19. எப்போது என்னுள்ளே காதல் வந்தது?

488 16 0
                                    

"பார்கவி. வாங்க இனியன் அம்மா உங்களுக்கும் கால் பண்ணிட்டாங்களா?" என்று யூகித்து கேட்டான் அகிலேஷ்.

"ஆமா " என்று அவனிடம் கூறிவிட்டு இனியனை பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்.

அது புரியாமல் அகிலேஷ், "நான் அப்பவே aunty கிட்ட சொன்னேன். ஒன்னும் இல்லனு" என்று அங்கு நிலவிய கடுமையான சூழலை போக்க எண்ணி பேசினான்.

உடனே பார்கவி, "இது சின்ன பிரச்சினையா அகிலேஷ்?" என்று கோபமாக கேட்க, அகிலேஷிற்கு என்ன கூறுவதென புரியாமல் விழித்தான்.

அதே நேரம் மருத்துவர் செவிலியருடன் வந்து இவனை மீண்டும் பரிசோதித்தார். அவரிடம் தகவல் கேட்க அவர் கால் ஒருவாரத்தில் சரியாகிவிடும் என்றும் கை சரியாக குறைந்தது ஒரு மாதமாகும் என்றும் கூறினார். இப்போதைக்கு எடுத்துக் கொள்ள சில மருந்துகளும் பரிந்துரைக்க அதை வாங்கி வருவதாக கூறி அகிலேஷ் தப்பித்தான்.

சௌர்ணிகாவிடம் இதை மேலோட்டமாக கூறி ஆறுதலாக பேசி அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அவன் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து அவனை உற்று நோக்கினாள்.

"பாரு.." என்று அவன் துவங்க,

"பேசாத இனியன். அப்றம் நான் பயங்கரமா திட்டிட போறேன்" என்றாள்.

"அம்மா உன்ன இந்த நேரத்தில disturb பண்ணிருக்க கூடாது. தேவ இல்லாத அலைச்சல்" என்று அவளுக்காக அவன் பேச அது மேலும் அவளை எரிச்சலாக்கியது.

"ஓஹோ அப்ப aunty கூட என்கிட்ட சொல்லிருக்க கூடாது. ஒரு friend ஆ இல்லாட்டியும் atleast கொஞ்ச நாள் பேசுன பழக்கத்துக்காகவாவது என்கிட்ட inform பண்ணிருக்கலாம்ல. எங்க வீடு பக்கத்ல accident ஆகிருக்கு. ஆனா எனக்கு ஒரு கால் பண்ணனும்னு உனக்கு தோனலலே" என்று உண்மையான வருத்தத்துடன் பேசினாள்.

அவனுக்கு அவளது அக்கரை புரிந்தது. அவளிடம் இது போன்ற அன்பை அவன் எதிர்பார்க்கவில்லை. முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, "சாரி பாரு உன்ன disturb பண்ண விரும்பல. மத்தபடி நீ எப்போதும் எனக்கு special தான்" என்று மனதில் தோன்றியதை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.

மனதை தீண்டி செல்லாதேWhere stories live. Discover now