அழகின் ரகசியம் ஜெஸ்ஸி part 12

63 1 0
                                    

என்னடா இது நமக்கு வந்த சோதனைனு புலம்பிக்கொண்டு அவன் அறையில் அந்த டிக்கொட்டை தேட ஆரம்பித்தான் ஸ்மித்...

எப்படியாவது ஜெஸ்ஸி படிக்கும் இடத்தை கண்டுபிடித்து அவளிடம் நேரில் பேச வேண்டும் என்ற ஆசையில் தன் அறையை அலங்கோலமாக ஆக்கிவிட்டான் பாலப்போன டிக்கெட் மட்டும் கிடைக்கவே இல்ல 😂

அறையில் சப்தம் வருவதை கேட்ட அவன் அம்மா உள்ளே வர சார் பீரோவிற்கு அடியில் தலையை விட்டு கிண்டி கொண்டு இருந்தான்... இதை கண்ட அவனின் அம்மா என்னடா செய்ற லூசு பயலே என கேட்டதும் திடுக்கிட்டு ஸ்மித் எழ பீரோ அவனின் தலையை பதம் பார்த்தது😇

இப்பதாண்டா எல்லாத்தையும் சரி பண்ணி வச்சிட்டு போனேன் அதுக்குள்ள இப்படி அலங்கோலம் பண்ணி வச்சிருக்க எரும மாடே அப்படி என்னத்தடா தேடுறனு அம்மாவின் கேள்விக்கு பதில் தெரியாமல் போலீஸ் கிட்ட மாட்டிய திருடனை போல திரு திருவென முழித்தான் ஸ்மித்...

என்னடா பேய் முழி முழிக்கிற சொல்லுடா வர வர உன் போக்கு வேற சரி இல்லாம இருக்கு உண்மைய சொல்லுன்னு அவன் அம்மா கேட்க... அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆபிஸ் சம்பந்தப்பட்ட ஒரு பேப்பரை காணோம் அதான் தேடி பார்த்தேன் நீங்க போய் தூங்குங்க நானே சரி பண்ணி வச்சிறேன்னு சமாளித்து அனுப்பிவிட்டு அரையை சுற்றி பார்த்த ஸ்மித்திற்க்கு தலை சுற்றி விட்டது இது நம்ம room தானா இவ்வளவு கேவலமா இருக்கு இதை கிளீன் பண்ண விடிஞ்சுருமேனு தனக்கு தானே புலம்பிக்கொண்டு கடுப்பில் ஜெஸ்ஸிக்கு msg பண்ணினான்...

ஓய் திமிரு புடிச்சவளே உன்னால என் தூக்கம் போச்சு தலையில அடிபட்டு தலை வேற வலிக்குது டிக்கெட் கிடைக்கவே இல்ல அந்த 5 ரூபா டிக்கெட்ல அப்படி என்னடி இருக்கு இது உனக்கே ஓவரா இல்லையா I'm ரொம்ப பாவம்னு அனுப்பினான் ஜெஸ்ஸிக்கு ...

இதை கண்ட ஜெஸ்ஸி என்னடா சொல்ற ரொம்பவா அடிபட்டுச்சு என்னாச்சு என ஒருவித பணிவோடு கேட்டால்...

அதெல்லாம் ஒன்னும் இல்லை லேசா தான் நீ அந்த டிக்கெட் வேண்டாம்னு ஒரு வார்த்த சொல்லிட்டா வலி பறந்து போயிடும்னு பதில் அனுப்பினான் ஸ்மித்...

அப்படி எல்லாம் சொல்ல முடியாது சார் நீங்க ஹாஸ்பிட்டலே போனாலும் சரி எனக்கு அந்த டிக்கெட் கண்டிப்பா வேணும் இல்லைனா காலத்துக்கும் இப்படியே தான் msg பண்ணிட்டு இருக்கனும் 😍 என்னிடம் நேரில் பேசனும்னு ஆசை இருந்தால் எனக்காக எடுத்த அந்த டிக்கெட் வேணும்னு ஜெஸ்ஸி பதில் msg அனுப்பினால்...

இதை கண்ட ஸ்மித் கடுப்பானான் இப்ப என்னடி உனக்கு டிக்கெட் தானே வேணும் ஒன்னு என்னடி 100 டிக்கெட் நாளைக்கு வங்கிட்டு உனக்கு போன் பண்ணி சொல்றேன் வந்து வங்கிக்கோ இப்ப சந்தோஷமா என கடுப்பில் msg பண்ணினான்....

அவன் tension ஆவதை கண்ட ஜெஸ்ஸி ஒருவித சந்தோஷதோடு.. அந்த 100 டிக்கெட் எனக்கு எதுக்கு அதை நீயே வாங்கி அவிச்சு தின்னு எனக்கு நான் கேட்ட அந்த டிக்கெட் தான் வேண்டும் நாளை பேசலாம் பாய்டா லூசுனு தூங்க சென்று விட்டால் ஜெஸ்ஸி...

என்னடா இவ புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு பிடிவாதம் பண்ரா இதுக்கு மேல தேடுனா அம்மா அடிக்க வந்துடுவாங்க காலைல தேடி பார்ப்போம்னு அவனும் தூங்க சென்று விட்டான்....😴

தொடரும்.....

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 19, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Where stories live. Discover now