Butterfly - 04

3.3K 127 41
                                    

பொற்சிலை அழகில் நான் விழவில்லை

குணமதில் கவரப்பட்டு,

மொழியதில் புன்னகைத்து,

என்னில் வாழ்ந்தவளை நினைவூட்டும்

அவள் குரலும், தேகமும்,

வந்திடுமோ என் இருள் வாழ்வில்?

"கவின், நான் ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்காக தான் இங்க வந்தன்." என பவித்ரா ஆரம்பிக்க கவினும்,

"என்ன விஷயம் சொல்லுங்க பவித்ரா..."

"அது வந்து, நீங்க இப்போ ரீசன்டா அடையார் ல ஏதாவது கன்ஸ்ட்ரக்‌ஷன் ப்ராஜக்ட் கமிட் பண்ணிருக்கீங்களா?" என பவித்ரா கேட்க கவினும் சற்று யோசித்து விட்டு,

"ஆமாங்க. புது ப்ராஜக்ட், கார்பரேட் ஃபாக்ட்ரி ஒண்ணு கட்றதுக்கு வந்திருக்கு. கவர்மன்ட் ப்ராஜக்ட் இல்ல, ப்ரைவேட் தான். அதுல என்ன?"

"ஆமா கவின் அதுல தான் ப்ரச்சனையே. அந்த ப்ராஜக்ட நீங்க நிறுத்தணும்." என்றதும் அதிர்ச்சியடைந்த கவின்,

"வாட்? என்னங்க சொல்றீங்க?"

"ஆமாங்க, அங்க எங்களோட ஒரு கொழந்தைங்க அநாத ஆஷ்ரமம் இருக்கு. பக்கத்துலயே ஸ்கூல், அப்றம் கொஞ்சம் தள்ளி ஹாஸ்பிடல். நீங்க அந்த ப்ராஜக்ட் அ எடுத்தீங்கன்னா, அதனால நிறைய மக்கள் பாதிக்கப்படுவாங்க. அங்கருந்து வர்ர பொல்யூஷன்னால கொழந்தைங்களுக்கு என்ன மாதிரியான நோய்கள் வரும்னு சொல்ல முடியாது." என அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி தெளிவாக விபரித்துச் சொன்னாள் பவித்ரா. அவள் கூறும் விஷயங்கள் நியாயமானதாகவே இருந்தது.

"ஓ... இந்த ப்ராஜக்ட்ல இவ்ளோ ப்ராப்ளம்ஸ் இருக்கும்னு நான் எதிர்பாக்கல. நீங்க எதுக்கும் கவலப் படாதீங்க. இந்த ப்ராஜக்ட வேற இடத்துக்கு மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு." என்றதும் மகிழ்ச்சியடைந்த பவித்ரா,

"தாங்க்யூ... தாங்க்யூ சோ மச் கவின்."

"இட்ஸ் ஓகேங்க, நீங்க என்கிட்ட ஹெல்ப்ன்னு கேட்டு நான் பண்ணாம இருப்பனா? எனிவேய்ஸ் நீங்க..." கவின் பவித்ராவின் தொழில் பற்றித் தான் கேட்கிறான் என அறிந்து பவித்ராவும்,

காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed)Where stories live. Discover now