34-புகுந்த வீடு

Start from the beginning
                                    

ஹாஸ்பிடலில் நடந்த அந்த பிரச்சிணையை சாதரணமாக்கி விட்டு சிவாவிற்கு அழைத்து "சார் எல்லாம் ஒகே சார்" என்றவளிடம்  "ஐ நோ சக்தி" என்று விட்டு துண்டித்தான்... அவனது இந்த அகங்கார செயல் அவளுக்கு கடுப்பாக தான் இருந்தது  ஆனாலும் எதை பற்றியும் வெளிக்காட்டி கொள்ளாது கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தவள் மதியமானதும் வீட்டுக்கு போவோம் என்று எழுந்து அறையை விட்டு வெளியானதும் "அட சக்திம்மா தானே" என்று கேட்டபடி ஒரு பெண் அவளது ஷோல்டரை  தொட்டதும் "ஆமா" என்றாள் புரியாத பார்வையோடு அவளே "ஆமா நீங்க யாரும்மா?"

"என்ன தெரியாதா? என்ன தான் கல்யாணத்தப்ப சிவா தம்பி அறிமுகப்படுத்தி விட்டார்ல" என்றார் சிரித்த முகமாக "ஞாபகம் இல்லம்மா" என்றதும் "பத்மா...சிவா தம்பி வீட்ல வேலை பார்க்குறவ" என்றதும்

பார்த்ததில்லை என்றாளும் சிவாவின் டயரி வாசித்த வரையில் நல்ல விதமாக தான் எழுதி இருந்தான் அதோடு தாரா எப்போதும் பத்மா அம்மா பத்மா அம்மா என்று மெச்சுவாள். அதோடு ஏதாவது நல்ல விதமாக தாரா செய்தாள் "வெரி குட் ஆமா யார் இதுலாம் சொல்லி தந்தாங்க?" என்று சக்தியோ சகிதாவோ கேட்டாள் "எங்க பத்மாம்மா" என்பாள் தெளிவான முகத்தோடு
எனவே பத்மா ஒரு நல்ல பெண் தான் என்று சக்தி முடிவு செய்திருந்தாள்...

"ஓஹ் நீங்க தானா அது.... எப்டி இருக்கீங்க?" என்று கேட்டு விட்டு ஹாஸ்பிடலை ஒரு பார்வை பார்த்தவள் "என்ன ப்ராப்ளம்?" என்று கேட்டாள்.

"ஓஹ் அதுவா என் சொந்தக்காரங்க ஒருத்தங்கள இங்க தான் எட்மிட் பன்னி இருக்குறதா  கேள்விப்பட்டேன் பக்கத்துல இருந்துட்டு பார்க்க வராம இருக்குறது அவ்ளோ சரியில்லன்னு சாப்பாடு எடுத்து வந்தேன் ம்மா"

"ஓஹ் நீங்க இப்பவும் சிவா சா" என கூற வந்த நாவை நடுத்து கொண்டாள் காரணம் 'அந்நியர் மூன்பூ இப்டி சார்ன்னு சொல்லாத சக்தி'  என்று தாய் எப்போதும் நச்சரிப்பார் அல்லவா 'சார்' என்ற சொல்லை விழுங்கி கொண்டு "வீட்ல தானா இருக்கீங்க?"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now