யாரு தான் இந்த கமலேஷ்..?

Magsimula sa umpisa
                                    

அம்மா.... இன்னும் கொஞ்ச நேரத்துல dinner ரெடி ஆகிடும்... நீங்க பேசிகிட்டு இருங்க.. நான் இதோ வந்துடுறேன்... என்றவள் சமையலறையை நோக்கி ஓட.... தீரன்னுக்கு ஏனோ ஒரு வித இறுக்கமான மனநிலை இருப்பது போல தோன்றியது..

தியா நான் எதாவது உதவி செய்ய வரவா... என்று பொம்மி ஹாலில் அமர்ந்தப்படியே கேக்க....

வேணா மா... நான் முடிச்சிட்டேன்... என்று பதில் தந்தவள்... வேகமாக இரவு உணவை தயார் செய்து கொண்டு இருந்தாள்...

இவர்கள் இருவரின் உரையாடலை காதில் வாங்காமல் தீரன் தன் செல் போனின் game விளையாடி கொண்டு இருக்க.... பொம்மிக்கு அவரின் சொந்தகார பெண்ணிடம் இருந்து கைபேசி மூலம் அழைப்பு வர... தன் போனை எடுத்து கொண்டு பால்கனி பக்கம் சென்றார் பொம்மி....

சில நொடிகள் கடந்த நிலையில் சமையல் அறையில் இருந்து வந்த தியா.... "தீரா சாப்பிடலாமா.." என்று கேக்க... அவள் முகத்தை பார்த்தவன்....

அம்மா போன் பேசிகிட்டு இருக்காங்க... வந்ததும் சாப்பிடலாம்.. நீ வந்து இப்படி Fan ல உக்காரு...என்றவன் மீண்டும் தன் விளையாடில் கவனம் செலுத்தினான்...

தீரா... நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா... என்று தியா தயக்கத்துடன் கேக்க..

தன் கையில் இருந்த போனை மேசை மேல் வைத்தவன்.. "ம்.. கோவமா இல்ல... பட் வருத்தமா இருக்கேன்"..என்றவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அமைதி காத்தான்...

ம்... நான் நினைச்சேன்... கண்டிப்பா நீங்க என் மேல கோவமாகவோ வருத்தமாகவோ இருப்பிங்கன்னு நான் முன்னதாகவே நினைச்சேன்.... என்றவள் மேலும் வார்த்தையை வளர்க்காமல் அமைதி காத்தாள்...

ஓஹோ.... அப்போ நான் வருத்தமா நினைப்பேன்னு தெரிந்து தான் நீ அப்படி என்னை insult பண்ற மாதிரி பேசுனியா.... என்று தீரன் கேக்க.....

என்ன.. நான் உங்கள insult பன்னென்னா... இது எப்போ... என்று சிரித்து கொண்டே கேட்டாள் தியா ...

பின்ன.. நான் உன்கூட stay பண்ணனும்னு நானா முடிவு பண்ணி உன்கிட்ட சொல்லல... காமினி தான் சொல்ல சொன்னாள்... ஆனா நீ என்னை இன்சல்ட் பண்ற மாதிரி பேசிட்ட... என்றவன்... சிறு பிள்ளையை போல இவளிடம் கோவித்து கொள்ள....

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Tahanan ng mga kuwento. Tumuklas ngayon