"ஹலோ!!"-நான்.

" சாரா.. எப்படி டீ இருக்க??"-ராஜி.

" இன்னும் ஒரு வருஷம் களிச்சு கேளேன்.. "-நான்.

" ஷங்கர் ... சூர்யா கிட்ட பேசிட்டேன்னு சொன்னார். அதான் கொஞ்சம் ரிலாக்ஸா விட்டுட்டேன். "

"ஓஓஓஓ.. சரி.. ஹாப்பியா இருக்கியா அவர் கூட??"-நான்.

"அஅ... ம்ம்.. அதுக்கென்ன?? நல்லா தான் இருக்கேன். "

"சஞ்சீவ் பத்தி என்ன நினைக்கிற நீ??"-

"இப்ப எதுக்குடீ அவன பத்தி கேக்குற??"

"இல்ல.. சும்மா சொல்லேன். "

"அவன் தான் துரோகின்னு தெரிஞ்சிருச்சே டீ."

"தெரிஞ்சிருச்சா???? "-நான்.

"என்ன சாரா அப்படி கேக்குற?? நான் அவன் கூட... ம்ம் .. ஷங்கர் கூட வாழ ஆரம்பிச்சிட்டேனே!!"

"ஓஓ.. அப்படியா?,"-நான்.

"இப்ப என்ன தான் டீ உன் பிரச்சனை??-ராஜி.

"பிரச்சனை எனக்கு இல்ல டீ அறிவு கெட்டவளே!! மதி கல்யாணம் கேன்சல் ஆன அன்னைக்கு எங்க போன.. சாப்பிட்டதுக்கு அப்புறம்??"-நான்.

"எங்கையும்... இல்ல இல்ல.. ஹாஸ்டல் போய் ஃபிரண்ட்ஸ பார்க்க போலாம்னு போனேன். ஷங்கர் தான்டீ கூட்டிட்டு போனார். "

"உள்ள போய் என்ன பண்ண??"

"இப்ப உனக்கு என்ன.. நான் சஞ்சீவ மீட் பண்ணது உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுக்கு ஏன் இப்படி சுத்தி சுத்தி பேசிட்டு இருக்க??"-ராஜி.

"வெக்கமா இல்ல?? கல்யாணம் ஆன பொண்ணு தானே டீ நீ??"

"ம்ச்.. என்ன பேசினேன்னு தெரிஞ்சிட்டு என்ன திட்டு"-ராஜி.

" நீ வேற என்ன பேசிரபோற.. ? எப்ப ஓடி போலாம்னு கேட்டிருப்ப??"-நான்.

" சாரதா.. அவ்ளோதான். எதையுமே தெரிஞ்சிக்காம பேசாத. நான் தான் அவன வர சொன்னேன். இங்க இருந்து அன்னைக்கு ஷங்கர் கூட போறப்ப .. இங்க இருந்தா எல்லாரும் மாறி மாறி எதாச்சும் அட்வைஸ் பண்ணுவீங்கன்னு தான் கிளம்பி போனேன். என்னால டக்குன்னு லாம் மாறி அவன் கூட வாழ முடியாது. இப்பவும் அதே தான் சொல்றேன். ஆனா அதுக்காக சஞ்சீவ் கூட ஓடி போக போறேன்னு நினைக்காத. அவன்கிட்ட தெளிவா பேசிட்டேன். இனி என்ன டிஸ்டர்ப் பண்ணாதன்னு. "-ராஜி

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now