"என்னை தெரியும் னு சொன்னா.. இப்டி நடுவீட்டில உட்கார வச்சிடுவீங்களா.. இனிமே இப்டி நான் இல்லாத நேரம் யாரையும் உள்ள விடாதீங்க.. முதல்ல இவளை வெளியே போக சொல்லுங்க.."னு சொல்லிட்டு அர்ஜூன் ரூமுக்கு போயிடுறான்.

அந்தப் பொண்ணு எதுவும் பேசாம வெளியே போறா. சக்தி அவகிட்ட அவ யாருன்னு விசாரிக்கலாமா னு நினைக்கிறா.. ஆனா அது சரியா வராது.. அர்ஜூன் கிட்ட பேசலாம்னு ரூமுக்கு போறா..

அர்ஜூன் கோபமா இருப்பானோ.. என்ன பண்றதுனு யோசனையோட சக்தி ரூமுக்கு போறா.

அர்ஜூன் கொஞ்சம் கோபமா தான் இருந்தான்.. சக்திக்கு எப்டி பேச்சை தொடங்குறதுனு தெரியலை..

அர்ஜூன் சக்தியை பார்த்ததும்.. "ஏன் அம்மு.. அவ இப்டி பண்றா.. என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டாளா.."னு புலம்புறான்.

சக்தி அர்ஜூன் பக்கத்தில உட்கார்றா.. "அர்ஜூன் யாரு அந்தப் பொண்ணு.."னு கேட்கிறா.

"உதய் சாவுக்கு காரணமானவ.."னு அர்ஜூன் உணர்ச்சியே இல்லாம சொல்றான்.

உதய் உயிரோட இல்லையானு சக்திக்கு அதிர்ச்சியா இருக்கு..

"அர்ஜூன்.. என்ன சொல்ற.."னு சக்தி கேட்கிறா.

"ஆமா அம்மு.. இவளால தான் இன்னைக்கு உதய் உயிரோட இல்லை.. என் கண் முன்னாடியே அவன் செத்துப் போய்ட்டான்.. என்னால அவனை காப்பாத்த முடியலை.."னு சொல்றான் அர்ஜூன்.

அர்ஜூன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிய பேசுனது.. சக்தியால தாங்கிக்கவே முடியலை..

"அர்ஜூன்.."னு அவனை தொடுறா சக்தி.

அர்ஜூன் அவளை கட்டிப்பிடிச்சுக்கிறான்.. "அம்மு.. சாரி.. நான் அவளால தான் உன்னை தப்பா புரிஞ்சிட்டு.. என்னலாமோ பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடு அம்மு.."னு சொல்றான்.

சக்திக்கு என்ன சமாதானம் சொல்றதுனே தெரியலை..

"அம்மு.. நீ என்னை விட்டு போக மாட்டல்ல.. அம்மு.. ப்ளீஸ் என்னை விட்டு போகாத.."னு அர்ஜூன் ஏதேதோ புலம்புறான்.

"அர்ஜூன்.. நான் எங்கையும் போகலை.. உன்னை விட்டு போக மாட்டேன்.."னு சக்தி சொல்லி.. அர்ஜூனை சமாதானம் பண்றா.

ரொம்ப நேரம் ட்ராவல் பண்ண டயர்டுல.. அர்ஜூன் கொஞ்ச நேரத்தில தூங்கிடுறான்.

சக்தி கையை பிடிச்சபடி அர்ஜூன் தூங்கிட்டு இருக்கான்.

சக்தி அர்ஜூன் முகத்தையே பார்த்தபடி இருக்கா.

அர்ஜூன் மனசில இவ்ளோ வலி இருக்கா.. னு நினைச்சு சக்தி வருத்தப்படுறா.

"உதய் உயிரோட இல்லைனா.. உதய் போட்டோ பேர் லாம் வச்சு fbல கவிதை எழுதுனது யாரு..

யாரும் உதய் போட்டோவை மிஸ்யூஸ் பண்றாங்களோ.. என்கிட்ட ரொம்ப மரியாதையா தானே பேசினான்..

அது அப்ப யாரா இருக்கும்.."னு யோசிச்சிட்டே இருக்கா சக்தி.

அர்ஜூன் கண்முழிச்சு பார்க்கிறான்.. சக்தி அர்ஜூன் பக்கத்திலே உட்கார்ந்து இருக்கா.

அர்ஜூனுக்கு ரொம்ப தலைவலியா இருக்குது..

"அம்மு.. ஒரு டீ கொண்டு வர்றீயா.."னு சக்தி கிட்ட கேட்கிறான்.

சக்தி அதை கவனிக்காம ஏதோ யோசனைல உட்கார்ந்து இருக்கா.

"அம்மு.."னு திரும்பவும் அர்ஜூன் கூப்பிடுறான்.

"ஆங்.. அர்ஜூன்.. எழுந்துட்டீயா.."னு சக்தி கேட்கிறா.

"அம்மு.. ரொம்ப தலைவலியா இருக்கு.. ஒரு டீ எடுத்துட்டு வா.."னு அர்ஜூன் சொல்றான்.

"ஆங்.. இதோ எடுத்துட்டு வர்றேன்.."னு சக்தி எழுந்து போறா.

வழக்கம் போல கம்பெனிக்கு போக ஆரம்பிக்கிறாங்க. திரும்ப சக்தியும் அர்ஜூனும் உதய் பத்தி பேசிக்கலை..

ஆனா இரண்டு பேரும் நிறைய நேரம் ஒன்னா இருக்காங்க.

சந்தோஷமா போகுது.. ஆனாலும் சக்தி உதய் பேர்ல ஒரு fb அக்கவுண்ட் இருக்கிறத.. அர்ஜூன் கிட்ட சொல்லலாமா..னு இல்லை அது யாருன்னு தெரிஞ்சிட்டு சொல்லலாமா..னு யோசிக்கிறா.

ரொம்ப யோசனைக்கு பிறகு.. சக்தி தன்னோட fb அக்கவுண்ட்ல திரும்ப login பண்றா.

அடியே.. அழகே..Where stories live. Discover now