****

சக்தி தன்னோட ரூம்ல உட்கார்ந்து facebook open பண்றா. அப்ப நிவேதா வர்றா.

"சக்தி என்ன பண்ணிட்டு இருக்க.."

"நான் பண்றதெல்லாம் இருக்கட்டும்.. நீ என்ன உன் ஆள் கூட கடலை வறுக்காம.. என்னைத் தேடி வந்திருக்க.."னு சக்தி நிவேதா கிட்ட கேட்கிறா.

"அது.. அது.."நிவேதா தடுமாற..

"எது.. எது.."னு சக்தி கிண்டல் பண்றா.

நிவேதா சக்தியை லேசா அடிச்சிட்டு.. "அவங்களுக்கு இந்த வாரம் night shift.. அதான்.."

"ம்.. அதான் இந்த சக்தி நியாபகம் வந்துடுச்சோ.."

"ம்.. ஆஹாம்.. அப்டி இல்லடி.."

"சரி.. விடு.. விடு.."

"நீ என்ன பண்ணிட்டு இருக்க.."

"Facebook.."

"சக்தி உன் கவிதை லாம் வாசிச்சே ரொம்ப நாளாச்சு.. கொடு.. நான் வாசிச்சிட்டு தர்றேன்.."

"நான் உருப்படியா ஒன்னும் எழுதலை நிவி.. நீ வேணா உதய்யோட கவிதை வாசி.. நல்லா இருக்கும்.."

"உதய் யாரு.."

"புது ப்ரெண்ட்.."

"சக்தி நீ ஏன் அம்முன்ற பேர்ல கவிதை எழுதுற.."னு நிவேதா கேட்கிறா.

"அதுக்கு ஒரு ரீசன் இருக்கு.."

"அதான் என்ன ரீசன்னு கேட்கிறேன்.."னு நிவேதா சக்தியை முறைக்கிறா.

"1st std படிக்கும் போது சாரதா டீச்சர் என்னை அம்முன்னு கூப்பிடுவாங்க.. அதனால அம்முன்ற பேர் பிடிக்கும். அதான்.."னு சக்தி சொல்றா.

"நம்புற மாதிரி இல்லையே.. வேற ஏதோ இருக்குன்னு எனக்கு தோணுது.."னு சக்தியை பார்க்கிறா நிவேதா.

சக்தி என்ன சொல்றதுனு தெரியாம கொஞ்ச நேரம் நிவேதாவை பார்க்கிறா.

"இந்திரா மேடம் என்னை ஒருதடவை அம்முன்னு கூப்பிட்டாங்க.."

"உனக்கு ஏன் சக்தி இந்திரா மேடமை அவ்ளோ பிடிச்சிருக்கு.."

"அவங்கள பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா.."னு சக்தி சொல்ல.. நிவேதா தலையாட்டுறா.

கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இருக்காங்க இரண்டு பேரும்..

சக்தி ஏதோ யோசிச்சிட்டே.. "நிவி உன் என்கேஜ்மென்ட்க்கு அப்பா கண்டிப்பா இந்திரா மேடமை கூப்பிடுவாங்கல்ல.. அப்ப அடுத்த வாரம் அவங்களை பார்க்கலாம்.."னு சந்தோஷமா சொல்றா.

"வாவ்.. சூப்பர்ல.."னு சக்தி சிரிச்சிட்டே சொல்ல.. நிவேதாவும் அவளை சிரிச்சிட்டே பார்க்கிறா.

இந்திரா group of companies.. அந்தக் கம்பெனில தான் சக்தியோட அப்பா வேலை பார்க்கிறாங்க.

அந்தக் கம்பெனியோட MD இந்திரா.. அவங்க தான் சக்தியோட role model, inspiration எல்லாம்.

அவங்கள சக்தி சின்ன வயசுல பார்த்திருக்கா. ஆனா அது அவளுக்கே நினைவில்லை. சக்தியோட அப்பா தான் அதப்பத்தி அவகிட்ட சொல்லிருக்காங்க.

கொஞ்ச நேரம் நிவேதா சக்தி கூட பேசிட்டு இருந்துட்டு gud ni8 சொல்லிட்டு எழுந்து போறா.

சக்தியும் படுக்கிறா. ஆனா தூக்கமே வரலை.

"இந்திரா மேடம் உன்னை தூக்கி.. அம்மு ம்மா..னு கொஞ்சுனாங்க.."னு முகமெல்லாம் சிரிப்போட சுந்தரம் சொன்னது சக்திக்கு நினைவுக்கு வருது.

ஆனா உண்மையிலே.. சக்திக்கு அது துளியும் நியாபகம் இல்லை.

"ஏன் அம்மு இப்டி பண்ற.."னு சக்தியோட மனசுக்குள்ள ஒரு குரல்..

ரொம்ப நெருக்கமான ஒருத்தர்.. உரிமையோட சொல்ற மாதிரி இருக்கும்.. அந்தக் குரல்..

யாரும் அப்டி நேரடியா சொன்னதா சக்திக்கு நினைவும் இல்லை. சொன்னதும் இல்லை.. அந்தக் குரல் தான் உண்மையான காரணம் சக்தி அம்முன்ற பேர் facebookல use பண்றதுக்கு.

ஆனா இதை சக்தி யாரோடவும் share பண்ணதில்லை.

அதையே யோசிச்சிட்டே சக்தி ரொம்ப நேரம் கழிச்சு தூங்குறா.

#யாரோடதா இருக்கும் அந்தக் குரல்..

அடியே.. அழகே..Where stories live. Discover now