"விடு.. விடு.."

    இவ்ளோ தான் பேசினோம் . இதே வார்த்தைகள். நடந்து 6 வருஷம் ஆச்சு. இன்னும் என்னால மறக்கு முடில.

     அடுத்த நாள் எல்லாம் ஊருக்கு கிளம்புறதா இருந்துச்சு. நான் ரெட் சுடி போட்டிருந்தேன். அவனும் ரெட் ஷர்ட்.. சோ ஸ்வீட்ல!!!
   
     என்னமோ தெரில .. ஃபர்ஸ்ட் டைம் கவிதை எழுதனும்னு தோனுச்சு. பாட்டி வீட்டுல தான் இருந்தோம் மாடில போய் எழுத ஆரம்பிச்சேன்.

     ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே அவன் தான் இத முதல்ல படிக்கனும்னு நினைச்சு தான் எழுதினேன்.

    நாலு கவிதை தான் . அது கவிதையான்னு கூட எனக்கு தெரியாது. என் மனசுல இருந்த ஃபீலிங். அவ்ளோதான்.

     திடீர்னு எங்க தாய்மாமா வும் அத்தையும் ஊருக்கு கிளம்புறத சொல்லுறதுக்காக என்னை  கூப்பிட்டாங்க. நான் ஒரு கூறு கெட்டவ அந்த நோட்டையும் எடுத்திட்டே வந்துட்டேன். கிளம்புறேன்னு சொன்ன அத்தை நோட்ட பார்த்திட்டு வாங்கிட்டாங்க.

    ஊருல இருக்க எல்லா சாமி பேரும் என் வாய்க்குள்ள தானா ஓட ஆரம்பிச்சது. பயந்துட்டே இருந்தேன். பட் அவங்க பேஜ திருப்புறதுக்குள்ள மாமா கூப்பிட்டாங்க.

    ஆனா அந்த நேரம் அவன் வருவான்னு  நான் நினைக்கல. கடைசி நிமிஷத்துல மேஜிக் நட்காதான்னு எல்லாரும் ஏங்குவாங்கல்ல.. அப்படிபட்ட ஒரு நொடி தான் .நான் கேக்காமலே நடந்த விஷயம் அது.

    அந்த சமயத்துல அவன்ட்ட நோட்ட குடுக்கனும்னு நான் நினைக்கல. நான் அதுக்கு ரெடி ஆகவும் இல்லை. ப்ரபோஸ் பண்றப்ப தான் குடுக்கனும்னு முடிவு பண்ணிருந்தேன். ஆனா.. கடவுள் வேற மாதிரி நினைச்சிட்டாரு போல.

    அவன் கைக்கு நோட் போனதுமே ஹார்ட் மேலையும் கீழயும் போற மாதிரி இருந்துச்சு. நடுங்க ஆரம்பிச்சிருச்சு.

     எல்லாத்தையும் படிச்சிட்டு சிரிச்சிட்டே

  "யாருக்கு இது??"

   தெரிஞ்சு கேக்குறானா தெரியாமா கேக்குறானா?? சிலிர்த்திருச்சு. எதும் சொல்ல முடில..

காதலில் விழுந்தேன்!!Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα