27.

3.4K 150 19
                                    

மறுநாள் மதியம் ஆர்த்தியும் பாட்டியும் பேசிக் கொண்டே துணி மடித்துக் கொண்டு இருந்தார்கள்.

"ஆர்த்தி நீ அர்ஜுன் பத்தி என்ன நினைக்குர",என்று கேட்டார் பாட்டி.

"அர்ஜுன் ரொம்ப நல்ல பையன் பாட்டி.என்னை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறான்.என்னுடைய நல்ல நண்பன் அவன்",என்றாள் ஆர்த்தி.

"அந்த தம்பி தான் ஆர்த்தி இந்த ஒரு மாசமும் உன்ன தேடி அலஞ்சது.நீ கண்டிப்பா கிடைப்ப நு எங்களுக்கும் ஆறுதல் சொல்லுச்சு.ரொம்ப நல்ல பையன்",என்றார் பாட்டி.
ஆர்த்தி பெரு மூச்சு விட்டாள்.பாட்டி
ஒரு துணியை எடுத்து "இது யாருடையது.புதுசா இருக்கு",என்றார்.

ஆர்த்தி தயக்கமாக"இது என்னுடையது தான் பாட்டி.நான் அவன் வீட்டில் இருந்தப்போ அவன் வாங்கி குடுத்தான்.",என்றாள்.பாட்டி அவளை ஆச்சர்யமாக பார்த்தார்.

"தப்பான எண்ணம் இருக்கவன் டிரஸ் எல்லாம் வாங்கி தர மாட்டான் ஆர்த்தி.உன்னை ஒரு பொருட்டாகவே மதித்து இருக்க மாட்டான்.உனக்கு இத்தனை நாள் சோறும் போட்டு உடையும் வாங்கி குடுத்து இருக்கான் என்றால் அவன் கண்டிப்பாக கெட்டவனாக இருக்க மாட்டான்",என்றார் பாட்டி.

"பாட்டி ஆனா என்ன இங்கே இருந்து கடத்தீட்டு போனவன் அவன்.
அவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்",என்றாள்.

"நகைக்காக உன்னை கடத்தினான் ஆனால் உன்னிடம் எப்போதாவது தவறாக நடக்க முயற்சி செய்தானா",என்றார் பாட்டி.

"இல்லை பாட்டி.என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டான்.",என்று ஒப்புக் கொண்டாள் ஆர்த்தி.

"பார்த்தாயா அந்த பையன் நல்லவன் தான்.சூழ்நிலை தான் அவனை கெட்டவன் ஆக்கி இருக்கிறது.கடவுள் தான் அவனுக்கு நல்வழிகாட்டனும்",என்றார் பாட்டி.ஆர்த்தி பெரு மூச்சு விட்டாள்.
அவள் ஒரு முறை வயிற்று வலியால் துடித்த போது அவன் எப்படி பதறி போனான் என்று நினைத்து பார்த்தாள்.அவளுக்கு குழப்பமாக இருந்தது.எதுவாக இருந்தாலும் அது முடிந்து போன கதை.அதை பற்றி இப்போது நினைக்க வேண்டாம் என்று முடிவு செய்தாள்.

திருடிவிட்டாய் என்னைजहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें