல் படிக்குற வயசு மா... ப்பா என்ன அழுகை என்ன சத்தம்" என்று கூறி விட்டு தலைலை பிடித்தூ கொண்டாள்.

"அப்பறமா எல்லாரையும் யாரு வெளிய விட்டாங்க"என்று சகி கேட்க்கவும் உடனே சத்தம் எல்லாம் குறைந்து சோகமாக மாறி "எல்லாரையும் விடவே இல்லக்கா வாகனத்துல வந்து கடத்தினது இரண்டு பேர் அப்பறமா ஒரு தடியன் வந்து மேல் பார்வை பார்த்தான். அதற்கு அப்பறமா இன்னுமொரு அழகான யங் போய் ஒருத்தன் வந்து பார்த்துட்டு வீடியோ கால் ஆன் பன்னி எங்கள காமிக்க ஆரம்பிச்சான். அப்பறமா என்னாச்சின்னு தெரியலை திடீர்ன்னு என்னையும் இன்னொரு கொஞ்சம் வயசானவங்களையும் அவங்க கை காட்டி எதேதோ பேசிக்கிட்டாங்க... அப்பறமா ஒரு பையன் வந்து என் கை கட்டயும் அந்த அக்கா கை கட்டயூம் அவிழ்த்து கார்ல ஏற்றினாங்க நாங்க இரண்டு பேரும் ஏறினதுமே ஒரு மாதிரி காட்டு பகுதில அந்த அக்காவ இறக்கி வி்ட்டாங்க. இன்னும் கொஞ்சம் தூரம் போயி என்ன இறக்கி விட்டாங்க. இறக்கி விட்றப்ப ஐந்து மணி இருக்கும் அப்பறமா எங்க இருக்கேன்னு மெப் பார்த்து தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கு நடந்தே வந்தேன்." என்று கூறியவளின் முகத்தில் திருப்தியே இல்லை

"நீ எதுக்கு ஒரு மாதிரா டல்லா இருக்க?" என்று சகி கேட்டதூம் "அடுத்த பொண்ணுங்கல்ல ரொம்ப சின்ன பொண்ணுங்க எல்லாம் இருந்தாங்க பாவம்க்கா அவங்க எல்லாரும் நான் ஸெல்பிஷ்ஷா என்ன விட்டா போதும்ன்னு வந்துட்டேன்."
"இத பார் சக்தி நீ பன்னது தான் சரி அங்க நீ எதாவது பேசி பிரச்சிணை பன்னி இருந்தா நீயும் அவங்க கூட சிக்கி இருப்ப அத விடு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு எல்லாம் சரியாகிறும்" என்று விட்டு நகர போன சகிதாவிடம் தயக்கத்தோடு "க்கா அங்க நடந்த எல்லாம் நான் வீடியோ எடுத்துட்டேன் க்கா இப்போ என்ன பன்றது?" என்று கேட்டதும் தான் தாமதம் பதற்றத்தோடும் கோவத்தோடும் "என்ன பன்னிட்டு வந்து இருக்க சக்தி நீ. உனக்கு மூளையே இல்லயா அய்யோ அந்த வீடியோவ டிலிட் பன்னு முதல்" என்று கத்தினாள் தேவகியும் சகிதா சொன்னதையே சொன்னாள்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now