பிரகாசமான ப்ராவதன்,ஆனந்த களிப்பில்,அவளரருகே வந்து,"என்ன வேண்டும்.தயங்காமல் கேள்."

"இல்ல வேணாம்.உன்னால அது முடியாது "

"அய்யோ! தயவுசெய்து கேள்.மன்றாடுகிறேன் "

"நான் உன் கூட வரனும் னா,நீ .....நீ......வந்..து....vp யையும் என் அம்மாவையும் கொல்ல கூடாது.அப்புறம்,இந்த நாடு,பழையபடி மாறனும்.இங்க இருக்குற எல்லாரும் மனுசங்களா மறுபடி மாறனும்.இத நீ நிறைவேத்துற னு சத்தியம் பண்ணி கொடு.நான் உன் கூட வந்துருறேன்."

"நீ உன் உறவுகளுக்காக பரிந்து பேசுகிறாய் சரி.இவ்வுூர் மக்களுக்காக ஏன் கவலை கொள்கிறாய் "

ரியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,நகத்தை கடித்தபடி,"அது......வந்....."எச்சிலை முழுங்கி விட்டு,அவன் வழியிலே போக முடிவெடுத்து "நம்ம வாழ்க்கை நிம்மதியா இருக்கனும் ல.பகையை வளர்த்து வச்சிட்டு,அவங்க வாயில விழுந்திட்டு இருந்தா,நம்ம வாழ்க்கை எப்படி நிம்மதியா இருக்கும் .நீங்களே சொல்லுங்க ?"அவன் இன்னும் குழப்பத்திலேயே இருந்ததை பார்த்த ரியா,"அது............ ,நம்ம குழந்தைக்கு ஆபத்தாயிரும்.நம்ம பிள்ளை நல்லா வளரனும் ல "அந்த சொற்கள் வாயிலிருந்து வந்த பொழுதே நாக்கு கூசியது ரியாவிற்கு.ஆனால்,எதையும் வெளிக்காட்டாமல்,உண்மையாகவே அவனோடு வாழ ஆசைப்படுபவளாய் பேசினாள்.

அவனுக்கு அந்த சொற்கள் தேனாய் இனித்தது.

"சரி,நான் இவையனைத்தையும் செய்கிறேன்.நீ எப்பொழுது இங்கே வருவாய் ?"

"10 நாளுல இங்க வந்துருவேன் "கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள்.

"பிரமாதம் ! பிரமாதம் "என்றபடி ரியாவின் அருகே நடந்து வந்தான்.ரியா குறுகினாள்.மதிலில் ஒட்டிக் கொண்டான்.அவன் அவள் முகமருகே வந்தான்.இருவரின் முகங்களுக்கிடையே,23 இன்ச் இடைவெளி தான் இருந்தது.ரியா கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்,இராட்டினத்தில் பயணம் செய்யும் பொழுது நாம் எப்படி கண்களை மூடுவோம்.கற்பனை செய்து பாருங்கள்.அப்படி ,ஒரு வித பயத்தில்,தன் கண்களை மூடிக்கொண்டாள்.

மரணமா ? மர்மமா ?Onde histórias criam vida. Descubra agora