05-கொடுத்த வாக்கு நிறைவேற்றல்

Start from the beginning
                                    

"பட் இந்த மாதிரி ஆயா வேலை பார்த்த உன்ன எப்டிடி ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க முடியும் "

"அக்கா இத பாரு அப்பா வாங்கின கடன் 7 லட்சம் அண்ணா வாங்கினது எட்டு லட்சம் அவங்க இரண்டு பேரோட கடன்ல இது வரை ஒரு பைசா நாங்க கொடுக்கலை. உன்னால முடிஞ்ச அளவு நான்கு வருஷமா இரண்டு கடனுக்கும் வட்டி கட்டிட்டு தான் இருக்க.... இந்த கடன நாம கொடுக்க இந்த ஜென்மத்துல ஒரு வழியும் நமக்கு கிடைக்காது பட் தாராவோட அப்பா அந்த பதினைந்து லட்சத்தையும் கட்றதாக சொல்லி இருக்கார்..." என்று விட்டு மூச்சி விட்டாள்

அதிர்ச்சியோடு "என்னடி சொல்ற பதினைந்து லட்சத்தையும் கொடுப்பாறாமா..?" என்று கேட்டதும் "அது மட்டுமில்ல நம்ம சொந்த வீட்ல நாம வாடைகைக்கு இருக்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு நீ சொல்வல்ல... அந்த கஷ்டமும் நீங்க போகுது அதையும் மீட்டி தருவதாக சொன்னார்...... உன் கல்யாணத்துக்கு  வேற பொறுப்புன்னு சொல்டார்...." என்று கூறி முடித்து சகியின் பதிலுக்கு காத்திருந்தாள்

"என்னடி சொல்ற சரி அவர் சொன்னார்ன்னு நம்பி நீயும் போயிட்ட  புத்திசாலித்தனமாக நீங்க இதுலாம் பன்னுங்க அப்மறமா வருவேன்னு சொல்லி இருக்கலாமே...."

உடனே கோவமடைந்த சக்தி "நான் இந்த பணத்துக்காக எல்லாம் வரலை நான் வந்தது வெறும் தாரா மேல்ல உள்ள அன்புக்காக தான்....  அந்த அன்ப நான் எதுவும் எதிர்பார்த்து காமிக்கலை சகி.... அதோட இந்த அன்புல நமக்கு ஒரு சில நல்லது நடக்குதுன்னு நினைச்சிட்டு  சந்தோசமாக இரு.... வீட்டுக்கு போனதும் அம்மாகிட்ட சொல்லு நான் பேச சொன்னேன்னு இப்போ வைக்கிறேன்" என்று விட்டு கட் செய்தவள் தாராவின் அறைக்கு சென்று தாராவினை தூக்கி வந்து தன் கட்டிலில் வைத்து விட்டு அவளை அணைத்து கொண்டு தானும் உறங்கினாள்.... பயணம் செய்த சோர்வில் தூக்கம் அவளை அரவணைத்து கொண்டது.... என்றும் போல் இன்றி தாராவும் நன்றாக உறங்கினாள்... அவள் அணைத்து உறங்கும் முதல் பெண் ஸ்பரிஷம்.... சக்தியுடையது அல்லவா.... அதனாலே அவள் சக்தியுடன் நன்றாக ஒட்டி கொண்டாள் 

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now