"பரிதாபத்துல மன்னிப்பு கேக்கலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது ம்மா" 

மகனின் எண்ணம் புரிய வந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்தி, "நீ சரின்னு சொல்லிட்ட, நீ பேசுன பேச்சுக்கு வைஷ்ணவி என்ன சொல்லுறான்னு பாக்கலாம்" என்றார் சற்று கோபத்துடன். 

"ம்மா எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க" கண்கள் சுருங்கி அன்னையிடம் கெஞ்சினான், "நான் வைஷ்ணவிகிட்ட பேசணும்" 

*****************

கழுத்து வலி நிச்சயம் வந்தேவிடும் என்னும் அளவிற்கு முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி அமர்ந்தவள் தான் வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது தொட்டு இப்பொழுது மலை ஏறும் நேரம் கூட வலது பக்கம் திருப்பவே இல்லை. 

மகனிடம் மாலை பேசியவர் அன்று இரவே மருமகளுக்கு அழைத்து கார்த்தியின் செயல்களுக்கு மன்னிப்பை வேண்டியவர் அவனுடைய சம்மதத்தையும் கூறிவிட, "வேணாம் உங்க பையன்னுக்கு வேற பொண்ணு பாருங்க" என்றாள் இறங்கி போன குரலில். 

அலைபேசியில் பேச முடியாத காரணத்தால் நாளை பண்பொழி திருமலை முருகன் கோவிலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று கூறியவர் இன்று காலை அவளுக்காக கீழே காத்திருந்தார். 

 தாமதமாக எழுந்தவள் காலை உணவை கூட உண்ணாமல் மஹாலக்ஷ்மி காத்திருப்பதை பார்த்து ஓடி வந்தாள் அன்னையிடம் வாசலில் நின்றே சொல்லிவிட்டு. அடர் அரக்கு நிற முழு கை குர்த்தாவும் அதே நிற பாண்ட் அணிந்து, கருப்பு நிற பிரிண்டெட் துப்பட்டா என அவள் நிறத்திற்கு அந்த உடை இன்னும் எடுப்பாய் இருந்தது. 

"கிளம்பலாம் த்தை" என நடந்தவளை நிறுத்தியவர் முன்பு தன்னுடைய காரினை நிறுத்தினான் கார்த்தி. அவளை பார்த்துக்கொண்டே முன் கதவினை எக்கி திறந்துவிட்டான். 

"இங்க இருக்க ஊருக்கு ஏன் வண்டி? வாங்க நாம பஸ்ல போகலாம் இல்லனா ஷேர் ஆட்டோ புடிக்கலாம்" அவனை முற்றிலும் தவிர்த்துவிட முயன்றாள். 

"எனக்கு முட்டி வலி வைஷு மா. வா வண்டிலேயே போய்டலாம்" என அவளை வம்படியாக வண்டியில் ஏற்றிக்கொண்டு, இதோ அந்த விசாலமான வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தினான். 

டிங் டாங் காதல்Where stories live. Discover now