அத்தியாயம் 14

4.1K 188 21
                                    

கிருஷ்ணா எல்லாவற்றையும் பேக் செய்து கொண்டு கீழே இறங்கினான். முன்னால் நாலு வேலையாள் பெட்டியோடு செல்வதை பார்த்த வேணி, "ஏன்ட்றா லண்டனிலே செட்டில் ஆக போறியா?" என்றாள் பூஜை அறைக்கு வந்த மகனை பார்த்து.

"ம்ம்.. அப்பிடியே வச்சுக்கோவேன் வேணி" என்றான் மகன் அசால்டாக சிரித்து கொண்டு சாமி கும்பிட்டபடி.

"உரேய் ஏன்ட்றா?" என்றாள் சற்று அதட்டலாக அம்மா.

"உன் பொண்ணு பயங்கரமா சொக்கு பொடி போட்டுட்டா..நான் என்ன செய்யட்டும் இந்த 5 மணிநேரம் அவ இல்லாமே அந்த ரூமிலே கடத்த முடியல.ம்ச்..அவ ஒரு 9 தடவை போன் பண்ணிட்டான்னு வை..இருந்தாலும் ம்ச்.." என்று தோளை குலுக்கிவிட்டு சிரித்தான்.

"ம்.. இன்னும் ஒரு வருஷம் கூட முடியல அதுக்குள்ள அவ இல்லாமே ரூமிலே இருக்க முடியலையா?" என்றாள் அன்னை நக்கலாக.

"ஆமா என் வேணி" என்று அன்னையின் கன்னத்தை கிள்ளியவன் "ஒன்னு அவ இங்க இருக்கணும், இல்ல நான் அவ இருக்க இடத்திலே இருக்கணும். ஃபர்ஸ்ட் நீ விட மாட்டே..அதான் நான் செகண்டை சூஸ் பண்ணிட்டேன்" என்று கண்ணடித்தான் மகன்.

"தொங்கா, ஜாக்க்கிரதையா பார்த்துக்கோரா..வந்ததும் கால் செய்" என்றபடி மகனின் காதை செல்லமாய் திருகி அவனை வழியனுப்பினாள்.

அன்று காலையில் இருந்தே நிலை கொள்ளாமல் இருந்தாள் ராதா.காலையில் டயினிங்கில் டீ குடிக்கும் போதே சுமதியிடம் கிருஷ்ணாவிற்கு பிடித்தது எல்லாம் செய்ய சொல்லி கொண்டிருந்தாள்.மகளின் பரபரப்பை பார்த்த அப்பா. "என்ன சின்னு நீ? கிருஷ்ணா இன்னிக்கு தான் ஊருக்கே வரப்போறாரு அதுக்குள்ள அவரை வர சொல்லிட்டியா? பாவம்டா, அலைஞ்சுகிட்டே இருக்காரு..ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க விடுறா" என்றார் குழைவாக.

"நா ஓண்ணும் அவன்கிட்ட பேசலை, இடியட் நேத்துலேர்ந்து போனே எடுக்கலை..ம்ச்..இப்ப என்ன இதெல்லாம் நீங்க சாப்பிட மாட்டீங்களா? அப்பிடின்னா நானே சாப்பிட்டுகிறேன் விடுங்க டாடி" என்றாள் மகள் விரைப்பாக ஆனால் சற்று சோர்ந்த தொனியில்.

இதுவும் காதலா?!!!Where stories live. Discover now