அச்சச்சோ, தப்புப்பண்ணிட்டேனே

82 1 0
                                    

Dear Youth Friends, "நெஞ்சைத் தொட்டு" Part-I உங்களில் அநேகருக்கு பிரயோஜனமாக இருந்தது என்று கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும்!


மாற்றங்களே மனித வாழ்க்கையின் அடிப்படை என்று அறிவியலாளர் கூறுகின்றனர். தொடர்ந்தேச்சியாக ஒரே இடத்தில் இருப்பதும், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதும் நம்மை வெறுப்புக்கு உள்ளாக்குகிறது. வாலிபரும் இதற்கு விலக்கல்ல. சரிதானே! ஆனால் இதில் ஒரு சிக்கல் — அது என்ன? நாம் விரும்பும் மாற்றங்கள் நன்மை பயப்பதாகவும் அமையலாம். சில வேளைகளில் அதே மாற்றங்கள் நம்மை படுகுழியிலும் விழத்தள்ளலாம். நாம் மாற்றங்களை எதிர் நோக்கும்போதும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போதும், கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. 


உதாரணமாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜா இல்லாத காலத்தில் நியாதிபதிகளும், தீர்க்கதரிசிகளும் ஜனங்களை வழி நடத்தி சென்றார்கள். ஆனால் ஜனங்களுக்கு திடீரென ஒரு ஆசை. மற்ற நாட்டு மக்களுக்கு ராஜா இருப்பதைப் போல தங்களுக்கும் வேண்டுமென துடியாய் துடித்தார்கள். தொலைநோக்குப் பார்வை (Long Term Vision) அற்று, வெறுமனே தர்ணா செய்த அவர்களை தீர்க்கதரிசி சாமுவேல் மூலமாக கர்த்தர் எச்சரித்தார். இருந்தாலும் கோஷங்கள் தொடர்ந்தன. முடிவு — ராஜாக்கள் வந்தார்கள். அதன் பின்னர் நடந்தவைகளெல்லாம் வரலாறு!


மேற்கண்ட சம்பவம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடமென்ன? மாற்றங்களுக்காக ஏங்கும் போது கொஞ்சமாவது காத்திருந்து, விசாரித்து, ஜெபித்து செயல்பட வேண்டும். எதையும் "டக்"கென செய்து விட்டு, பின்னர் "திக், திக்" கென நெஞ்சம் பதைபதைக்கும் வாலிப நண்பரே! மாற்றங்களை எதிர்நோக்குவதில் தவறில்லை. அது எங்கே கொண்டு போய் சேர்க்கும் என்று கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்கலாமே! அது நல்லது தானே!!


பைபிளில் சூப்பரான ஐடியாக்கள் உள்ளன. உனக்கு அது தெரியுமா? வேதாகம வசனங்கள் உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். நம்புகிறாயா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் — எத்தனை முறை எதற்காகவோ ஆசைப்பட்டு, சட்டென செயல்பட்டதினால் "அச்சச்சோ, தப்புப்பண்ணிட்டேனே" என்று உன்னையே நீ நொந்து கொண்ட அனுபவங்கள் உண்டு தானே!


கடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி வரும் நாட்களில் நமது பைபிள் ஹீரோ இயேசு கிறிஸ்து உன்னோடு பேச கொஞ்சம் நேரத்தை தினமும் ஒதுக்கி வை! எப்போ இயேசு பேசுவார்? நீ அமைதியாக உட்கார்ந்து பரிசுத்த பைபிளைத் திறந்து "ஆண்டவரே என்னோடு பேசும்" என்று ஒரு குட்டி ஜெபம் செய்து விட்டு வாசிக்க ஆரம்பித்தால், தெளிவாக, அழகாக, Bestஆக ஆண்டவர் உன்னோடு பேசுவார். எப்போது மாற வேண்டும், எப்படி மாற வேண்டும், யாருக்காக மாற வேண்டும், எதிலெல்லாம் மாறக்கூடாது எல்லாவற்றையும் சூப்பராக சொல்லிக் கொடுப்பார்.


இதுதான் இந்த பகுதிக்கான Home Work. "நெஞ்சைத் தொட்டு" Part-3 வாசிக்கு முன், "நான் எவ்வளவு தெளிவாக மாறி விட்டேன்" என்று உன்னையே நீ மெச்சிக் கொள்ளலாம்! Listen to Jesus — your best friend ever. Your life will never be the same again!


மீண்டும் சந்திப்போம். அப்போது நெஞ்சைத் தொட்டு இன்னும் நிறைய சொல்வேன். சரிதானே! . . .


NENJAI THOTTUWhere stories live. Discover now