8 - பிரிந்தது உயிர்

113 14 3
                                    

எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என் நண்பன் எழவே இல்லை. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றேன். நான் அழைத்து வரும் போதே அவன் உயிர் பிரிந்து இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. இது பொய்யாக இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவரிடம் கதறினேன். அவரோ, என் நண்பன் மாரடைப்பால் இறந்ததாக கூறினார். இவ்வளவு சிறிய வயதில் மாரடைப்பு வருவது மிகவும் அரிதான ஒன்று. I am sorry என கூறினார்.

செய்வதறியாமல் திகைத்து நின்றேன். பின் முடிக்க வேண்டிய காரியங்களை நானே செய்து முடித்தேன். நண்பனாக அல்ல. ஒரு சகோதரன் போல. 30 வயது என்பது சாகக்கூடிய வயதே அல்ல. என் மனம் அப்பொழுதும் நம்ப மறுக்கிறது. உண்மைகளே அப்படித்தான். ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும்.

அந்த சோகத்தில் இருந்து சிறிது மீள ஒரு மாத காலம் தேவைப்பட்டது. அன்று என் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எனக்கு அரசாங்க வேலை உறுதி செய்யப்பட்டது.

எனக்கு படபடக்க ஆரம்பித்தது. நானும் என் நண்பனும் அன்று பேசியதுபோல எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் அவன் 100 வருடம் வாழ்வான் என நான் கூறினேன். அன்று இரவே இறந்து விட்டான். இதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது. அந்த கடற்கரைக்கு மீண்டும் செல்ல திட்டமிட்டேன்.

அங்கு சென்றேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி இப்படி ஒரு நிகழ்வு நடந்தது? அங்கேயே சிறிது நேரம் தங்கினேன். என் ஆருயிர் நண்பனின் நினைவலைகள் மூழ்கினேன். இரவு 10 மணி இருக்கும். இருவர் அங்கு வந்தனர். அந்த கடற்கரையில் அப்போது யாருமே இல்லை. அங்கே இருந்த மணலை தோண்ட ஆரம்பித்தனர்.

அதை படிக்க படிக்க என் அலைபேசி ஒலித்தது. ஆம். அவள் தான்.

ராம், நீ தங்கியிருக்க ஹோட்டல் தான் இருக்கேன். Restaurant ku வரியா?

இதோ வரேன்.

புடவையில் இருந்தாள். அவ்வளவு அழகு 😍 . அவளே பேச ஆரம்பித்தாள்.

Hai...

Hai...

என்ன திடீர்னு இந்த பக்கம்? புடவைலாம் செமயா இருக்கு.

வெட்கத்துடன்..

thanks பா..
ஒன்னும் இல்லை. ரொம்ப bore அடிச்சுது. அதான் உன்னை பாக்கலாம்னு வந்தேன்.

அவள் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை காண்பித்தாள். உண்மையாகவே நல்ல திறமைசாலி. அவள் எடுத்த படங்கள் அனைத்தும் அவ்வளவு நன்றாக இருந்தது.

fantastic. ரொம்ப நல்லா இருக்கு. உனக்கு கண்டிப்பா ஒரு நல்ல future irukku.

thank you very much 😍
ஆமாம்.. உனக்கு எதோ விசித்திரமான அனுபவம் இருக்குனு சொன்னியே. அத பத்தி எதாவது research பண்ணியா?

ம்ம்.... இப்போதான் அதை பத்தி ஒரு book ல படிச்சுட்டு இருந்தேன்.

நான் படித்தவற்றை கூறினேன்.

ஹே.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உனக்கு பேய் எதாச்சும் பிடிச்சிருக்கா?

பலமாக சிரித்தேன்.

இந்த காலத்துல போய் பேய் பிசாசுனு சொல்ற.

சரி... அந்த book எழுதுனவருக்கு அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?

சரி வா... சேர்ந்து படிப்போம்.

என்று கூற கூற அவளின் அலைபேசி அடித்தது..

அங்கும் இங்கும் விலகாதே !!Where stories live. Discover now