"குழந்தை பேர் என்ன.."னு சக்தி கேட்கிறா.

"ராகவி.."னு ஶ்ரீ சொல்றா.

"பேர் ரொம்ப அழகா இருக்கு.. பாப்பா மாதிரியே.."னு சக்தி குழந்தையை கொஞ்சிட்டு இருக்கா.

"நீங்களும் தான் ரொம்ப அழகா இருக்கீங்க.. அம்மு.."னு ஶ்ரீ சொல்றா.

"என்ன அம்முவா.."னு சக்தி முழிக்கிறா. வந்த உடனே அர்ஜூன் சக்தி ன்னு தான் introduce பண்ணான்.. அப்புறம் எப்டி இவங்க அம்முன்னு சொல்றாங்கனு சக்திக்கு தோணுச்சு.

"என்ன.. அம்மு அர்ஜூன் வச்ச செல்லப்பேராச்சே.. இவ எப்டி கண்டுபிடிச்சானு யோசிக்கிறீங்களா.."னு ஶ்ரீ கேட்டுட்டு பதிலையும் அவளே சொல்றா.

"அம்முன்னு உங்களை நினைச்சு.. கவிதையா எழுதி தள்ளுவான்.. உதய் தான் இவன் கவிதை எழுதுறத எங்களுக்கு சொன்னான்.."னு ஶ்ரீ சொல்லும் போதே.. உதய் நியாபகம் வந்து.. அமைதியாகிடுறா.

அர்ஜூனும் பிரபாவும் கூட எதுவும் பேசாம அமைதியா இருக்கிறாங்க.

அர்ஜூன் கவிதை எழுதுவானானு ஆச்சரியமா இருக்கு சக்திக்கு. அதை யோசிச்சிட்டு எல்லாரும் அமைதியா இருந்ததை சக்தி கவனிக்கலை.

பிரபா.. "ஶ்ரீ.. அவங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணு.."னு பேச்சை மாத்துறான்.

ஶ்ரீ.. சக்தி கூட பேசிட்டே சமையல் பண்றா.

"உங்க கல்யாணத்தப்ப தான் எனக்கு டெலிவரி டேட்.. அதான் கல்யாணத்துக்கு வரமுடியலை.."னு ஶ்ரீ சொல்றா.

சக்தி.. "பாப்பா.. ரொம்ப அமைதியா இருக்கா.. உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணமாட்டா போல.."னு சொல்றா.

"யாரு.. மேடமா.. எனக்கு தெரிஞ்சு உங்ககிட்ட தான் அழாம இருக்கா.. இல்லைனா தூங்கிட்டானு வேற வேலையை பார்க்கிறதுக்குள்ள அழ ஆரம்பிச்சிடுவா.."னு ஶ்ரீ சொல்றா.

"எப்டி தனியா சமாளிக்கிறீங்க.. அம்மாவை கூட இருக்க சொல்லிருக்கலாம்ல.."னு சக்தி கேட்கிறா.

"நாங்க இரண்டு பேரும் லவ் மேரேஜ்.. இரண்டு பேர் வீட்டிலயும் ஒத்துக்கலை.. காலேஜ் முடிச்சு நாலு வருஷம் பொறுமையா இருந்து பேசி பாத்தோம்.. வீட்டில ஒத்துக்கலை.. நாங்க கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டோம்.. டெலிவரி டைம்ல அம்மா கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.. ஆனா அதை யோசிக்க விடாத அளவுக்கு பிரபா என்னை நல்லா பாத்துக்கிட்டான்.. அடுத்த வாரம் நாங்க இரண்டு பேர் வீட்டுக்கும் போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கோம்.. ஏத்துப்பாங்க.. பார்க்கலாம்.."னு ஶ்ரீ பேசிட்டே சமையல் முடிச்சிடுறா.

அடியே.. அழகே..Where stories live. Discover now