"சாம்பார் நான் தான் வச்சேன்.."னு இந்திரா சொல்றாங்க.

உடனே கார்த்தி.. "நான் சும்மா சொன்னேன்.. அம்மா வைக்கிற சாம்பார் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியாதா.. இந்த பொரியல் தான்.."னு சொல்றான்.

"பொரியலுக்கு என்ன.."னு சக்தி கேட்கிறா..

"பொரியலா இது.. உப்பு இல்லை.. காய் வேகவே இல்லை.."

"பொரியல் நான் பண்ணலை.."னு சக்தி சொல்றா.

"பொரியலும் நீங்க பண்ணலையா.. அப்ப நீங்க என்ன தான் பண்ணீங்க.."னு கார்த்தி பாவமா கேட்கிறான்.

"நீயே கண்டுபிடி.."னு இந்திரா சொல்றாங்க.

"ஹி.. ஹி.. நான் எதையும் கண்டுபிடிக்க மாட்டேன்.. பேசாம சாப்டுக்கிறேன்.. ஐயம் பாவம்.."னு கார்த்தி சொல்றான்.

சக்தியும் இந்திராவும் சேர்ந்து கார்த்தியை கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க.

அர்ஜூன் சக்தி பண்றதை எல்லாம் ரசிச்சபடி இருக்கான்.. கார்த்தியும் அதை அடிக்கடி கவனிச்சான்.

கார்த்தி சக்தி கிட்ட அர்ஜூன் பத்தி பேசினா அவ கண்டிப்பா புரிஞ்சுப்பானு நினைக்கிறான்.

அர்ஜூன் உதய் தங்களை விட்டு போன பிறகு தான் எதிலயும் ஈடுபாடு இல்லாம இருக்கிறான். அத சக்தி புரிஞ்சிக்கிட்டா அத மாத்திடுவானு கார்த்திக்கு தோணுச்சு.

கார்த்தி சக்தி கிட்ட பேசலாம்னு போறான்.

"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசலமா.."னு கார்த்தி கேட்கிறான்.

"ம்.. தாராளமா.. ஆனா நீ.. வா.. போ..னே சொல்லுங்க.. நீங்க வாங்க லாம் வேண்டாம்.."

"ம்.. சரி.."

"எத பத்தி பேசப்போறீங்க.."

"அர்ஜூன் பத்தி.."

"அர்ஜூன் பத்தி.. என்ன.."னு சக்தி கேட்கிறா.

"அது.."னு கார்த்தி ஆரம்பிக்கும் போதே அவனுக்கு போன் வருது.

போன் பேசி முடிச்சதும் கார்த்தி.. "ப்ரெண்ட்க்கு ஆக்சிடெண்ட்.. நான் இன்னொரு நாள் உங்க கிட்ட பேசுறேனு சொல்லிட்டு கிளம்புறான்.

அர்ஜூன் பத்தி என்ன சொல்ல நினைச்சிருப்பான்.. னு சக்தி யோசிச்சா. சரி சொல்லும் போது பார்த்துக்கலாம்னு அதோட சக்தி மறந்துட்டா.

சக்தியும் அர்ஜூனும் கம்பெனிக்கு கார்ல போய்ட்டு இருக்காங்க. அப்ப.. அர்ஜூன் player ஆன் பண்ணதும் அலைபாயுதே படத்துல இருந்து.. சிநேகிதனே பாட்டு வருது..

அதைக் கேட்டதும் சக்தி தன்னை மறந்து பாட ஆரம்பிச்சிடுறா. உண்மையிலே நல்லா பாடுனா.

சக்தியை அர்ஜூன் ஏதோ வித்தியாசமா பார்க்கிறான். அதை கவனிச்சதும் சக்தி.. "என்ன.."னு அர்ஜூன் கிட்ட கேட்கிறான்.

"இல்லை.. கல்யாணத்தப்ப அந்த பாட்டி.. உன்னை பாட மட்டும் சொல்லிடாதனு சொன்னாங்க.. ஆனா நீ இவ்ளோ நல்லா பாடுற.."

"ஓ.. அதுவா.. அது பாட்டி பாட சொன்னப்ப நான் பாடுன பாட்டு அப்டி.."னு சக்தி சொல்றா.

"ஏன்.. அப்டி என்ன பாட்டு பாடுன.."னு அர்ஜூன் கேட்கிறான்.

"அது ஒரு பெரிய ஸ்டோரி.. நிவிய பொண்ணு பார்க்க வந்தப்ப.. பாட்டி பாட்டு பாடச் சொன்னாங்களா.. இதெல்லாம் கொஞ்சம் டூமச்சா இருக்கேனு எனக்கு தோணுச்சு.. அதான் நான் ஆடிட்டே பாடவா..னு பாட்டி கிட்ட கேட்டேன்.. அவங்களும் சரினு தலையாட்டுனாங்க.. நான் அடிச்சா தாங்க மாட்ட.. நாலு மாசம் தூங்க மாட்டனு பாடுனேன்.. அதான் பாட்டி அப்டி சொன்னாங்க.."னு சக்தி சொல்லிமுடிக்க அர்ஜூன் கண்ட்ரோல் பண்ணமுடியாம சிரிச்சிட்டு இருந்தான்.

சக்திக்கு அதெல்லாம் யோசிக்க சிரிப்பு வந்தது.. "பாட்டி முகத்தை பார்க்கணுமே.. நான் பாடி முடிக்கும் போது.."னு சொல்லி சக்தியும் சிரிக்கிறா.

அன்னைக்கு நாள் முழுக்க இரண்டு பேரும் ஏதேதோ பேசிட்டு சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்தாங்க.

கம்பெனில இருந்து கிளம்புறாங்க இரண்டு பேரும்..

அர்ஜூன் கார் கிட்ட போகும்போது ஒரு பொண்ணு அவன்கிட்ட பேச வர்றா.

இரண்டு பேரோட சந்தோஷத்தையும் பறிக்க வந்தவ அவ தான்..

அடியே.. அழகே..Where stories live. Discover now