றெக்க வச்ச பன்றி

Start from the beginning
                                    

"எங்க அம்மா அதெல்லாம் பொய் கதைனு சொல்லிருச்சு.... புழுவினி கோட்டியான்.... போ டா.."

அந்த நான்கு சிறுவர்களும் இவன் பேசுவதையே கேட்காமல் பாண்டி ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை முறைத்துப் பார்த்த கோட்டியான் அவர்களைப் பார்த்து...

"அப்புறம் றெக்க வச்ச பன்னி பத்தி சொல்ல மாட்டேன் பாத்துக்கோ...."

அந்த சிறுவர்கள் அனைவரும் சில நொடிகள் திகைத்து போய் நின்றனர். சிரார் விவாதம் தொடங்கியது.

"டேய் றெக்க வச்ச பன்னியாம் டா... எப்படி டா இருக்கும்...."

"டேய் அண்டப்புழுகன் புழுகுறான் டா..."

"அதெல்லாம் இல்ல டா அன்னைக்கு ஒரு பன்னி பறந்தத பார்த்தேன் என் வீட்டு மொட்டமாடில ஆனா அது வெள்ளையா இருந்துச்சானு தெரியல டா"

அந்த சிறுவர்கள் அனைவரும் தங்களுக்குள் பல கேல்விகளை கேட்டுக்கொண்டே கோட்டியானின் முன் கூடினர்.

"என் பக்கம் எதுக்கு வரீங்க என்னைய தான் விளையாட்டுல சேத்துக்க மாட்டேனு சொல்லிட்டிங்கல்ல?"

"நீ றெக்க வச்ச பன்னி பத்தி சொன்னா நாங்க சேர்த்துக்குறோம்"

கோட்டியான் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்து மலர்ந்தது. அவன் பன்றி புராணத்தை தொடங்கினான்.

"நான் ஒரு நாளைக்கு நம்ம ஊரு கோவிலுக்கு போகும் போது... உள்ள ஒரே கூட்டமா இருந்துச்சுனு சுற்றி போனேனா.... அப்போ தான் அங்க அது வந்துச்சு பெருசா கருப்பா இரண்டு ரெக்க வச்சுருந்துச்சு..."

"அப்போ அது பறக்குமா?.... நம்ம அது மேல ஏறி பறக்கலாமா?

"இல்ல பறக்க எல்லாம் முடியாது.... அதுக்கு சின்ன ரெக்க தான இருக்கு....."

எல்லாச் சிறுவர்களும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிக்க, திடீரென கோட்டியானுக்கு சிவகாமி கூச்சலிடும் சத்தம் கேட்டது.

"டேய் எங்க டா போய்ட்ட வா டா வீட்டுக்கு...."

அவள் கத்திய சத்தத்தில் இடி முழக்கமே மூழ்கிவிடும் போல் இருந்தது. அவன் அலரிக்கொண்டு ஓட அவன் பின்னால் அனைத்து சிறுவர்களும் ஓடி வந்தனர். அவன் வீடு இருக்கும் தெருவில் மக்கள் அனைவரும் தத்தமது வீட்டு வாசலில் மொய்த்துக்கொண்டிருந்தனர். அந்த கிழவியும் தன் பெயரனுடன் வந்து காத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் கைகளும் பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டிருந்தது. கோட்டியானின் கண்கள் நெற்றியை தள்ளிக்கொண்டு அகண்ட விரிந்தது. ஆச்சரியத்தில் வாயை பிளந்த அவனுக்கு வார்த்தை வெளியில் கொட்டியது.

றெக்க வச்ச பன்றி (Completed)Where stories live. Discover now