19-இது என்ன மாயை

Start from the beginning
                                    

அதன் பின்பு வீடு செல்லும் வரை இருவருக்குள்ளும்  எந்த பேச்சு வார்த்தையும்  இருக்கவில்லை வீட்டுக்கு சென்றதுமே யாரிடமூம் எதுவும் பேசாது அறைக்குள் சென்று கொண்டாள் 

தங்கை வரும் வரை அறைக்கு வெளியே காத்திருந்தாள் சகி.  வந்ததும் கால் கை கழுகியதோடு உறங்கி விட்டு இரவு உணவுக்காக எழுந்து வந்த சக்தியை வீட்டில் இருந்த மற்ற இருவரும் கேள்விக்குறியோடு தான் பார்த்தார்கள்.

"என்னம்மா தட்டுல சாப்பாட வைக்காம இப்டி பார்க்குற...?" என்று நக்கலாக கேட்டதும் சட்டென்று இட்லியை தட்டில் வைத்து புன்னகைத்தாள் தேவகி "ம்மா     உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நம்ம சிவா சார் இருக்குல்ல" என்று கேட்டு தாயை ஆர்வமாக நோக்கினாள். சிவாவின் பெயரை கேட்டதும் மகளை விட ஆர்வமாக "ஆமா நம்ம சிவா தம்பியா?"

"ஹான் ம்மா அவர் தான் அவர நான் திரும்ப மீட் பன்னேன்ம்மா" என்ற தங்கையை உற்று நோக்கி விட்டு "யாரு சிவா சார்? தாராவோட அப்பாவா?" என்று கேட்டு விட்டு இன்னும் தங்கையிடம் பேச திருப்தி இல்லாதது போன்றே நின்றாள் "ஹான் அவரே தான். நான் போன இந்த கேம்ப்ல அவரும் எங்க கூட வந்தார்." என்று விட்டு அவளே "நம்ம வர்க் பன்ற ஹாஸ்பிடலோட ஓவ்னரே சிவா சார் தானாம் ம்மா"

"அடடே அந்த தம்பி தான் மாப்பிளைக்கும் போஸ்ஸா...?'
என்ற தேவகிக்கு சந்தோசமே
"எனக்கு புரியலை அந்த தாராவோட அப்பா தான் அஷ்வினோட போஸா?" என்று கேட்டாள் புரியாதவளாக

"ஆமா இதுல புரியாம இருக்க என்ன இருக்கு?"

"இல்ல அப்போ அஷ்வினோட போஸ் கல்யாணம் கட்டினவரா?" என்று கேட்டு வியந்தாள் சகி
"அது தான் புரியலையா....?" என்று நக்கலாக கேட்ட தங்கையிடம் "சரி அமேரிக்கா,ப்ரான்ஸ் அப்பறம் சைனா அங்கல்லாம் எப்டி ரொம்ப அழகா இருக்குமா...?" என்று அதற்குள் தேவகி கேட்கவும் "ம்மா நாங்க போனது எல்லாமே கொஞ்சம் சாதரண மனிஷர் வாழ்ற இடத்துக்கு ஸோ எனக்கு என்ன தோன்றுதுன்னா உலகத்துல எல்லா இடத்துலயும் நல்லவங்க கெட்டவங்க,பணக்காரங்க ஏழைங்க,அழகு அசிங்கம்ன்னு எல்லாரும் இருப்பாங்க எல்லாமும் இருக்கும்"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now