சக்தி.. "திடீர்னு வந்து கையை வெட்டிக்கப் போறீயானு கேட்டதும்.. கண்டுபிடிச்சிட்டானோனு நினைச்சேன்.. நல்ல வேளை இன்னும் கண்டுபிடிக்கலை.."னு நினைக்கிறா.

அர்ஜூன் சக்தி தான் அம்முன்னு தெரிஞ்ச சந்தோஷத்துல அவளை பார்த்து சிரிச்சிட்டே இருக்கான்.

சக்தி.. "என்ன அர்ஜூன்.. சிரிச்சிட்டு இருக்க.."னு கேட்கிறா.

"என் பொண்டாட்டி ஆப்பிள் வெட்டுற அழகே தனி.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி அவனை முறைக்கிறா.

"என்ன அம்மு.."னு அர்ஜூன் அப்பாவி மாதிரி கேட்கிறான்.

"ஒன்னுமில்லை.."னு சக்தி சொல்றா. ஆனா மனசுக்குள்ள.. "ஒருத்தி கையை வெட்டிப்பேன்னு சொல்றா.. அவளுக்கு ரிப்ளை பண்ணாம இங்க வந்து சிரிக்கிறத பாரு.."னு நினைக்கிறா.

அவ மனசுக்குள்ள திட்டுறத நினைச்சு பார்க்க அர்ஜூனுக்கு இன்னும் சிரிப்பா வருது..

இங்க இருந்தா உளறிடுவோம்னு சக்தி ரூமுக்கு போறதுக்காக எழுந்திருக்கிறா.

"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.

சக்தி "ம்.."னு மட்டும் சொல்றா.

அர்ஜூன் சக்தி கையை பிடிச்சு இழுக்கிறான். அர்ஜூன் மடியில விழுந்துடுறா சக்தி..

"என்ன அர்ஜூன்.."னு சக்தி சிணுங்கிறா.

அர்ஜூன் அவ முகத்தை கிறக்கத்தோட பார்க்கிறான். அவ உதட்டை தன் உதட்டால மூடி அவளை பேச விடாம பண்றான்.

அப்புறம் எப்ப.. எப்டி.. ரூமுக்கு போனாங்க.. ரூம்ல என்ன நடந்துச்சுனு லாம் யாரும் கேட்கக்கூடாது.. 😜

காலையில அர்ஜூன் கண்முழிச்சதும் சக்தியை இன்னும் இறுக்கமா கட்டிப்பிடிச்சுக்கிறான்..

சக்தி தூக்கம் கலைஞ்சு.. மணியை பார்க்கிறா.. மணி ஏழு ஆகிருந்துச்சு..

"அச்சோ.. இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.."னு நினைக்கிறா.

அர்ஜூன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.

நேத்து நடந்ததெல்லாம் நினைச்சு பார்த்து அர்ஜூன் நெற்றியில ஒரு முத்தம் கொடுத்துட்டு எழுந்து.. குளிச்சிட்டு ரூம்ல இருந்து வெளியே போறா.

அர்ஜூன் எழுந்ததும் சக்தி கிட்ட விளையாட ஆரம்பிக்கிறான்.. தன் போனை எடுத்து சக்திக்கு மெசேஜ் பண்றான்..

எதுவுமே தெரியாத மாதிரி.. எப்பவும் போல குளிச்சிட்டு ஹாலுக்கு போறான் அர்ஜூன்..

சக்தி.. டீ எடுத்துட்டு வர்றா.. இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து பேசிட்டு கம்பெனிக்கு கிளம்புறாங்க.

அப்ப தான் சக்தி தன் போனை பார்க்கிறா..

அர்ஜூன்.. "அம்மு.. r u ok.."னு மெசேஜ் பண்ணிருக்கான்..

"கையை வெட்டிக்குவேன்னு ஒருத்தி சொல்றா.. அதை பத்தி கவலையே இல்லாம பொண்டாட்டியை கொஞ்சிட்டு.. இப்ப வந்து.. r u ok.. உன்னை என்ன பண்றேன் பாரு.."னு சக்தி மனசுக்குள்ள நினைக்கிறா.

##குட்டி updateக்கு sry.. இன்னைக்கு சாயந்திரம் அடுத்த update.. Thank you all for your great response..💕😍😍😘😘

அடியே.. அழகே..Where stories live. Discover now