06-தாராவுக்கு ட்ரீட்மென்ட்

Start from the beginning
                                    

அவனை ப்ரம்மிப்போடு பார்த்து கொண்டிருந்தவள் அவன் தன் அருகில் வந்து சொடக்கு போடும் வரை சுதாகரிக்கவில்லை என்பதே உண்மை... "போலாமா" என்று கேட்டதும் "நான் வரனுமா சார்?" என்று தயக்கத்தோடு கேட்டாள்...

"ஆமா நாம தாராவோட டாக்டர பார்க்க போறோம்  ஸோ நீங்க கண்டிப்பா இருக்கனும்...." என்று மரியாதையாக சொன்னதும் 'பெரிய ஆளு இவரு.... அவருக்கு தேவைன்னா மரியாதையா நீங்க வாங்க போங்கன்னு பேசுவார் இல்லைன்னா நீ வா போ....  திமிரு புடிச்சவன்' என்று வாய்க்குள் முனுமுனுத்து விட்டு ஹெலிகப்டரில் ஏறி கொண்டாள் கொஞ்சம் நேரத்திலே அது தரையினை தொட்டதும்  இறங்கி கொண்டாள். ஒரு வகை காட்டு பக்கமான ஊர் அது. அதற்குள் ஒரே ஒரு  பாலடைந்த வீடு தான் இருந்ததூ இவன் சொன்ன அந்த டாக்டர் வீடா இது? என்று தனக்குள்ளே கேட்டு கொண்டாள் பயத்தோடு அவள் நடந்து வருவதை கண்ட அவன் "என்ன மிஸ் சக்தி பயந்துட்டீங்க போல...?" என்று கேட்டு விட்டு புன்னகைத்தான். ஆனால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பயந்து கிடக்கும் சக்திக்கு அவன் புன்னகையில் எதோ வில்லங்கம் இருப்பதாக தோன்ற தான் செய்தது....
எதுவும் பேசாது தயங்கும் சக்தியின் கையை பற்றிய தாரா "அக்கா இது எங்க  சந்திரன் மாமா வீடு" என்று கூறி அவளுடன் ஒட்டி கொண்டாள் வீட்டுக்குள் சென்றதும் ஒரு முப்பத்தைந்து வயதினை ஒட்டிய ஒருவன் வந்து "ஹாய் டா..."என்று தாராவின் தந்தையை பார்த்து கூறி விட்டு தாராவினை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான்...  அவன் குழந்தையை முத்தமிட்டுவிட்டு சக்தியை நோக்கி "உட்காருங்க சிச்டர்" என்றான் உடனே தாராவினவ தந்தையும் "உட்காருங்க" என்று கூறி கதிரையை காட்டியதும் அமர்ந்து கொண்டாள் அவளுக்கு எதிர்பக்கம் தாராவின் தந்தை அமர்ந்ததும் தாரா அந்த சந்திரன் மாமாவின் கையிலிருந்து இறங்கி சக்தியின் மடியில் அமர்ந்து கொண்டாள்

"அப்பறம் தாரா தலை வலி நல்லமா...?" என்று கேட்ட சந்திரனும் எதிர் பக்கம் அமர்ந்து கொண்டான் தாரா தலையை ஆட்டி ஆட்டி "தலை வலியே வரலை மாமா" என்றாள் அவளது அந்த பதிலில் சக்திக்கு சந்தோசம் தான்..... அதை விட பல மடங்கு அவளை பெற்றவனுக்கு இருக்க தான் செய்தது

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now