29-சில சந்திப்பு

Start from the beginning
                                    

"என்னடா ஒரு நம்பிக்கையே  இல்லாத பேச்சு பேசுற?"

"பின்ன என்ன ஷ்ருதி தெரியாத டொபிக்ல ப்ராஜெக்ட் பன்ன சொன்னா இப்டி தான். அதுவும்  எக்ஸ்பீரியன்ஸ் சம்மந்தமான ப்ராஜெக்ட் எனக்கு எங்க பிஸினஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸோ சும்மா அப்டி இருக்கும் இப்டி இருக்கும் என்ற கற்பணைலயே பன்னிட்டேன்"

"வாவ் நீ வேணா பாறேன் அது நல்லா வரும் அப்பறம் இன்னும் பத்து மாசம் தான் இருக்குல்ல.... நாம மீட் பன்றதுக்கு"

"ஹம் ஆமா டா இப்பவே இங்க படிப்புல்லாம் கட்டுது  அடுத்த பத்து மாசமும் நினைக்கும் போதே டென்ஷனா வருது"

"விடு டா...ஆமா நீ வந்ததுமே அச்சமில்லைய. பொறுப்பு எடுத்துப்பியா இல்ல வேற" என்று அவள்  ஆப்ஷன் தரும் முன்பே "ஹேய் லூஸூ அச்சமில்லைய டெவலப் பன்றதுக்காக தான் நான் படிக்கிறதே  என் கனவே அத பெருஷா பன்றது தான்"

"ஒகே டா அப்பறம் திரு அங்கிள் பக்கத்துல இடம் வாங்கி இருக்கார் தெரியுமா?"

"ஓஹ்  அப்டியா" என்று அதை பற்றி பெரிதாக பேசாது தங்களை பற்றி மட்டும் பேசி விட்டு துண்டித்தான்.

அடுத்த நாள் அவனது பேர்த்டேய்க்கு ப்ரென்ஸ் சப்ரைஸிங்காக அவனுக்கு ஹாஸ்டல் ரூமில் கேக் வெட்டி சந்தோச படுத்தினார்கள்  காலையில் தாரணி ஒரு வாச்சை எடுத்து வந்து கொடுத்தாள்.

சிவாவுக்கு கைக்கடிகாரத்தின் மீது என்றுமே ஓர் பிரியம் தான் அதுவும் விதம் விதமாக கட்டுவது அவனது ட்ரீம் தான் அதுவும் தாரணி ரோலெக்ஸ் வொச் ஒன்றை நீட்டவும்  சிவா வான் அளவு சென்று வந்தான் என்றே சொல்ல வேண்டும் 

"ஹேய் தாரணி இதுலாம் எப்டிடா... நீயே பேரன்ட்ஸ் உதவி இல்லாம படிக்கிற பொண்ணு நீ எப்டி?"

புன்னகைப்போடு "பேரன்ட்ஸ் என்ன பேரன்ட்ஸ் நான்  எங்க ஊருல உள்ள வீட்ட நிலத்த எல்லாம் தரகர் கிட்ட விலை பேச சொல்லி இருந்தேன் போன மாசம் தான் அது கை கூடி பெரிய பிஸினஸ் மேனுக்கு விலைக்கு போச்சி அதுல வந்த பணம் தான்"

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now