5. என் முதல் ஹீரோ

794 26 0
                                    

இரவு வந்தவுடன் தன் தந்தையிடம் கூறி அவரின் அனுமதியைப் பெற்றாள். சுயமாக சம்பாதித்த பின்னரும் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட அவரிடம் அனுமதி பெறாமல் துவங்க மாட்டாள் பார்கவி. தந்தையாகவும் தாயாகவும் மாறி மாறி அன்பைப் பொழிந்தவராயிற்றே. அவள் கேட்டு இதுவரை ஒன்றுகூட மறுத்ததில்லை. அவருடைய அனைத்து நிகழ்வுகளிலும் பார்கவியின் விருப்பங்கள் தான் அடங்கி இருக்கும். அந்த அளவு இருவரின் உறவு மேலோங்கி நிற்கும்.

அடுத்த நாள் மாலை 5 மணி அளவில்,

"ப்பா இந்த  watch எப்படி இருக்குன்னு சொல்லுங்க" என ஒரு புத்தம் புதிய விலைமதிப்புள்ள கடிகாரத்தை நீட்டினாள் பார்க்கவி.

" அட நல்லா இருக்கே டா.. என்ன நம்ம அருணுக்காக வா.. கொஞ்சம் costly ஆ தெரியுதே ஆனா "என்று கேட்க,

"ஆமாப்பா..அங்க எத்தனையோ பெரிய பெரிய ஆளுங்க வருவாங்க. பகட்டா இல்லேன்னாலும் நம்மள குறைவா காட்டிகாத மாதிரி இருக்கணும்ல. அதுவுமில்லாம இந்த Brand அருணுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே இருந்தது friends கூட வெளியில போறப்போ தொலைஞ்சிடுச்சினு feel பண்ணி சொல்லிட்டு இருந்தான் அன்னைக்கே. அதான் வாங்கிட்டேன்" என்று சிரித்தவளைக் கண்டு அவர் மனம் பூரித்தது.

தான் தன்மானத்தை பெரிதாக நினைப்பதை உணர்ந்து அவள் செய்யும் சிறு சிறு செயல்கள் அவரது மனதை குளிர்விக்கும். எப்போதுமே இப்படிதான் தன் நிலமைக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு செயலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டாள். அப்படி ஈடுபடுத்திக் கொண்டால் முழு முயற்சியோடு அதனை சிறப்பாக்கி அவரை உயர்வு படுத்து விடுவாள்.

பார்ட்டிக்கு செல்லும் நாளும் விரைந்து வந்தது. அன்று காலை 8 மணி அளவில்,

"ப்பா.. மணியாச்சு பா.. உங்களுக்கு வேற annual day function போகனும்ல. சாப்பாடு ரெடியா இல்லையா ?" என்று பார்க்கவி சமையலறை நோக்கி சத்தம் கொடுத்தாள்.

உள்ளே பரபரப்பாக வேலையைச் செய்தவாரே மகளுக்கு நெய் தோசை சுட்டு எடுத்து வந்தார் அவளின் அன்பு தந்தை.

"வந்துட்டேன் வந்துட்டேன்" என்று சொல்லிய வண்ணம் தட்டில் 3 முறுகலான நெய் தோசையையும் தக்காளி சட்னியும் ஊத்தி மகளின் கையில் கொடுத்தார்.

"இந்தா இதை சாப்பிடு. இன்னொன்னு வேணும்னா சொல்லு ஊத்திட்றேன்" என்றார்.

அன்னை இறந்ததிலிருந்து தானே சமையலறைக்குள் புகுந்து நண்பர்களிடமிருந்து பல்வேறு உணவு செய்முறைகளை கற்றுக்கொண்டு பார்த்து பார்த்து தனக்காக சமைக்கும் தந்தை உருவில் தோன்றும் அன்னையை நினைத்த போது அவளுக்கு மெய்சிலிர்த்தது.

'இதுவரை என்ன ஒரு தடவை கூட கிச்சன் உள்ள விட்டதில்லை. கேட்டா புருஷன் வீட்டுக்கு போனப்புறம் நீதானே சமைக்கப் போறே. அதனால அது வர இது my department. உனக்கு வர permission இல்லனு dialogue வேற..ப்பா உங்கள விட்டுட்டு எப்படி பா நான் இன்னொரு வீட்டுக்கு போக முடியும். அம்மா போன அப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ண எல்லாரும் வற்புறுத்தின போதெல்லாம் நான் தான் உங்க வாழ்க்கைனு சொல்லி இன்னி வர அதை follow பண்ணிருக்கீங்களே. நிஜமாவே நீங்க great. ஒன்னு எனக்கு கல்யாணமே வேணாம். அப்படி இல்லாட்டி வீட்டுலயே இருக்கரமாறி ஒருத்தர் வரனும். இரண்டாவதுக்கு chances ரொம்பவே கம்மி. நீங்க நிச்சயம் சம்மதிக்க மாட்டீங்க. So first choice confirm தான்'

என்று சிந்தனையில் இருந்தவளை அவரது குரல் தடுத்து நிகழ் உலகிற்கு திருப்பியது.

"என்ன காலையிலேயே கனவா ! எனக்கு நேரமாச்சு வர்றேன்மா" என்றபடியே சென்றார்.

உண்டு முடித்து சுத்தம் செய்துவிட்டு நாளை office க்கு தேவையான முக்கிய வேலைகளை செய்யத் துவங்கினாள். அப்படியே நேரம் மதியம் ஒரு மணியை கடந்தது.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் காலையிலேயே தனக்காக சமைத்த வைக்கப்பட்டிருந்த முட்டை குருமாவையும் சாதத்தையும் போட்டு உண்டு முடித்தாள். 3 மணி அளவில் பார்ட்டிக்கு அணிந்து செல்ல இள நீல நிற சுடிதார் போட்டு சரிபார்த்தாள். கச்சிதமாக பொருந்திய உடன் அதற்கு ஏற்றவாறு சிறு வேலைப்பாடுடைய வெள்ளை நிற அணிகலன்களையும் அணிந்து கொண்டாள். பின்னர் நண்பர்களை அழைத்து அவர்களையும் வர சொல்லிவிட்டு தலைமுடியை கிளிப்பால் அடக்கினாள். சிறிது நேரத்தில் நண்பர்களும் வந்துவிட அவர்களோடு அரட்டை அடித்தவாறே நாலரை மணியளவில் அனைவரும் கிளம்பினர்.

இனிய சந்திப்பு இனிதே நிகழும்..
______________________________________

Pidichirntha marakama vote panunga makkale😍

மனதை தீண்டி செல்லாதேWhere stories live. Discover now