அர்ஜூன் சக்தியை கையை தன் கைக்குள்ள எடுத்து வச்சுக்கிறான்.

"அம்மு.. உனக்கு நியாபகம் இருக்கா.. லவ் பத்தி பேச்சு வந்தப்ப.. நீ அம்மா அப்பாவோட லவ் பத்தி சொன்ன.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியும் அது நியாபகம் வந்து தலையாட்டுறா.

"அப்ப ரொம்ப நேரம் டைப் பண்ணேன்.. ஆனா குட் நைட்னு மட்டும் பதில் அனுப்புனேன்.. அப்ப என்ன டைப் பண்ணேன் தெரியுமா.."

"என்ன டைப் பண்ண.."

"அம்மு.. நீ சொன்ன இந்திரா சரவணனோட ஒரே பையன் அர்ஜூன் நான் தான்.. எனக்கு வரப்போற மனைவி எப்டிலாம் இருக்கணும்னு நான் கற்பனை பண்ணேனோ.. அவளுக்கு வச்ச செல்லப்பேர் அம்மு.. அதனால தான் நான் உன்கிட்ட பேசினேன்.. எனக்கு நிறைய தடவை உன்கிட்ட பேசும் போது.. நீ தான் எனக்கானவ..னு தோணுது.. நீ இதை எப்டி எடுத்துப்பனு தெரியலை.. வாழ்க்கை முழுக்க நீ என்கூட வருவீயா.. இதான் நான் டைப் பண்ணேன்.."னு அர்ஜூன் சொல்றான்.

"அப்புறம் ஏன் அர்ஜூன்.. நீ அனுப்பலை.."னு சக்தி கேட்கிறா.

"அம்மு.. உன் மனசில நான் இருக்கேனானு தெரியாம நான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்.. இதை மெசேஜ்ல சொல்றதை விட நேரில தான் சொல்லணும்னு தோணுச்சு.."னு அர்ஜூன் சொல்றான்.

"உன்னை நேரில பார்க்கும் போது.. நான் உதய் பேரை ஏன் வச்சிருந்தேன்னு சொல்லிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா.. நீ வரலை.. சரி இந்த ரிலேஷன்ஷிப் இதுக்கு மேல போகாததே நல்லதுனு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. ஏன் எதுக்குனு தெரியாம அந்த பிரிவு.."னு அர்ஜூன் சொல்றான்.

"சாரி அர்ஜூன்.."னு சக்தி சொல்றா.

"அம்மு.. எதுக்கு சாரிலாம் சொல்ற.. நீ பண்ணது சரிதான்..

ஒரு வேளை அப்பவே நாம நேரில பார்த்திருந்தா.. நாம ஒருத்தரை ஒருத்தர் தப்பா தான் புரிஞ்சிட்டு இருந்திருப்போம்.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியும் ஆமா னு தலையாட்டுறா.

"அம்மாவுக்கு தான் thanks சொல்லணும்.. அவங்க தான் தெரிஞ்சோ தெரியாமலோ  என் அம்முவை என்கூட சேர்த்து வச்சிட்டாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க.

இந்திரா போன் பண்றாங்க அந்த நேரம்.. "அம்மா எங்களைலாம் மறந்துட்டு அங்கையே செட்டிலாகிட போறீங்களா.."னு சக்தி கேட்கிறா.

"அம்மு.. அப்டிலாம் இல்லைடா.. நீங்களும் இங்க வந்தா கொஞ்ச நாள்ல கிளம்பிடலாம்னு நினைச்சேன்.."னு இந்திரா சொல்றாங்க.

அர்ஜூன் அதுக்கு.. "ம்மா.. இப்போதைக்கு அங்க வரமுடியாது.. அடுத்த வாரம் ஆடிட்டிங் இருக்கு.. இண்டர்வியூக்கு வேற ப்ளான் பண்ணிருக்கேன்.."னு சொல்றான்.

"ம்.. சரிடா.. அப்ப நாங்க அடுத்த வாரத்துல அங்க வந்துடுறோம்.."னு இந்திரா சொல்றாங்க.

அப்புறம் கொஞ்ச்சசசசசசச... நேரம் சக்தி இந்திரா கிட்ட பேசிட்டு போனை கட் பண்றா.

அர்ஜூனும் சக்தியும் டின்னர் முடிச்சிட்டு ரூமுக்கு வர்றாங்க.. சக்தி படுக்கப் போறா..

"அம்மு.. இங்க வா.."னு அர்ஜூன் பால்கனில இருந்து கூப்பிடுறான்.

"என்ன அர்ஜூன்.."னு சக்தி கேட்கிறா.

"இங்க உட்காரு கொஞ்ச நேரம்.."னு அர்ஜூன் சக்தியை பால்கனில இருக்கிற ஊஞ்சல்ல உட்கார வைக்கிறான்.

"எதுக்கு அர்ஜூன்.."னு சக்தி அர்ஜூனை பார்க்கிறா.

"இந்த ரூம்ல எல்லாம் என்னோட விருப்பப்படி டிசைன் பண்ணதுனு சொன்னேன்ல.. இந்த ஊஞ்சல் எதுக்கு தெரியுமா.."

"எதுக்கு.."னு சக்தி கேட்கிறா.

"இப்டி.. உன் மடியில தலைவைச்சு படுக்கத்தான்.."னு சொல்லிட்டு அர்ஜூன் சக்தி மடியில தலைவைச்சு படுக்கிறான்.

சக்தியும் அர்ஜூனும் ஏதேதோ பேசிட்டே இருக்காங்க.. ரொம்ப நேரம்..

சக்தி அர்ஜூனோட தலைமுடியோட விளையாடிட்டு இருக்கா. அர்ஜூன் கண்ணை மூடி படுத்திருக்கான்.

"அர்ஜூன்.."னு சக்தி கூப்பிடுறா.

"ம்.."னு அர்ஜூன் கண்ணை திறக்காமலே கேட்கிறான்.

"உதய் எப்டி இறந்தான்.."னு சக்தி கேட்கிறா.

அடியே.. அழகே..Where stories live. Discover now