4. தவறை திருத்தினாலும் சுவடுகள் எங்கோ?

Start from the beginning
                                    

'தந்தையை போலத்தானே மகளும். இன்னும் அதே பள்ளி ஆசிரியராய் தன் அண்ணன் மாதவன் தன்னோடு எவ்வளவு அழைத்தும் வராமல் அந்த சிறு தொகையில் விடாப்பிடியாய் மகிழ்ச்சியாய் இருப்பதை அவரும் அறிவார். அவர் மகள் வேறெப்படி இருப்பாள்? அண்ணி லட்சுமி இறந்திருந்தால் மனம் மேலும் நிறைந்திருக்கும். ம்‌ஹும் திடீர் விஷக்காய்ச்சல் அவரை காவு வாங்கும் என யார் கண்டது'
என அடிக்கடி அவர் மனம் எண்ணி வருந்துவதுண்டு.

வேலையில் ஆழ்ந்திருந்தவளை மற்றொருவன் M.D அழைப்பதாகக் கூறிய உடனே காலையில் பார்க்க வேண்டும் எனக் கூறிய மஞ்சள்நிற ஃபைளை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தாள்.

" May I come in Sir" என்று கேட்க,

" Yes. Come in" என்று தனது system ஐ பார்வையிட்டபடி கூறினார் கிருஷ்ணா.

உள்ளே நுழைந்தவளை கண்டவர் அமரச் சொல்லிவிட்டு,

"அட பார்கவி.. உன்ன தான் தேடிட்டு இருந்தேன்" என்று சிரித்தபடி கூறினார்.

அவளும்,

"அப்படியா அந்த work almost over. இந்த file ல அதோட details இருக்கு. கொஞ்சம் பாத்துட்டீங்கனா இன்னைக்குள்ள முடிச்சிடலாம் Sir" என்று புன்னகையோடு கூற அவரது முகம் சுருங்கியது.

" என்னடா இங்கதான் யாரும் இல்லையே. அப்பாவுக்கும் மகளுக்கும் இந்த வீராப்பு போகாது போல. அழகாய் சித்தப்பான்னே சொல்லு இது வேலை சம்பந்தமானது இல்லை" என்று அவர் சொன்னவுடன் கலகலவென சிரித்தபடியே தொடர்ந்தாள் பார்க்கவி.

"சரி சித்தப்பா. சொல்லுங்க வேற என்ன விஷயம். எப்பவும் வேலை தவிர மற்ற விஷயங்கள் பத்தி இங்க பேசினதில்லல. அதான் அப்படி சொன்னேன். சித்திக், காவ்யா, அருண் எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று விசாரித்தாள்.

அதற்கு அவர், "ஹாஹா.. என்னை என்னமா செய்ய சொல்ற. வேலைன்னு வந்துட்டா வேறு எதுவும் தோண மாட்டேங்குது. எல்லாரும் நல்லா இருக்காங்க. உன் சித்தி தான் உன்ன பார்க்கனும் பார்க்கனும்னு சொல்லிட்டிருந்தா. ஒரே ஊர்ல இருந்துட்டு இப்படி தூரமாக இருக்கிறது நல்லாவா இருக்கு. சொன்னா அப்பாவும் மகளும் கேட்கவா போறீங்க" என வருத்தத்துடன் கூற,

பதிலுக்கு பார்கவி பேசும்முன் தடுத்து அவரே தொடர்ந்தார்.

"அத விடு நீ என்ன சொல்லப் போறேன்னு தான் தெரியுமே. விலகி இருந்தா தான் அன்பு ஜாஸ்தி ஆகும் அப்படி இப்படின்னு. சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாரு. அருணுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் வருது. அவன் 20 வயச பூர்த்தி செய்றதால பெரிய Birthday party atrange பண்ணிருக்கா உன் சித்தி. முக்கியமான சில தொழிலதிபர்களும் வராங்க. சாக்கு போக்கு சொல்லாமல் நீயும் அண்ணனும் கண்டிப்பா வரணும். இல்லாட்டி சித்தப்பா மனசு ரொம்ப கஷ்டப்படும். பல நாள் ஆச்சு நம்ம எல்லாரும் சேர்ந்து பேசி. So no reasons accepted" என அன்பு கட்டளையிட்டார்.

" Party ஆ அப்பாவால இந்த Sunday கண்டிப்பா வர முடியாது. School ல Annual day function. உங்களுக்கே தெரியும் அவர்தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வார்னு "என்று சொன்னதும் அவர் முகம் வாடியதை காணப் பொறுக்காமல்,

"ஆனா நான் கண்டிப்பா வரேன். ஒரு Condition. என் friends அயும் சேர்த்து கூட்டிட்டு வருவேன் deal ஆ?" என்றாள் பார்க்கவி.

"ஹாஹா.. அதுக்கு என்ன ஒரு ஊரையே கூட கூட்டிட்டு வா. No problem. ஆனா மறக்காம அஞ்சு மணிக்கு sharp ஆ வந்திடனும்" என்று Invitation ஐ நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டு அவரிடம் விடைபெற்று வந்து தன் வேலையில் மூழ்கினாள் அடுத்து வரும் நிகழ்வுகளின் வீரியம் அறியாமல்.

______________________________________
Hello makkale😁,

Late update Ku mannikavum. Pidichirntha vote Pani Inga karuthalayum solunga😍

மனதை தீண்டி செல்லாதேWhere stories live. Discover now