"ம்.. கண்டிப்பா.."னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போனை கட் பண்றா சக்தி.

"எங்க போற சக்தி.."னு நிவேதா கேட்கிறா.

"ரகு ரெஸ்டாரண்ட் கூப்பிடுறான்.. போய்ட்டு வந்துடுறேன்.."

"என்ன எதுவும் ட்ரீட்டா.. ஓசில நல்லா சாப்பிட போற.."

"டீச்சர் உங்களுக்கு என்ன பத்தி தெரியாதா.. நான் எப்பவும் எங்கேயும் அடுத்தவங்க காசில சாப்பிட மாட்டேன்.. நான் சம்பாதிக்கிறேன்.. நானே வாங்கி தின்னுப்பேன்.."னு சக்தி நிவேதாகிட்ட சொல்லிட்டு ரகு சொன்ன ரெஸ்டாரண்ட்க்கு போறா.

அங்க ரகு சக்திக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கான். அவன் கொஞ்சம் பதற்றமா இருக்கிற மாதிரி சக்திக்கு தோணுது..

ஆனா கண்டுக்காத மாதிரி இருக்கிறா.

"ரகு காபி சொல்லலாமா.."னு கேட்கிறா சக்தி.

"ஆங்.. காபி ஓகே சக்தி.."னு சொல்றான் ரகு.

காபி வந்ததும் குடிக்க ஆரம்பிக்கிறா சக்தி.

"என்ன ரகு.. ஏன் ஒரு மாதிரி இருக்க.."

"ஆங்.. சக்தி.. அது.. அது.. எனக்கு ஐ.. ஐ.. லவ் யூ சக்தி.."னு ரகு திணறி சொல்லி முடிக்கிறான்.

அதைக் கேட்டதும் சக்தி ரகு முகத்தை பார்க்கிறா. ரகு தலையை கவிழ்த்தபடி உட்கார்ந்து இருக்கான்.

சக்தி ரகுவை பார்த்து.. "ரகு.. உனக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும்.. நீ எனக்கு நல்ல ப்ரெண்ட்.. அவ்ளோதான்.."அப்படினு சக்தி சொல்லிட்டு இருக்கும் போதே..

பக்கத்து டேபிள்ல இருந்த ஒருத்தன் எழுந்து வர்றான்.

"எல்லா பொண்ணுங்களுமே இப்டித்தான் இருப்பீங்களா.."னு சக்தியை பார்த்து கேட்கிறான்.

சக்திக்கு திடீர்னு ஒருத்தன் வந்து எதுக்கு இப்டி பேசுறான்னு புரியலை.

"நல்லா ஒரு பையன் கூட ரெஸ்டாரண்ட் ரெஸ்டாரெண்ட்டா சுத்த வேண்டியது.. அவன் காசுல ஓசில வாங்கி தின்னுட்டு.. அவன் லவ் பண்றேன்.. கல்யாணம் பண்ணிக்கலாம்னு வந்தா மட்டும்.. நீ எனக்கு ப்ரெண்ட்.. னு சொல்றது.. இதைத் தவிர உங்களுக்கு லாம் வேற எதுவுமே தெரியாதா.."னு அவன் சக்தியை பார்த்து கேட்கிறான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now