09-தந்தையும் மகளும்

Start from the beginning
                                    

தாரா தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டதும் கைகளை நீட்டி அவளை தூக்கினான் அவளும் அவன் கைகளில் அமர்ந்து கொண்டு அவனை முத்தமிட்டு தள்ளினான் 

"என்ன தாரகி அப்பா மேல இப்டி பாசம் காமிக்கிற?"என்று கேட்டு விட்டு அவனும் அவளை முத்தமிட்டான்

"டேடி நாங்க சந்திரன் மாமாகிட்ட போயி விளையாடிட்டு  எங்கயாச்சும் போலாமா?" என்று கேட்டதும்

"ஓஹ் இந்த தடவை  நீங்களே சிலக்ட் பன்னுங்க எங்க போலாம்ன்னூ...." என்று கூறி மொபைலை கொடுத்ததும்

மொபைலில் எதேதோ செய்து எதேதோ பார்த்து விட்டு "காஷ்மீர் போலாமா டேடி" என்று கேட்டாள்

"நம்ம கன்ட்ரீடா அது வேண்டாம் பொரிங் போலாம்" என்று கூறியதும் அவளும் தலையாட்டி விட்டு  "அப்போ நீங்க ஸிலக்ட் பன்னுங்க டேடி நல்ல குளிரா இருக்கனும்" என்று ஓடர் இட்டால் தாரா "சரிடா கண்ணு" என்று மொபைலை நோண்டினான் கொஞ்சம் நேரத்தில் "கெனடா போலாமா தாரா?" என்று கேட்டான்

"வாவ் போலாம் டேடி அதோட நீங்க இதுவரை கெனடா போயிருக்கீங்களா....?" என்று கேட்டதும் ஒரு நொடி அவன் கண்களே கலங்க தான் செய்தது "நான் போனதே இல்லயே டேடி நாம கண்டிப்பா போலாம்" என்றதும் அவன் மனம் 'நீ வயிற்றூக்குள்ள இருக்கும் போதே போயிட்டா தாரா..' என்று சொல்லி கொண்டது

"ஆமாடா நானும் நீயும் போற முதல் பயணம் இது ஜாலியா போலாம் ஒகேவா....?" என்று சிரித்த முகமாக கேட்டதும் அவனை முத்தமிட்டு விட்டு "ஜாலி" என்று கத்தினாள் மகள் 

"அப்போ மூன்று டிக்கட் புக் பன்னிறட்டுமா" என்று சிரித்த முகமாக கேட்ட தந்தையை அதிர்ச்சியோடு நோக்கி "நானும் நீங்களும் இரண்டு பேர் தானே டேடி"என்று கேட்டதும் "அப்போ சக்தி வேண்டாமா நீங்க தானா சொன்னீங்க அவ உங்களுக்கு அம்மாவா வேண்டும்ன்னு ஸோ அவங்கள விட்டு போறது தப்புடா" என்றான் மகளுக்கு புரியும் படி "எனக்கு அவங்க வேண்டாம் டேடி என்ன வளர்த்தது நீங்க தானே எனக்கு நீங்க மட்டும் போதும் அவங்க எனக்கு எப்பவும் சக்தி அக்கா தான்" என்றாள் பெரியமனுஷியாட்டம்  மகள் பேசியதில் கொஞ்சம்  உண்மையும் இருக்க தான் செய்தது ஆனால் எப்பவும் தாரா தனியாக இருப்பது அவ்வளவு நல்லதில்லை இத்தனைக்கும்  அவள் பெண் பிள்ளை வேறு... நிச்சயம் பெண்துணை அவசியம் என்று யோசித்தவனது மனதினை படித்தவள் போன்றூ "டேடி எனக்கு சென்னை போனா  பத்மா அம்மா இருப்பாங்க அதோட அக்கா அங்க நம்ம வீட்டுக்கு அப்பப்போ வருவாங்கன்னு நினைக்குறேன் ஸோ அதுவே போதும் டேடி" என்றாள் தந்தையை கவலைபட விடாது

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now