அவனுடைய அதிர்ந்த முகத்தை பார்த்து மறுபடியும் சிரித்து விட்டு விஷ்ணு பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூறினார் அதில் விஷ்ணு சாதித்த விஷயங்கள் கல்லூரியில் அவளுக்கு கிடைத்த உண்மையான நட்பு அதாவது அஸ்வின் மற்றும் அரவிந்த் பற்றிய விவரங்களை கூறிவிட்டு அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் மித்ரன் கையில் கொடுத்தார்.

அஸ்வின் முகத்தை பார்த்த மித்ரன் இன்னும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு அவர் முழுவதுமாக கூறி முடிக்கட்டும் என்று நினைத்து அவர் முகத்தை பார்த்தான்.

அவர் மகிழினி புகைப்படத்தை எடுத்து மித்திரன் கையில் கொடுத்துவிட்டு "உங்கள் மனைவி பிறந்தது முதல் இன்றுவரை அவளுடன் இருப்பது இந்த உயிர்த்தோழி தான் உங்களுடைய திருமணத்தில் நிச்சயமாக இவளை பார்த்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அதேபோல் இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன் அது என்னவென்றால் உங்களுடைய திருமணம் நடப்பதற்கு 50 நாட்களுக்கு முன்பு தான் உங்கள் மனைவியின் பெற்றோர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருக்கின்றனர்.

இதில் நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் உங்களுடைய திருமணம் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே மித்ரன் என்ற ஒருவன் அவளுடைய பெற்றோருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவர் தனக்கு விஷ்ணுவை பிடித்திருப்பதாகவும் கண்டிப்பாக அவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறிய தகவல் அனைத்தும் பொய் எப்படி எல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படி எல்லாம் ஏமாற்றி கடைசியில் உங்களையும் உள்ளே இழுத்துவிட்டு இந்த திருமணம் நடந்திருக்கிறது இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் மனைவிக்கும் சேர்த்து செய்யப்பட்ட சதிவலை. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறி மித்ரன் முகத்தை பார்த்தார்.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now