Chapter 2

490 83 26
                                    

யாரோ இரண்டு பெண்கள் பயந்து நிற்பதும் அவர்களை சுற்றி 5, 6 தடிமாடுகள் எள்ளி நகையாடி கொண்டிருப்பதை பார்த்த கதிர் வண்டியை வேகமாக செலுத்த..

அவர்கள் அருகில் வரும் போது நிற்பது முல்லை என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறியது...

வண்டியை அவர்களை ஒட்டி நிறுத்தவும்,
விஜி, கதிர் அண்ணா என்று அழைக்கவும் சரியாக இருந்தது..

கதிர் என்ற ஒற்ற வார்த்தையில் வடிந்த கண்ணீரை துடைத்த முல்லை

மாமா இங்க பாரு என்று கத்தி அழைக்க கதிர் அவள் அருகில் வந்தான்....

கதிரை பார்த்ததும் அந்த கூட்டத்தின் கொக்கரிப்பும் நின்றது...

கதிரை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும்...

கதிர் தன் அண்ணன்களுடன் நடத்தும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மளிகை போக குன்னக்குடியில் Gym ஒன்றை  நடத்திக்கொண்டிருக்கிறான்.

ஊரில் உள்ள அனைவரும் அவனுக்கு பழக்கம்.

Gym Master என்பதால் அந்த ஊர் இளைஞர்களுக்கு அவன் மீது மரியாதை உண்டு...

மேலும் "கலாம் நற்பணி மன்றம்" என்ற நற்பணி மன்றம்  மூலம் அந்த ஊரில் அவன் அமைப்பு செய்து வரும் நற்பணியும் அவனை ஊர் முழுதும் அறிய செய்திருந்தது..

இது ஒரு புறம் என்றால் மறுபுறம்  தப்பு என்று தெரிந்தால் சட்டென்று  பேசிகிட்டு இருக்கும் போதே கை நீளும்....

சிறுவயதிலையே கராத்தே...சிலம்பம் பயின்ற அனுபவம் உண்டு...

அவன் தந்தை பாண்டியன் அந்த ஊரின் குஸ்தி மாஸ்டர்..அவர் மறையும் முன்பே தன் வித்தைகள் அனைத்தையும் அவனிடம் கடத்திவிட்டு சென்றுள்ளார்..

தற்போது இந்த சூழ்நிலையை உணர்ந்த கதிர் கோபம் கலந்த போலி சிரிப்புடன் அவர்களை நோக்கி வந்தான்..

கதிர்: என்ன பாண்டி..சரக்கா...தனியா இருக்க பொண்ணுங்க கிட்ட லந்து குடுத்துகிட்டு இருக்கீங்க போல..
என்று விஜி முல்லையை அமர வைத்து முல்லை பக்கத்தில் அமர்ந்தான்..

மாமன் மகள்(STOPPED)Where stories live. Discover now