ஒளி 14

465 27 3
                                    

விஷ்ணு மயக்கத்திலிருந்து விடுபட்டு விட்டாள் என்ற விஷயத்தை நர்ஸ் கூறியவுடன் மகிழினி மித்ரன் விஷ்வா ஹரி 4 பேரும் உள்ளே செல்ல தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழுந்தனர். அதைப் பார்த்த மகிழினி மற்ற மூவரையும் பார்த்து "நீங்க மூணு பேரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் போய் வேலை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிட்டு உங்களை அழைத்துச் செல்கிறேன் அதுவரை இங்கேயே காத்திருங்கள்" என்று கூறினாள்.

அவள் கூறுவதில் உள்ள உண்மை மற்ற மூவருக்கும் புரிந்தது கண்டிப்பாக மூவரையும் விஷ்ணுவிற்கு அடையாளம் தெரிய வாய்ப்பு இல்லை அதனால் மகி பேசிய பிறகு தாங்கள் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு வெளியே காத்திருந்தனர்.

உள்ளே சென்ற மகிழினி அங்கே வாசலையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள். விஷ்ணுவும் பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மகிழினி விஷ்ணுவைப் பார்த்து "விஷ்ணு நம் தொழில் விரிவாக்கம் அடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்து இருக்கிறது. நீ முதலில் கண்விழித்து பார்க்கும் போது என் அருகில் மூவர் நின்றுகொண்டு இருந்தனர் நீ பார்த்து இருப்பாய் அல்லவா அதில் ஒருவர் தான் நான் கூறிய ஹரி அவருடைய அண்ணன் இரண்டு பேர் தான் மீதி இருந்த மற்ற இருவரும் ஒருவர் பெயர் விஷ்வா இன்னொருவர் பெயர் தேவ்.

அவர்கள் பெரிய கம்பெனி வைத்து நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் கம்பெனியுடன் நாம் செய்யும் வேலைகள் ஒன்று இணைந்தால் நம்முடன் வேலை செய்யும் மற்ற அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார். எனக்கும் அவர் கூறிய அனைத்தும் சரி எனப்பட்டது அதேபோல் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஒப்பந்த பத்திரம் தயார் செய்தார். அனைத்தையும் படித்து பார்த்த போது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. என்ன ஒரு விஷயம் என்றாள் நாம் நமது வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு பதிலாக அவருடைய கம்பெனி சென்று வேலை செய்ய வேண்டும். அப்படி செல்லும்போது கண்டிப்பாக நமக்கு புது புது ஆள்களின் அறிமுகம் கிடைக்கும் அதை வைத்து நம் ஊரிலுள்ள மற்ற இளைஞர்கள் தங்களுடைய வாழ்வு தரத்தை உயர்த்திக் கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதே போல் எப்பொழுதும் இறுதி முடிவை நாம் எடுப்பது போல் தான் அங்கும் எடுப்போம் ஆனால் நம்முடைய முடிவை ஒருமுறை அவர் பரிசீலித்து நாம் அதை செய்யலாமா வேண்டாமா என்று கூறுவார் வேண்டாம் என்று அவர் கூறினால் அதற்கு தகுந்த ஆதாரத்தோடு விளக்கமும் கூறுவார். அதனால் நீயும் இதற்கு எந்தவித மறுப்பும் இல்லாமல் சம்மதம் கூறுவாய் என்று நம்பி நான் கையெழுத்து இட்டு விட்டேன் நீ என்ன கூறுகிறாய் உனக்கு இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா" என்று கேட்டாள்.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now