Mr. Anonymous
இடம் : உதயா வீடு நேரம் :காலை
உதயா மெல்ல நடந்து வந்து உட்காருகிறான்..
அவன் அருகில் இன்னொருவன் வந்து நிற்கிறான்..
அவன் பெயர் காசி..
உதயாவும் காசியும் பேசத் தொடங்குகிறார்கள்..
உதயா:வர வர அப்பா நம்ம கிட்ட சரியா பேச மாட்டேங்கிறாரு காசி கவனிச்சியா?
காசி : ஆமா அண்ணே அதுக்கு காரணம் யார்னு தெரியுமா?
உதயா : யாரு காசி ?
காசி : அது நம்ம சத்யா பய தான்.. நம்ம பண்ற எல்லாத்தையும் ஒன்னு விடாம அப்படியே அய்யாகிட்ட சொல்லி வச்சுட்டான்.. அதான் அய்யா கடுப்புல இருக்காரு..
உதயா கோபத்துடன் முறைத்துக்கொண்டே.. இருக்கட்டும் அவனை நேரம் வரும்போது பாத்துக்கலாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான்..
இடம் : உதயா வீடு நேரம் :மாலை
மாலை வீட்டுக்கு வந்ததும் சத்யாவை அழைத்து பேசத்தொடங்குகிறான் உதயா.
உதயா: சத்யா இங்க வா..
சத்யா : சொல்லுங்க அண்ணே..
உதயா : கலெக்சன் எல்லாம் வந்துருச்சா? எல்லாரும் கரெக்டா பணம் குடுத்துடாங்களா?
சத்யா : ஆமாண்ணே எல்லாரும் கரெக்டா குடுத்துடாங்க.. மூணு லட்சம் வசூல் ஆகிருக்குண்ணே..
உதயா : சரி நம்ம Opposite Party 30 லட்சம் பணம் கேட்டு இருந்தாங்க..நம்ம கையில குடுத்தா வாங்க மாட்டாங்க .. அப்பாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா திட்டுவாரு.. நீ அந்த 3 லட்சத்தோட இன்னும் 27 லட்சம் தரேன் அதையும் சேர்த்து உன்னோட அக்கவுண்ட்ல போட்டு வச்சுரு..நா சொல்லும்போது அவங்களுக்கு மாத்தி விட்ரு..
சத்யாவும் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்..
இரண்டு நாட்கள் கடந்தது..
KAMU SEDANG MEMBACA
Mr.Anonymous
Misteri / Thrillerஅடையாளமில்லா ஒரு திருடன் , ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் வாழ்வில் உண்டாக்கும் ரணம்..
