Chapter 5

437 64 20
                                    

பார்வதி,முல்லையின் போக்கை சில மாதங்களாக கண்காணித்து வருகிறாள்.அவளும் கதிரும் பழகுவதை அவள் ஊகித்துவிட்டாள்.

முல்லையிடம் நேராக கறாராக அதை கண்டித்தால், அவர்களை பிரிக்க இயலாது என்று உணர்ந்த பார்வதி சற்று விட்டுபிடித்து வந்தாள்.

இதற்கு வேறு வழியில் காலையில் வகை செய்ய வேண்டும் என்று முடிவு கட்டிக்கொண்டாள்.

மறுநாள் பொழுது விடிந்தது.

முருகன் குறுக்கும்,நெடுக்குமாக குட்டிப்போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தார்.

பார்வதி, முருகனுக்கு காபி டம்ளரை தர அதை வாங்கியவர்...

முருகன்: என்னடி...அப்படி பார்க்குற?

பார்வதி: என்ன தீவிரமா யோசிச்சு கிட்டு இருக்கீங்க?

முருகன்: நாட்டாமைகாரர் வர சொல்லியிருக்காரு...அதான் எதுக்கு கூப்பிடுறாரு..குடுத்த கடன கேட்பாரோனு.... யோசனையில இருக்கேன்....

பார்வதி: ஆமா...உங்களுக்கு வேற வேலை இல்லை...ஏங்க இவள சொத்து வச்சுகிட்டு எதுக்குங்க ஊர சுத்தி கடன வாங்கி வச்சிருக்கீங்க...இந்த சொத்துகள வித்து கடன அடைக்க வேண்டியது தான....

முருகன்: ஏன்டி...சொத்து பத்து இல்லைனா இந்த உலகத்துல நாய் கூட நம்மள சீண்டாதுடி...கடன அடைக்க எனக்கு தெரியும்...நீ உன் வேலைய பாரு..நானே எதுக்கு கூப்பிடுறான் இந்த மனுசனு இருக்கேன்..

பார்வ்தி: வேற எதுக்கு..ஒன்னு பணம்..இல்லாட்டி அந்த பாழா போன அரசியல்ல அடுத்து யார கவுக்கலாம் னு யோசிப்பீங்க...வேற என்ன?

முருகன்: பரவாலடி...ஓரளவு புரிஞ்சு வச்கிருக்க...பணமும்..அதிகாரமும் ரொம்ப முக்கியம் டி..பணத்த வச்சு அதிகாரத்த பிடிச்சாகனும்...அப்பதான் சம்பாதிச்ச பணத்துக்கும் மரியாதை....
அது இருக்கட்டும்...
எங்க ஏன் ஆத்தாளுக ஆள காணோம்...

பார்வதி: உங்க இரண்டு ஆத்தாளுகளும் என் உயிர வாங்குறதுக்குனே வந்திருக்குக..

மாமன் மகள்(STOPPED)Tempat cerita menjadi hidup. Temukan sekarang