11 திடீர் மாற்றம்

En başından başla
                                    

"பேபி நீ சும்மா இரு" என்று அவளை அமைதியடைய செய்ய முயன்றார் மாஷா.

ஹீனா தன் கையை அவரை நோக்கி நீட்டி அவரைப் பேச விடாமல் செய்துவிட்டு, சங்கரை நோக்கி ஓடி சென்றாள்.

"ஏம்பா...? எப்பவும் ஏன் ஒரு கண்ல வெண்ணையும் ஒரு கண்ல சுண்ணாம்பும் வைக்கிறீங்க? எங்க கூடவே இருந்தாலும், உங்க மனசு எப்ப பார்த்தாலும் உங்க பையனையும் முதல் மனைவியையுமே தான் சுத்தி சுத்தி வருது. நாங்க உங்களுடைய சொந்தம் இல்லையாப்பா? நீங்க தானேப்பா, அம்மாவை விரும்பி ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டீங்க...? அவங்களுடைய தப்பு இதுல என்ன இருக்கு? நீங்க ஒரு சுயநலவாதி. முதல் மனைவியையும், மகனையும் விட்டுட்டு வந்த சுயநலவாதி நீங்க. அம்மா, உங்க மேல அளவுக்கு அதிகமா அன்பையும், நம்பிக்கையும் வச்சதனால தான் உங்களை கல்யாணம் பண்ணிட்டாங்க..."

அவர் ஏதும் சொல்லாமல் மென்று முழுங்கியதை பார்த்து, அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவருடைய காலரை பற்றி உலுக்கினாள்.

"ஏம்ப்பா...? எதுக்காக உங்களுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை? நாங்க உங்க வாரிசு இல்லையா?  நான் உங்க மக இல்லையா?"

"இல்ல... நீ என் மக இல்ல..." என்றார் அமைதியாக.

ஹீனாவின் கண்கள் அதிர்ச்சியில் அகலமாக விரிந்தது. அவளுடைய கைகளை, தன் காலரில் இருந்து விடுவித்தார் சங்கர்.

"நீ என்னோட மகளில்ல.  உன்னுடைய அம்மா, எனக்கு மனைவியும் இல்லை. நீ அவ புருஷனுடைய மகள். நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கவும் இல்ல, அவளுக்கு அது தேவைப்படவும் இல்ல. நாங்க ஒன்னா இருக்கோம் அவ்வளவு தான். என்னுடைய மனைவியையும் மகனையும் விட்டுட்டு நான் ஏன் வந்தேன்னா, உங்கம்மா அவளுடைய புருஷனை விட்டுட்டு வந்துட்டா. பொம்பள குழந்தையோட, அவளை நடுத்தெருவுல விட எனக்கு மனசு வரல. அதனால தான் நான் என் மனைவியையும் மகனையும் விட்டுட்டு வந்தேன். எல்லாத்துக்கும் மேல, என்னை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியை ஏத்துக்க, என் மனைவியும் மகனும் தயாரா இல்ல. வேற வழி இல்லாம தான், நான் உங்க அம்மாவோட இருக்கேன்."
 
அதை சிறிதும் எதிர்பாக்காத அவள், அதிர்ந்து நின்றாள். தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு, கதறி அழுதாள். அவளால் அந்த உண்மையை தாங்க முடியவில்லை. அவள், அவளுடைய அம்மாவை போல் இல்லை போலிருக்கிறது. சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நின்றார் மாஷா.

இதய சங்கிலி (முடிவுற்றது )Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin