தியா💞ழினி

Start from the beginning
                                    

பொம்மி - அதெல்லாம் உனக்குன்னு ஒரு பொண்டாட்டி வந்தா உனக்கு அவங்கள பிடிச்சிடும் பா.... உன் அத்த மகளை சின்னதுல இருந்தே உனக்குன்னு தானே பேசி வச்சிருக்காங்க... போதாக்குறைக்கு உங்க மாமா வேற, கட்சில பெரிய ஆளு... உங்க மாமா மகளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா.... உங்க அப்பாவுக்கும் நல்ல பதவி கிடைக்கும்..

தீரத்தன் - ஓ.... இப்போ கூட என் அப்பா இந்த கல்யாணத்தை ஒரு பிஸ்னஸ் போல தான் டீல் பண்ண பாக்குறாரா...

பொம்மி - அப்டி இல்ல தம்பி... நான் என்ன சொல்லறேனா....

தீரத்தன் - இப்போ என்ன மா.... நான் டிம்பளை கல்யாணம் பண்ணிக்கணுமா...

பொம்மி - ம் ஆமா பா...

தீரத்தன் - சரி நான் யோசிக்கிறேன்..

பொம்மி - என்ன... யோசிக்கிறீயா.....

தீரத்தன் - சரி சரி... யோசிக்கல... நீங்க சொன்னா, நான் யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்..

பொம்மி - தம்பி... இந்த காலத்துல பெற்ற பிள்ளைங்க கூட.... என் கல்யாண விஷயத்துல எல்லாம் நீங்க தலையிடாதீங்கன்னு தான் சொல்லுவாங்க.... ஆனா ஒரு வேலை காரி நான்.... என் பேச்சுக்கு நீ மரியாதை தந்து உன் விருப்பு வெறுப்பை எனக்காக விட்டு தரது எல்லாம் பெரிய விஷயம் பா....

தீரத்தன் - அம்மா... நான் உங்கள என்னோட அம்மாவா தான் நினைக்கிறேன்.... So நீங்க இதுக்கெல்லாம் worry பண்ணாம...என் அப்பா.... sorry....அந்த பிஸ்னஸ் man கிட்ட... நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்னு சொல்லிடுங்க ....

பொம்மி - ரொம்ப சந்தோஷம் தம்பி, நான் சொல்ற எல்லா விஷயத்தையும் நீ ஒன்னு விடாம கேக்குற.... ஆனா ஒரு விஷயம் மட்டும் நீ உன் கிட்ட இருந்து மாத்திக்கவே மாட்டுற....அதுதான் தம்பி எனக்கு கஷ்டமா இருக்கு..

தீரத்தன் - ம்... I know அம்மா... நான் ரேஸ் போற விஷயத்தை பற்றி தானே பேசுறீங்க...

பொம்மி - அது மட்டும் இல்ல பா.... உன் friends அந்த நாலு பேர் கூட சேர்ந்துகிட்டு நீ பெட் கட்டி தேவையில்லாத விஷயமெல்லாம் பண்றது கூட எனக்கு பிடிக்கல...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now