ஒளி 12

590 27 12
                                    

மித்ரன் வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிட இங்கு விஷ்ணு தன்னுடைய தொழிலில் நன்றாக கால் பதிக்க ஆரம்பித்தாள். இப்படியாக மூன்று மாதங்கள் எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சென்றது. மித்ரன் ஊருக்கு திரும்பி வரும் நாளும் வந்தது.

இதற்கிடையே விஷ்ணுவின் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவ ஆரம்பித்தது. ஏன் என்றால் கண் தெரியாத ஒரு பெண் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இவ்வளவு அழகாக நேர்த்தியாக வேலைகள் செய்து கொடுத்தது அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்த காரணத்தினால் விஷ்ணு மற்றும் அவருடைய நண்பர்களின் பெயர்கள் வெளியே தெரியும் அளவிற்கு பிரபலமாக ஆரம்பித்தது.

இந்த விஷயம் மகேஷ் மற்றும் பவித்ரா காதுகளுக்கு சென்றபோது அவர்கள் இருவரும் மிகவும் கோபம் அடைந்தனர். ஏனென்றால் அவளுடைய திருமணம் நடந்த விதம் அனைத்தையும் யோசித்தவர்கள் இனி அவள் வெளியே வராமல் தனக்குள்ளேயே முடங்கி விடுவாள் என்றுதான் நினைத்தனர். அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது அவள் அதை எல்லாம் எதிர்த்து வெளியே வர ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தவுடன் அவளை எப்படியாவது கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருவரும் கிளம்பி வந்தனர்.

அன்று காலையில் ஏதோ முக்கியமான வேலை இருந்ததால் விஷ்ணு மற்றும் மகிழினி இருவரும் கிளம்பி சென்றனர். எந்த ஒரு முக்கியமான வேலையாக இருந்தாலும் இவர்கள் இருவரும் தான் செல்வார்கள். அதனால் இன்றும் இருவரும் முக்கியமான வேலை காரணமாக வெளியே சென்றனர். எப்போது வெளியே சென்றாலும் மகிழினி விஷ்ணுவை மட்டும் தனியாக வெட்டு எங்கேயும் செல்ல மாட்டாள் அவள் உடனே இருந்து அனைத்தையும் முடித்துவிட்டு அவளுக்கு வேறு ஏதாவது வேலை இருந்தால் விஷ்ணுவையும் தன்னுடன் அழைத்து கொண்டே செல்வாள்.

ஆனால் அன்று அவர்கள் எதிர்பார்த்து வந்த இடத்தில் வேலை முடிய தாமதம் ஆனது மகிழினி வேறு ஒரு முக்கியமான வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் என்ன செய்வது என்று இருவரும் குழம்பிக்கொண்டு இருந்த நேரத்தில் விஷ்ணு மகி புறம் பார்த்து "மகி நீ போய் உன்னுடைய வேலையை முடித்து விட்டு வா நான் எங்கும் செல்ல மாட்டேன் இங்கேயே இருந்து வேலையை கவனித்துக் கொள்கிறேன். நாம் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் முடித்தாயிற்று இனி அவர்கள் வந்து ஒப்புதல் கொடுத்தால் மட்டும் போதும் அதுவரை நான் இங்கே இருக்கிறேன் நீ உன்னுடைய வேலையை முடித்து விட்டு வா" என்று கூறினாள்.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now