"அப்ப நான் இப்பவே கிளம்பிடுறேன்.."னு கார்த்தி சொல்றான்.

"டேய்.. உத படுவ.."னு இந்திரா சொல்றாங்க.

"அப்டிலாம் எஸ்கேப் ஆக விட்டுடுவோமா.."னு சக்தி சொல்றா.

"அம்மாவும் பொண்ணும் இன்னைக்கு உன்ன ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க.. கவனமா இருந்துக்கோ.."னு சரவணன் கார்த்தி கிட்ட சொல்றார்.

"அப்பா.. நீங்களே இப்டி என்னை கைவிடுறீங்களே.. நியாயமா.."னு கார்த்தி கேட்கிறான்.

"நியாயமில்லை தான்.. ஆனா இங்க அம்மாவும் பொண்ணும் வைக்கிறது தான் சட்டம்.. அத தெரிஞ்சுக்கோ.."னு சரவணன் சொல்றார்.

"சரி விடுங்க.. இன்னைக்கு ஒரு நாள் நான் இந்த வீட்டோட சட்ட திட்டங்களை மதிச்சு நடந்துக்கிறேன்.. என் ப்ரெண்ட் எங்க.."

"மேல ரூம்ல இருக்காங்க.."னு சக்தி சொல்றா.

"நான் போய் பார்த்துட்டு வர்றேன்.."னு சொல்லிட்டு கார்த்தி எழுந்து போறான்

சக்தி சமையல் வேலையை ஆரம்பிக்க.. இந்திராவும் சக்திக்கு ஹெல்ப் பண்ணிட்டு கிச்சன்ல பேசி சிரிச்சிட்டு இருக்காங்க.

கார்த்தி அர்ஜூன் கிட்ட.. "என்னடா கல்யாண வாழ்க்கை எப்டி போகுது.."னு கேட்கிறான்.

"ம்.. போகுது.."

"பார்த்தா.. ஏதோ changes இருக்கிற மாதிரி தோணுது.."

"ம்.. இருக்குது.."

"பாசிட்டிவ் changes தானே.."

"ஆமா.."

"ரொம்ப சந்தோஷம் டா.."

"ஆனா இன்னும் தெளிவா என்னால எந்த முடிவுக்கும் வரமுடியலை.."

"ரொம்ப குழப்பிக்காத.. நல்லது தான் நடக்கும்.."

"ம்.."

எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறாங்க.

சாப்பிடும் போது சக்தி கார்த்தி கிட்ட.. "சாப்பாடு எப்டி இருக்கு.."னு கேட்கிறா.

"சாம்பார் அம்மா அளவுக்கு இல்லை.. சுமாரா தான் இருக்கு.."னு சொல்றான் கார்த்தி..

அடியே.. அழகே..Where stories live. Discover now