டிங் டாங் - 10

Magsimula sa umpisa
                                    

உண்மையிலேயே தயக்கம் தான், முதல் முதலில் தந்தை, சகோதரன் அல்லாது ஒரு ஆணுடன் வாகனத்தில் செல்கிறாள் தயக்கம் இருக்க தான் செய்தது. பிறகும் இவனுடன் தான் மொத்த காலத்தையும் கடத்த போகிறோம் என்ற தைரியம் உடனே வளர்ந்துகொண்டது. 

உடனே சம்மதித்து விட கூடாதல்லவா, "உங்களுக்கு ஏன் கார்த்திக் சிரமம்? நானே போய்க்கிறேன்" பவ்யமாக பேசினாள். 

"இல்லங்க மயக்கம் வருதுன்னு சொல்றிங்க. தனியா ஆட்டோல அனுப்பி வைக்க மனசு வரல. வாங்க" இந்த முறை மறுப்பு தெரிவிக்காமல் ஏறி அமர்ந்துகொண்டாள். 

சரியாக வாங்கி புறப்பட்ட சமயம் இவளை பார்த்துவிட்ட சார்லஸ் முகம் எல்லாம் புன்னகையுடன், "வைஷ்ணவிவிவி..." கிண்டல் செய்ய, அவனை பார்த்து முறைத்தவள், 'போடா பட்டி' முணுமுணுத்து சென்றாள். 

பத்தே நிமிடத்தில் கோவிலை அடைந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அவனும் உடன் வருவான் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவள். 

"கோவிலுக்கு அடிக்கடி வருவீங்களா?" 

அவன் கண்கள் சற்று தூரத்தில் இரைச்சலோடு பலமாய் ஆர்ப்பரித்து விழும் வெள்ளி நீரை ஊருக்கே கொடுக்கும் அருவியில் நின்றது, "ம்ம்ம் வருவேன்" பார்வையை அவளிடம் திருப்பி மெல்லிய புன்னகையை கொடுத்து நடந்தான். 

அவளோ அந்த மெல்லிய சிரிப்பில் சரிந்திருந்தாள். மனதளவில் இப்பொழுதும் இந்த உணர்விற்கு பெயர் காதல் என்று சொல்ல முடியவில்லை. தோழியை, அவனின் தாயை சமாளிக்கவே அந்த வார்த்தை தேவைப்பட்டது. 

அதையும் மீறி அவன் மேல் தோன்றியிருக்கும் இந்த உணர்வில் அவனை எவரிடமுட்டும் விட்டுக்கொடுக்க கூடாதென்று கடினமாக மனம் உரைத்தது. இந்த உணர்விற்கு காதல் என்னும் பொருளும் இருக்கலாம் அதை உணர அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. 

கோவில் சன்னிதானத்திற்குள் சென்ற வைஷ்ணவிக்கு மனதில் சொல்ல முடியாத நிம்மதி. இருவரும் இணைந்து முதல் முதலில் வந்த இடம் அவள் மனதிற்கு பிடித்த குற்றாலநாதனின் சன்னிதானம். 

டிங் டாங் காதல்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon