டேய்...தகப்பா (DEAR)😍

47 2 12
                                    

மன்னிப்பு என்ற வார்த்தையில் தொடங்கிய உறவு... மணம்வீசி மலர்ந்துகொண்டு...

ஏனோ முதல் முறை புகைப்படம் பார்த்து சிரித்தேன் இன்றும் சிரிக்கிறேன் உன் முகத்தை கண்டு அதே முதல்நாள் போன்று...

பிரம்மனே பிரமித்திருப்பான் பெண்ணவளை இவ்வுலகிற்கு படைத்த பின்பு.. பேரழகின் மொத்த உருவம் இவள் தானோ என்று...

கவிதைக்கு பொய்யலழகு ஆதலால் மேலே நான்கு வரிகள் எழுதியதில் தவறொன்றும் இல்லையே....

கவலை என்ற மூன்றேழுத்து வார்த்தைக்குள் மூழ்காதே..

தெளிவு  என்ற மூன்றெழுத்தை ஆராய்ந்து பார்  .

முடிவு என்ற மூன்றெழுத்து முத்தாய் பிறக்கும் முகமலர்ச்சியோடு..

வருடாந்திர நாள் ஒன்று புதிதாய் மலர அதில் அழகான மலராய் பூத்தவளே..  உன் அகவை ஒன்று கூட..  அதில் அன்பு பன்மடங்காய் ஏற.. என்றும் மகிழ்ச்சி ததும்பிட வாழ்த்துக்கள்..

முகமின்றி அகம் கண்டு கொண்ட நேசம் ஆயுள்வரை தொடர எண்ணுகிறேன் செல்ல செல்ல சீண்டல்களோடு....

டேய் தகப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. என்றும் என்றென்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள்.... Karunya02

வாழ்த்துக்கள் Where stories live. Discover now