27. ஜொலித்த இரவு - 2

596 15 29
                                    

(ராஜின் இருண்ட இரவுக்கு கொஞ்சம் ஒளி சேர்க்க ஆசை. )

சில மாதங்களாய் தூசி திரட்டிக்கொண்டிருந்த கருப்பு பேண்டையும் வெள்ளை சட்டையையும் அலமாரியிலிருந்து வெளியில் எடுத்து வெயிலுக்குக் காட்டினேன். நீ சென்னைக்கு வந்ததன் காரணத்தை மறந்துவிட்டாயா என அந்த கருப்பு பேண்ட் கேட்டது. வொர்க் ஷாப் வேலை உடலை வருத்தியத்தால் என் கனவுகளை பற்றி யோசிக்கக்கூட சக்தியின்றி அவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டேன்.  நல்ல மனிதர்களின் உதவி கிட்டியது நான் செய்த புண்ணியமோ என் தாய் மஹாவின் பிராத்தனையோ, அவன் அறிவான்.

தண்ணி தெளித்து சட்டை பேண்ட்டை அயர்ன் செய்து அதைப் போட்டுக்கொண்டு அதிகாலையில் ஹோண்டா கம்பெனியின் வாசலில் வந்து நின்றேன். பின் இருபது நிமிடங்களில் மேனேஜர் ஆபீஸ் கதவின் முன் நின்றேன். உள்ளே நாற்பது வயதுடைய  ஓர் ஆண்  கால் மேல் கால் போட்டு  மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்தார்.  பெயர் கேட்டார். நான் ரிஸூம்(resume) fileஐ நீட்டியபோது வேண்டாமென கைக்காட்டினார். இப்படி தான் அமர்ந்திருப்பவர் நிற்பவனை எகத்தாளமாய் பார்ப்பாரோ? எனக்கு என்ன தெரியும். பல முறை அப்பிளை(apply) செய்தும் இண்டர்வியூ கிடைத்தது இந்த முதல் இடத்தில் தானே. வாயைப் பொத்திக்கொண்டு வேலைக் கிடைத்தால் போதும் என மண்டைக்குத் தோன்றியது.

ஆனால் என் எதிர்பார்ப்பை முறியடிக்கும் வண்ணம் அவர் நாற்காலியிருந்து எழுந்து மேசைக்கு முன்னாள் வந்து நின்றார்.

"முன்னாடி நிற்பது மேனேஜரா இருந்தாலும் ஹோண்டா கம்பெனி ஓனரா இருந்தாலும் கான்பிடண்ட்(confident) ஆ ஹேண்ட் ஷேக்(handshake) பண்ணனும்," என சொல்லி கையை நீட்டினார்.

உடனே  அவர் கையை வாங்கி குலுக்கினேன். "சாரி சார்."

"இது தப்பு இல்ல. அறியாமை." 

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. 

"ok. நாளைலேர்ந்து வேலைக்கு வா. ஒழுங்கா வேலைக்கு வரல, வேலைப் பார்க்கல நு சூபர்வைஸர்(supervisor) புகார் செஞ்சா வேலைய விட்டு தூக்கிடுவேன். எவ்வளவு லட்சியம் இருக்கோ அந்த அளவுக்கு கத்துக்கிட்டு வளரலாம். அத விட்டுட்டு அப்படியே காலத்தை உருட்டலாம், தப்பில்ல. ஆனா எதற்கு சம்பளம் தருகிறோமோ அந்த வேலை நடக்கனும். வெளிய செகிரிடரி (secretary) கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட்(appointment) லெட்டர் வாங்கிக்க. நாளைக்கு அவங்கள வந்து பாரு சூபர்வைஸரை காட்டுவாங்க."

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 26, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அழகியல்Where stories live. Discover now