மாலதியும் ரவிச்சந்திரனும் மித்ரா கார்த்தியோடு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்வேதா அங்கே வர.. மாலதி அவளிடம்.. "ஸ்வேதா.. சாப்பிட போறீயா.."என கேட்டார்.

"இல்லை அத்தை வேண்டாம்.."என்றாள் ஸ்வேதா.

"மதியமும் நீ சாப்பிடலை தான.. சாப்பிடு ஒழுங்கா.. வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.."என்றார் மாலதி.

சரியென தலையசைத்தாள் ஸ்வேதா. மாலதி ஸ்வேதாவுக்கு சாப்பாடு எடுத்து வைக்க எழும்பினார்.

"நீங்க இருங்க அத்தை.. நான் எடுத்து வைக்கிறேன்.."என மித்ரா எழுந்தாள்.

சரியென மாலதியும் தலையசைத்தார்.

மித்ரா ஸ்வேதாவுக்கு சாப்பாடு எடுத்து வைக்க.. ஸ்வேதா எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"அண்ணி.. அண்ணனுக்கும் கௌதமுக்கும் பால் வேணுமாம்.."என யாழினி மித்ராவிடம் சொன்னாள்.

"உனக்கு வேணுமா.."என மித்ரா யாழினியிடம் கேட்டாள்.

"எனக்கு வேண்டாம்.."என்றாள் யாழினி.

மாலதியும் ரவிச்சந்திரனும் தங்கள் அறைக்கு சென்றிட.. கார்த்தியும் யாழினியும் மித்ராவோடு சிரித்து பேசிக் கொண்டிருக்க.. ஸ்வேதா மித்ராவை முறைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

கௌதமுடன் பேசிக் கொண்டிருந்த ஆதி ஸ்வேதாவை கவனித்தான். ஏதோ சரியில்லை என நினைத்தான் ஆதி. கார்த்தியும் யாழினியும் அவரவர் அறைக்கு தூங்கச் சென்றனர்.

மித்ரா பால் எடுத்து வந்து தர.. கௌதம் "நான் ரூமுக்கு போறேன்.. குட் நைட்.."என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

ஆதி மட்டும் ஹாலில் இருக்க.. மித்ரா பால் டம்ளரை ஆதியிடம் தந்துவிட்டு அவனருகில் உட்கார்ந்தாள்.

ஆதி போனில் ஏதோ பார்த்தபடி.. பாலை குடிக்க.. மித்ரா ஆதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் கடந்த பின்.. மித்ரா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த ஆதி.. என்னவென கேட்டான்.

தொடுவானம்Место, где живут истории. Откройте их для себя