காலத்தின் மாய மரணம்... (முடிவ...

By adviser_98

33.3K 2.6K 5.8K

இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... More

காலம் -1
காலம்-2
காலம்-3
காலம்-4
பகுதி-5
காலம் -6
காலம் -7
information
காலம் -8
காலம்-9
காலம்-10
காலம் - 11
காலம் - 12
காலம்-13
காலம் - 14
காலம் -15
காலம் - 16
காலம் -17
காலம் - 18
19
காலம் - 20
காலம் - 21
காலம் -22
காலம் - 23
காலம் - 24
காலம் - 25
காலம் - 26
காலம் - 27
காலம் - 28
காலம் - 29
காலம் -30
காலம் - 31
காலம் - 32
காலம் - 33
காலம் - 34
காலம் - 35
காலம் -36
காலம் - 37
காலம் - 38
காலம் -39
காலம் - 40
காலம் - 41
Channel update
காலம் - 42
காலம் - 43
காலம் - 44
காலம் - 45
காலம் - 46
காலம் - 47
காலம் - 48
காலம் - 49
important
காலம் - 50
காலம் - 52
காலம் - 53
காலம் - 54
காலம் - 55
காலம் - 56
காலம் - 57
காலம் - 58 (நிறைவுபகுதி -1)
காலம் - 59 (நிறைவு பகுதி - 2)
நன்றியுறை
வெரி இம்ப்பார்ட்டென்ட்

காலம் - 51

410 42 97
By adviser_98

ஆராவாரமாய் வரவேற்கப்பட்ட தமையந்தியின் முகத்தை கண்ட வேதா அது தெளிவுற்று மிகவும் சந்தோஷத்தில் மிளிர்வதாய் தெரிய... அதை விட அவளது முக ஜாடையை உரித்து வைத்து அவள் கரங்களில் இருந்த ஆண் குழந்தையை கண்டவர் இன்னும் மகிழ்ச்சி அடைந்தார்..

லிங்கம் : பாப்பா எப்டி டா இருக்க ... வா வா... என முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மகளை வரவேற்த்தார்... குழந்தையை கணவனிடம் கொடுத்த தமையந்தி லிங்கத்தை அணைத்து கொண்டு ஒரு வருடம் தந்த பிரிவை எண்ணி கண்ணீர் சிந்தினார்...

பின் அதை புன்னகையுடன் துடைத்து விட்ட லிங்கம்...

லிங்கம் : என்ன இப்டி இவ்ளோ சீக்கிரத்துல தாத்தா ஆக்கீட்டியே பாப்பா... என நெற்றியில் முத்தம் வைக்க... மெல்ல தலை தூக்கிய வெட்கத்துடன் சிரித்த தமையந்தி வாசலில் கேட்ட குரலின் கூற்றை கேட்டு முகம் சிவக்க பாலுவின் பின் ஒளிந்து கொண்டாள்...

தர்மபாஸ்கர் : அட என்ன லிங்கம்... ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி சோர்ந்து மாப்பிள்ளையோட ஊருக்கு போன புள்ள தான்... நா சொன்ன மாரி பத்து மாசத்துல புள்ளையோட வந்து நிக்கிரா பாரு... என கேலியாய் கூறி கொண்டே உள்ளே வர... தமையந்திக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அதை புன்னகைத்து சமாளித்து கொண்டாள்...

வேதா : என் பேரன என் கிட்ட குடுங்க மாப்பிள்ளை... என வாயெல்லாம் பல்லாக குழந்தையை பாலுவிடமிருந்து வாங்கி கொண்டார் வேதா... வேதாவின் முகத்தை கண்டதும் வீரிட்டு அழுதான் குழந்தை...

தாயும் மகளுமாய் அவன் அழுகையை நிறுத்தி வைக்க முயல ... அவனோ நிறுத்துவேனா என்பதை போல் கத்தி அழுது கொண்டிருந்தான்...

ஷீலா : அக்கா இங்க குடுங்க ... என குழந்தையை வாங்கியவர் ... முதுகை தட்டி கொடுத்தவாறு சற்று குழந்தையை தூக்கி கொண்டு காற்றோட்டமாய் வெளியே சென்றார்... அனைவரும் சில நொடிகளில் குழந்தையின் அழுகை நின்றதை கேட்டு ஆச்சார்யமாக ... ராமு மற்றும் லிங்கத்தின் இதயத்தில் ஷீலாவை நினைத்து சுருக்கென ஒரு வலி எடுத்தது....

சொத்திற்காக ஷீலாவின் குழந்தையை அபாண்டமாய் கொன்று அவரை தண்டித்து விட்டோமே என்று லிங்கமும் தான் தன் அண்ணனின் குழந்தையை கொன்றதாலே தன் மனைவிக்கு இந்நிலை என்று ராமுவும் கவலையுடன் யோசித்து கொண்டிருந்த நேரம் ஷீலா புன்னகை முகமாய் தோளில் உறங்கியிருந்த குழந்தையுடன் உள்ளே வந்தார்...

ஷீலா : இந்தா பாப்பா... தம்பி தூங்கீட்டான்...

தமையந்தி : நீங்க பெரிய ஆளு தான் சித்தி... இவன் அழுகைய இந்த இரெண்டு மாசத்துல என்னால நிறுத்தவே முடியல... நீங்க கொஞ்ச நேரத்துல சரி பன்னிட்டீங்களே... என குழந்தையை கை தாங்கலாய் வாங்கியவள் தோளில் போட்டவாறு கூற அதற்கு மெமையாய் புன்னகைத்த ஷீலா சமையலறைக்குள் புகுந்து கொண்டார்...

வீட்டிற்கு வந்த அஃப்ரி தஸ்னி சஹா நடு கூடத்திலே நின்று வாணத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக மகிழ்ச்சியாய் கத்தி கொண்டிருந்த தாஹினியை கண்டதும் காலைல அப்டி இருந்துட்டு இப்போ எப்டி இப்டி மாறுனா... என விழி விரித்து கொண்டு வந்தவர்களின் கண்களில் சரியாய் அகப்பட்டான் இரண்டாம் மாடியின் இறுதியில் இருந்த அறையின் கதவில் சாய்ந்தவாறு கண்ணிமைக்காமல் சுற்று முற்றும் எதையும் கண்டு கொள்ளாமல் உறைந்த புன்னகையுடன் அவனவளை இரசித்தவாறு நின்றிருந்த அவர்களின் தமையன்...

எங்கேந்து வந்தாள்... ஏன் கத்துகிறாள் ஏன் குதிக்கிறாள் என்ன சொல்கிறாளென்றே புரியாது அவர்கள் முன் குதித்து கொண்டிருந்த தாஹினியை பார்த்து கொண்டிருந்த சபீ ஹனா மற்றும் ஹஃப்னா மூவரும் தாஹினியின் பின் வந்த மூவரையும் கவனித்து விட... தஸ்னி இம்மூவருக்கும் கண்ணாலே ஏதோ சொல்ல முதலில் புரியாது விழித்த ஹஃப்னா மற்றும் சபீயின் மண்டையில் கொட்டி புரிய வைத்த ஹனா விரல்களை நீட்டி எண்ண... சரியாக மூன்று என்ற எண் முடியவும் தாஹினி பின்னிருந்த மூவரும்... அவள் முன்னிருந்த மூவரும் ஒரு சேர " ஹப்பி ஃபர்ஸ்ட் ஃவெட்டிங் அனிவெர்செரி லவ்லி கப்பில்ஸ் " என்று கத்திய கத்தில் திடுக்கிட்ட தாஹினி உறைந்து நிற்க.. ககதவில் சாய்ந்து நின்றிருந்த தமிழ் தடுமாறி கீழ் விழ போய் தன் நிலை பெற்று எழுந்து நின்றான்....

சில நிமிடங்கள் ப என நின்றிருந்த தாஹினி திடீரென அவள் பின் பிரபா வெடித்த பாப்பின் சத்தத்தில் நிஜ உலகை அடைந்து காதுகளை இறுக்கி மூடி கொண்டாள்...

தாஹினி : எருமைங்களா ... இந்த கத்தா டி கத்துவீங்க... என கண்களை மூடி கத்தியவளை கண்டு கீழிருந்த ஏழ்வரும் வெடித்து சிரித்தனர்...

சஹா : உடன்பிரவா சகோதரரே... எங்க அண்ணியார சைட்டடிச்சது போதும் கீழ இறங்கி வாங்க... கேக் வெட்டலாம்... என தமிழை பார்த்து கத்த... அசடு வழிய சிரித்த தமிழ் கீழே இறங்கி வர... ஹஃப்னாவும் ஹனாவும் சமையலறையிலிருந்து ஒரு கேட்கை எடுத்து வந்தனர்...

தாஹினி : இதெல்லாம் எப்போ டி பன்னீங்க...

ஹனா : ஸ்கூலுக்கு போகாம நாங்க ஏன் வீட்டுல இருந்தோம்னு நெனக்கிற... எல்லாம் இதுக்கு தான் என கண்ணடித்து கூற...

ஹஃப்னா : நாங்களே செஞ்ச கேக்கு டி...

தாஹினி : ஏது நீங்க செஞ்சீங்களா... நா சாப்ட மாட்டேன்... என ஓட முயல... அவள் கூந்தலை பிடித்து நிறுத்திய தஸ்னி...

தஸ்னி : எங்க ஓடுர... வா வா... நீ சாப்ட்டு தான் ஆகனும்...

தமிழ் : வா ஜுனு... என் தங்கச்சிங்க ஆசையா செஞ்சிர்க்காங்க... கமான்...

தாஹினி : நாலாம் வர மாட்டேன் போங்க... என நகர்ந்து கொள்ள திமிர... சரியாக.... தமிழ்ப்பா... தாஹிமா என கத்தி கொண்டே பள்ளி சீருடையில் ஓடி வந்தாள் ஆரு...

தமிழ் : ஆரு குட்டி... என ஓடி வந்தவளை தூக்க வந்த தாஹினியை புறம் தள்ளி முன் வந்து ஆருவை தூக்கி கொண்டான் தமிழ்...

ஆரு : ஹப்பி வெட்டிங் டேப்பா... என கழுத்தை கட்டி பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட... அழகாய் சிரித்த தமிழ்

தமிழ் : தன்க்ஸ் ஆரு குட்டி...

தாஹினி : ம்ம்ம் அப்பாக்கு மட்டும் தான் வெட்டிங் டே வா... எனக்கில்லையா... என முகத்தை தூக்கி வைத்து கொள்ள...

ஆரு தமிழை பார்த்து இரண்டு கண்களையும் கண்ணடிக்க தெரியாமல் மூடி காட்ட... அதை கண்டு இன்னும் சிரித்த தமிழ் ஆருவை தாஹினி அருகில் கூட்டி சென்று... ஒன் டூ த்ரி என்கவும் ஒரே நேரத்தில் அப்பாவும் மகளுமாய் தாஹினியின் கன்னத்தில் இதழ் பதித்தனர்...

அதை உணர்ந்த தாஹினியின் கண்கள் விரிய...

ஆரு : ஹப்பி வெட்டிங் டே தாஹிமா என கத்தி அவளை நிலைக்கு கொண்டு வர... அப்படியே உறைந்து நின்ற தாஹினியின் காது மடலில் இதழ் உரச நின்ற தமிழ் " ஹப்பி வெட்டிங் டே " என மெதுவாய் கூற... சுற்றியிருந்த தோழிகள் ஓஓஓஓ என கத்த... அதில் கன்னங்கள் தக்காளி பழமாய் சிவக்க தமிழின் தோளோடு புதைந்து கொண்டாள் தாஹினி....

அதில் அனைவரும் இன்னும் சிரிக்க... தமிழோ சிரிப்புடன் ஆருவை ஒரு புறம் தூக்கி கொண்டு மறுபுறம் தாஹினியை தன்னோடு அணைத்து கொண்டான்....

பிரபா : ஏய் ஏய் ஷு... என் தங்கச்சிய ரொம்ப தான் கலாய்க்கிறீங்க... வா குட்டிமா... டேய் வா டா... வந்து கேக்க வெட்டுங்க... என அனைவரையும் அமைதி படுத்தி ஆருவை தூக்கி கொள்ள முன் வர...

தமிழ் : இரு இரு வெற்றோம்... என ஆருவை கீழிறக்கி விட்ட தமிழ் தாஹினியை பார்க்க... அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட தாஹினி கத்தியை ஆருவின் கையில் கொடுத்து அவள் கரத்தை பிடித்து கொள்ள... தாஹினியினது கரத்தை பிடித்து கொண்டு தமிழ் ... " வெட்டுவோமா ஆரு மா " என்ற கேள்வியுடன் அவள் ம்ம்ம் மென தலையை ஆட்டவும் மூவருமாய் கேக்கை வெட்டினர்...

அதில் முதல் பீசை எடுத்த ஆரு தமிழுக்கும் தாஹினிக்கும் ஊட்டி விட்டு கை தட்டி சிரித்தாள்... பின் தாஹினி அவள் தோழிகளுக்கு ஊட்டி விட... பிரபா தமிழுக்கு ஊட்டி விட... அங்கே கலகலப்பாய் முடிந்தது அந்த திருமண நாள் கொண்டாட்டம்...

இரவும் ஒன்றாக உணவை முடித்த அனைவரும் விரைவிலே உறங்க சென்று விட... தன் தோளிலே உறங்கிய ஆருவை தூக்கி கொண்டு மாடி ஏறினான் தமிழ்...

தங்களது அறையில் கட்டிலில் ஆருவை கிடத்திய தமிழ் ஜன்னல் வழியே நிலவை வெறித்து கொண்டிருந்த தாஹினியை கண்டு அவளுக்கு அருகில் அவளை பார்த்தவாறு நின்றான்....

அவனின் வரவை முன்பே அறிந்திருந்த தாஹினி மெல்ல நகர்ந்து அவன் மீது சாய்ந்தவாறு வலது கையால் ஜன்னலின் க்ரில்லை பிடித்து கொண்டவள் தலையை அவன் தோளில் சாய்ந்து கொள்ள... வலது கையால் அவள் இடையை பிடித்து தன்னோடு இறுக்கி கொண்டவன் இடது கையால் அவள் சிகையை வருடி விட... அந்த சுகத்தில் கண் மூடி சாய்ந்திருந்தவளின் மனதிலிருந்த நெருடல்கள் டெம்ப்பரரியாக அவளுக்கு டாட்டா காட்டி விட்டு சென்றது....

தமிழ் : ராணியின் மனகுமுறலை செவி மடுக்க அடியேனின் செவிகள் காத்து கிடக்கிறது... என அவள் காதருகில் குனிந்து மெல்லமாய் கூற.... அவன் மூச்சு காற்று பட்டு அசைந்த கற்றை முடி தாஹினியின் கன்னத்தை உரச... கசந்த புன்னகையுடன் கண்களை திறந்தாள்...

தாஹினி : இளன்... என மெதுவாய் அழைக்க...

தமிழ் : சொல்லுமா... என்றவனின் ஒரு கரம் அவள் சிகையை மென்மையாய் கோத...

தாஹினி : எனக்கு எது நாளையோ பயமா இருக்கு...

தமிழ் : என்ன பயம்...

தாஹினி : நா உங்கள விட்டு தூரமா போற மாரி... என கூறும் போதே அவள் குரல் உடைய...

தமிழ் : ஹே ஜுனு... என்ன விட்டு நீ எங்க டி போக போற... அப்டியே நீ போனாலும் நா கூடவே வந்துட மாட்டேனா...

தாஹினி : ஹ்ம்ம் ஆ..னாலு.ம் ப..யமா இருக்கே இளன்... என்றவளின் குரல் இப்போது தினற...

தமிழ் : அப்டிலாம் எதுவும் இல்ல ஜுனு... நீ என்ன விட்டு எங்கையும் போக போறதுமில்ல...... நா உன்ன போக விடப்போறதுமில்ல...

தாஹினி : ஹ்ம்...

தமிழ் : என் பொண்டாட்டி எதுக்காகவும் பயப்புட கூடாது... நானே கூட இல்லனாலும் எழுந்து நின்னு வாழ்கைய பாக்கனும்...

தாஹினி : ஹ்ம்... என தொண்டை அடைக்க கடினப்பட்டு வெளி வந்த குரலில் அவளது அழுகையை உணர்ந்த தமிழ் அவளை தன் புறம் திருப்ப... சட்டென திரும்பிய தாஹினி கண்ணீருடன் அவனை அணைத்து கொண்டு முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து கொண்டு சத்தமில்லாமல் கதறி அழுதாள்...

தமிழ் : ஹே ஜுனு... என்ன டி ஆச்சு... ஏன் டி அழர... என பதட்டமடைய...

தாஹினி : ப்லீஸ் இளன்... என்னால முடியல... நா உங்கள விட்டு போய்டுவேனோன்னு பயமா இருக்கு... மனசு ஒரு நிலைல இருக்க மாட்டுது... உங்களுக்கு எதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்கவே முடியாது...

தமிழ் : ஜுனு... நீ என்ன விட்டு போ மாட்ட டி.. ஏன்னா உனக்கே தெரியும்... நீ என்ன விட்டு போய்ட்டா நா செத்துருவேன்னு... என கூறி முடிக்கும் முன் அவன் இதழில் தன் கை வைத்து நிறுத்திய தாஹினி ம்ஹும் என தலையசைத்தாள்...

தாஹினி : நாளைக்கு போய் ஆருவ நம்ம பொண்ணா கூட்டீட்டு வந்துடலாமா... என கண்களின் ஓரம் தேங்கியிருந்த நீர் துளிகளுடன் பாவமாய் கேட்க...

தமிழ் : ம்ம் சரி ஜுனுமா... நாளைக்கே கூட்டீட்டு வந்துடலாம்...

தாஹினி : நா வேலைய விற்றவா இளன்...

தமிழ் : ஏன் டி...

தாஹினி : அது...

தமிழ் : சொல்லு... நீ ஆச பட்டு சேந்த வேலையாச்சே இது...

தாஹினி : ம்ம் உண்மை தான்... ஸ்கூலுக்கு வர புள்ளைங்கள பாத்துக்க பல டீச்சர்ஸ் இருக்காங்க... ஆனா என் புள்ளையையும் என் புருஷனையும் பாத்துக்க நா ஒருத்தி தான இருக்கேன்... என தலை குனிந்தவாறு கூற...

தமிழ் : அட அப்டி போகுதா கதை... ம்ம் நீ பாத்துக்கோ ஆனா வேலையலாம் விட வேண்டாம்... என புன்னகையுடன் கூறியவனின் கைகள் அவள் இடையை இழுத்து அவனோடு இறுக்கியது...

தாஹினி : இளன்....

தமிழ் : ம்ம்ம்ம்

தாஹினி : நீங்க என் கிட்ட எதாவது கேக்கனும்னு நெனக்கிறீங்களா... இல்ல எதிர்பாக்குறீங்களா...

தமிழ் : ம்ஹும் அப்டி ஒன்னும் இல்ல... ஏன் கேக்குற...

தாஹினி : இல்ல.... நீங்க எதிர்பார்த்து அது எனக்கு தெரியாம போய்... அதனால நீங்க என் கிட்ட கோச்சிக்கிட்டு சண்ட வந்து... நா உங்கள விட்டு போய்ட கூடாதுல அதான்... என சோகமாய் முகத்தை வைத்து கொண்டு கூற

தமிழ் : உன்ன வச்சிட்டு எப்டி குடும்பம் நடத்த போறனோ தெரியல டி... என தலையிலே கை வைத்து கொண்டான்...

தாஹினி : ம்க்கும் இந்த ஒரு வர்ஷம் எப்டி நடத்துனீங்களோ அப்டி தான்... என முகவாயை தோளிற்கு நீட்டி இடித்து கொண்டாள்...

தமிழ் : ஹையொடா... மடம்க்கு கோவம் வருதோ... என வேண்டுமென்றே அவளை நெருங்க... அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்...

தாஹினி : விடுங்க ஆரு கிட்ட போறேன்... தனியா தூங்குரா... என அவன் கண்கள் பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தவாறு கூற...

தமிழ் : அட என் பொண்ணு என்ன மாரியே போல்டு... பயப்புடமாட்டா...

தாஹினி : ம்ம்ம் ஆனா நா பயப்புடுவேன்...

தமிழ் : புருஷன் நா இருக்க உனக்கென்ன பயம்...

தாஹினி : நீங்க இருக்குரது தான் பயமே ... என நக்கலாய் கூறியவள் அவன் பிடியிலிருந்து விலகி ஓட... ஒரே எட்டில் அவள் கரத்தை பிடித்து மீண்டும் தன் சிறைக்குள் கொண்டு வந்த தமிழ் அவளை இன்னும் திக்கு முக்காட வைக்க அவளது செவ்விதழை சிறை செய்தான்...

தமிழ் : விட்டு போய்டுவன்னு பயமா இருக்கு... அது பயமா இருக்கு இது பயமா இருக்குன்னு நீ பயப்புடும் போதெல்லாம் இந்த முத்தம் நியாபகம் வரும்... என மெதுவாய் கூறியவன் பிடியை தளர்த்த... அவனிடமிருந்து நகர்ந்த தாஹினி உள்ளே ஓடி விட்டாள்...

தீரா : நா பேய் ஸ்டோரி எழுதறனா லவ் ஸ்டோரி எழுதறனான்னு எனக்கே தெரியலையே....

மறுநாள் தாஹினியின் விருப்பப்படியே ஆருவை தம்பதி சமோதிரமாய் இருவரும் தத்தெடுத்து கொண்டனர்... சட்டப்படி ஆருவின் இனிஷியல் இ ஆகவும் மாறி மிஸ் ஆருஷா இளந்தமிழ சத்ருவனாகவும் மாறினாள்... சட்டத்தின் படி இளந்தமிழ சத்ருவன் மற்றும் தாஹினி இளந்தமிழ சத்ருவனிற்கும் மகளாகினாள்...

பள்ளியிலும் ஆருவை பற்றிய விபரங்களையும் மற்ற பத்திரங்களையும் மாற்ற வந்த போதே தாஹினியின் கண்களில் பட்டாள் பள்ளி வழியே எங்கோ செல்ல வேதாவுடன் வந்திருந்த தமையந்தி...

தமையந்தியினது முக மலர்ச்சியும் அவளது குழந்தையையும் கண்ட தாஹினி உள்ளூர அவளை நினைத்து மகிழ... அவளை மறைந்தவாறே பார்த்த தாஹினி ஜுனு என தமிழ் அழைக்கும் சத்தம் கேட்டு உள்ளே செல்ல... தாஹினி எதிர்பார்க்காததை போல ஜுனு என்ற அழைப்பில் இவர்களின் புறம் திரும்பினாள் தமையந்தி...

பள்ளியினுள்ளிருந்து ஆருவை தோளில் தூக்கி கொண்டு தாஹினியுடன் கை கோர்த்தவாறு தங்கைகளிடம் பேசி சிரித்து கொண்டு குடும்பமாய் நடந்து வந்த இளந்தமிழை கண்டாள்...

தமிழை கண்ணிமைக்காது பார்த்து கொண்டிருந்த தாஹினியை காண காண தமையந்தியினுள்ளிருந்த கோபமழை மீண்டும் தூவ தொடங்க... நம் நாயகர்களோ இவளை பொருட்டாக கூட கவனிக்காமல் அவர்களது மதிழுந்தில் ஏறி சென்றனர்...

தமையந்தியின் முகத்தில் தெரிந்த கோவத்தை வைத்து நிச்சயம் நாளையே தமிழை கொன்று விடுவாள் என வேதா கணக்கு போட... தமையந்தியோ நம் அனைவரின் எண்ணத்திற்கும் மாறாக முகத்தை சீர் படுத்தி விட்டு மீண்டும் சிரித்து பேசியவாறு அவள் தாயுடன் வீட்டை நோக்கி பயணித்தாள்...

கண்ணிமைக்கும் நொடி பொழுதினில் இரண்டு வருடம் கடந்திருந்தது... 1999 ஆம் வருடம் பிறந்து நான்கு மாதங்கள் கடந்திருந்தது.... ஆரு பதினோறு வயதை அடைந்து முன்பிற்கு இப்போது இன்னும் வளர்ந்திருந்தாள்... தமையந்தியின் மகனுக்கு மூன்று வயதாகியிருக்க அவனுக்கு ஊரறிய மகேந்திரபபூபதி என பெயர் சூட்டப்பட்டது....

நம் சத்ருவான் வீட்டில் என்றும் இப்போதெல்லாம் கலவரம் தான்... இன்றும் அதே தான்...

தாயும் மகளுமாய் தாஹினியும் ஆருவும் சோபாவில் ஒரு கையை கட்டி மறு கையை தாடையில் வைத்தவாறு அமர்ந்திருக்க.... அவர்கருகிலே ஆருவின் தாய் மாமனான நம் பிரபாவோ மிகவும் தீவிரமாய் சோழ கருதை உண்டு கொண்டிருந்தான்...

நடு கூடத்தில் தமிழ் ஒரு பக்கம் பட்டாசாய் வெடித்து கொண்டிருக்க... அவனுக்கு முன் அவனது ஆறு தங்கைகளும் ஒரு ஆளென அவனுக்கு நிகராய் புஸ்வானமாய் பொங்கி கொண்டிருந்தனர்...

ஹஃப்னா : சரி முடிவா இப்போ என்ன தான் அண்ணா சொல்ல வர...

தமிழ் : உங்க ஆறு பேருக்கும் மாப்பிள்ளை பாக்க போறேன்... அடுத்த வர்ஷமாவது கல்யாணம் பன்னி வைக்க போறேன்...

சபீ : அண்ணா நோ... நாங்க எங்கையும் போக மாட்டோம்... என பாவமாய் தொடர...

தமிழ் : நோ குட்டிமா... உங்களுக்கும் இருவத்தி இரெண்டு வயசாய்டுச்சு... இன்னும் எத்தன நாள் இப்டியே இருக்க முடியும்...

ஹஃப்னா : அண்ணா ப்லீஸ்... எங்களுக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...

தமிழ் : அப்போ எப்போ கல்யாணம் பன்னிப்பீங்க... என்றதற்கு ஆறுவரும் கோரசாய்

ஆறுவரும் : எப்போ தோனுதோ அப்ப....

தமிழ் : எப்போ தோனும்...

ஹனா : தோன்றப்போ தோனுண்ணா...

தமிழ் : குட்டிமா... இது விளையாட்டு விஷயம் இல்ல ... எவ்ளோ நாள் இப்டி வயசு பொண்ணுங்கள வீட்லையே வச்சுக்க முடியும்...

அஃப்ரி : நாங்க என்ன உனக்கு பாரமாண்ணா... இல்லல்ல... உன் தங்கச்சியாவே இருந்துட்டு போய்டுரோம்னு சொல்ல வந்தேன்... என வேகமாய் தொடங்கியவள் அவன் முறைக்கவும் பொட்டி பாம்பாய் பம்மினாள்...

தமிழ் : அதுல எனக்கு பிரச்சனையே இல்ல... ஆனா நிதர்சனம் அப்டி கெடையாதே டா குட்டிமா...

தஸ்னி : ப்லீஸ் டா அண்ணா... உன் கூடையும் தாஹி கூடையும் பிரபா அண்ணா கூடையும் நாங்க இன்னும் கொஞ்சம் வர்ஷம் இப்டியே இருக்கனும் அண்ணா... சொல்லி தொலையேன் டி... என தாஹினியின் காலை மிதிக்க...

தாஹினி : அவ்ச்... நீங்களாச்சு உங்க அண்ணனாச்சு நா வர மாட்டேன் போங்க டி...

ஹஃப்னா : நாயே... ஃப்ரெண்ஸுக்கு துரோகம் பன்னாத டி...

தாஹினி : ம்ம் நா எதாவது பேச வந்து அவரு இது அண்ணன் தங்கச்சிகளுக்கு உள்ள பிரச்சனை.... அண்ணியார் நீ வராதன்னு சொல்லிடுவாரு.. எனக்கெதுக்கு இந்த மூக்குடைப்பு... என முகத்தை திருப்பி கொண்டாலும் அவள் தோழிகளுக்காய் அவள் கண்களும் அவளவனிடம் மன்றாடியது...

ஹனா : பிரபா அண்ணா நீ... என அவனை பார்க்க... அவன் இன்னும் சோழத்தில் மும்மரமாய் இருக்க... அந்த சோழத்தை பிடுங்கி அவன் மண்டையிலே நங்கென அடித்தாள் ஆரு...

பிரபா : ஆ... குட்டி சாத்தான்... என அவள் மண்டையில் கொட்ட... தமிழ் அதற்கு அவன் மண்டையில் கொட்ட... பிரபா முறைத்தான்...

ஹஃப்னா : முறைக்காத அண்ணா... சப்போர்ட் அஸ்... என கெஞ்ச...

பிரபா : ம்ஹும்... நானும் தமிழ் முடிவுல ரொம்பவே உறுதியா இருக்கேன்... சோ நோ சேஞ்... என உறுதியாய் மறுக்க... தங்கைகள் ஆறுவருமாய் தாஹினியை உதட்டை பிதுக்கி பார்க்க... அவள் தமிழை பார்க்க... அவனோ தாஹினியை பார்ப்பதை தவிர்த்தான்...

எங்கு அவள் கண்களை கண்டு தலையாட்டி விடுவோமோ என்ற பயத்தில்....

தமிழ் : அப்போ இப்போ கல்லாயம் வேண்டாமா... என கம்மிய குரலில் கேட்க....

தஸ்னி : அண்ணா ப்லீஸ்... எங்களுக்கு தோனும் போது கண்டிப்பா கல்லாயணம் பன்னிக்கிறோம்... அது வர இத பத்தி பேச வேண்டாம்...

சஹா : நாங்க கல்யாணம் பன்னி போய்ட்டா இந்த வீட்ல இப்டி ஒன்னா உன் கூட இருக்க முடியாதுண்ணா... ப்லீஸ் புரிஞ்சிக்கோ... என பப்பி ஃபேசுடன் கூறி விட்டு தாஹினியின் கண்ணசைப்பின் படி மாடிக்கு சென்றனர்...

ஆருவும் பிரபாவும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல... தமிழ் சோர்வாய் தாஹினியினருகில் அமர்ந்தான்...

தாஹினி : கூல் இளன்... இப்போ இல்லனா அடுத்த வர்ஷம்... உங்க தங்கச்சிகளோட வருங்கால கணவர்கள் வர வேண்டிய நேரத்துல தானா வருவாங்க... நீங்க என் வாழ்கைல சீக்கிரமா வந்ததால எல்லாரும் அப்டி வந்துடுவாங்கன்னு இல்லல... கொஞ்சம் லேட்டாகலாம்.. நீங்க போட்டு குழப்பிக்காதீங்க... என சரியான மனைவியாய் அவனுக்கு ஆறுதல் கூற... கண்களை மூடி அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்ட தமிழ்

தமிழ் : ஹ்ம்... எனக்கும் என் தங்கச்சிகள என்ன விட்டு அனுப்ப மனசே இல்ல ஜுனு... ஆனா அதுக்குன்னு அவங்கள என் தங்ச்சியா மட்டும் நா வாழ விட முடியாதுல... அதுவும் என் கூட பிறந்த தங்கச்சிங்க இல்ல... அம்மா இல்லாத பொண்ணுங்கள அண்ணனா இவன் சரியா வளத்தானா பாருன்னு ஊரு பேசுனா நா என்ன டி செய்வேன்... என சராசரி அண்ணனுக்குள்ள மனகுமுறலை வெளிப்படுத்த...

தாஹினி : நம்ம ஊர்க்காரங்களுக்காக நாம வாழல இளன்... அவங்களுக்கு நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாது... உங்க தங்கச்சிங்க கல்யாணமே வேணாம்னு சொல்லல... இப்போ வேணாம்னு தான் சொல்றாளுங்க... என் ஃப்ரெண்ஸ பத்தி எனக்கு தெரியாதா... உங்க கூட இன்னும் சில வர்ஷங்கள் இருக்கனும்னு ஆசை படுராளுங்க... தப்பில்லல்ல... கல்யாணம் ஆய்ட்டா ஆறு பேரும் நம்மள விட்டு ஆறு திசைல கூட போக வாய்ப்பிருக்கு... அந்த நேரத்துல போய் மனகஷ்டத்தோட போனா நல்லாவா இருக்கும்.... சோ நீங்க அவங்கள அத பத்தி கேட்டுட்டே இருக்காதீங்க... நா பாத்துக்குறேன்... ஒரு ஒரு வர்ஷம் இத பத்தி பேச வேண்டாம்.... என்ன... என மென்மையாய் கூறி அவனை அமைதி படுத்த முயன்றவள் முயற்சியில் வெற்றியும் பெற்றாள்...

தமிழ் : சரிங்க மஹாராணியாரே... தூங்க போகலாமா... தலை வலியா இருக்கு..

தாஹினி : வாங்க மஹாராஜா... தலைய பிடிச்சு விடுறேன்... என சிரிப்புடன் கூறியவள் அவனுடன் மாடி ஏறினாள்...

தாஹினி இரண்டு மாதங்களுக்கு முன்னறிலிருந்து எந்த வகையான புத்தகம் எழுத வேண்டுமென முடிவெடுத்து அதற்கான வேலையிலும் இறங்கி விட்டாள்... கதையென்றில்லாமல் ஒரு உண்மை சம்பவத்தை ஆராய வேண்டுமென காத்திருந்தவளின் கண்ணில் பட்டது மர்ம இரயில் ஸெனட்டியின் குறிப்புகள்... அதை பற்றி ஆராய தொடங்கியவளின் ஆராய்ச்சிகளில் மேன்மேலும் பல அவிழ்கப்படாத முடிச்சிகள் விழுந்ததே ஒழிய எதுவும் அவிழ்கப்படவில்லை...

தாஹினி இப்படி தலையை பிய்த்து கொள்வதை சிரிப்புடன் பார்த்த தமிழ் ஒரு நாள் ... இத்துனை வருடங்களில் அவளுக்கே தெரியாமல் அவ்வீட்டிலிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றான்...

தாஹினி : எங்க இளன் போறோம்... என பிரம்மிப்பாய் பார்த்து கொண்டே வந்தவள் திடீரென அப்பாதை முழுவதும் இருள் சூழ்வதை உணர்ந்து தமிழின் கரங்களில் தொங்கி கொண்டே அவனுள் புதைந்தாள்...

தமிழ் : தொங்காத டி கண்ண திறந்து நட... என கேலியாய் அதட்ட...

தாஹினி : அஹென் மாட்டேன் மாட்டேன்... நீங்களே அழச்சிட்டு போங்க... என கண் திறவாமல் அடம்பிடிக்க...

தமிழ் : சரி கைய நல்லா புடிச்சிக்கோ... என அவளுக்கு கூறிவிட்டு அவள் கைகளை இவன் நன்கு பிடித்து கொண்டு பாதையில் நடந்தான்...

சில நிமிட நடையின் பின் இரயிலின் கூவலொலி கேட்டு டப்பென கண்களை திறந்தாள் தாஹினி... அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை.... அவ்வூரின் இரயில் நிலையத்தின் உட்பகுதி அது...

தாஹினி : இளன்... என்னதிது...

தமிழ் : இரயில்வே ஸ்டேஷன் ஜுனு...

தாஹினி : அது எனக்கு தெரியாதா... வீட்ல தான இருந்தோம்... இங்க எப்டி வந்தோம்...

தமிழ் : ஸீக்ரெட் டனல்... என ஹஸ்கி வாய்சில் கூற...

தாஹினி : விளையாடாதீங்க... உண்மைய சொல்லுங்க... என தோளில் அடிக்க...

தமிழ் : ஹாஹா விளையாடல ஜுனுமா... நம்ம தாத்தா தான் இந்த இரயில்வே ஸ்டேஷன கட்டுனாரு... அப்போ எதுக்கும் இருக்கட்டுமேன்னு சுரங்கபாதை உருவாக்குனாராம்...

தாஹினி : நம்ம தாத்தா இங்க ஸ்கூலு ஆஸ்பத்திரின்னு எல்லாத்தையும் தான் கட்டீர்க்காரு... அப்போ எல்லாத்துக்கும் இந்த டனல் போகுமா... என்க...

தமிழ் : அத என் தாத்தாட்ட கேட்டுக்கோ... இனிமே உன் ஆராய்ச்சிக்கு எதாவது குழப்பமா இருந்தா... இங்க வந்துக்கோ... ம்ம்ம்???

தாஹினி : ம்ம் சரிங்க இளன்... என மகிழ்ச்சியாய் தலையாட்டினாள்...

பின் என்ன... ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமாவது இங்கு ஓடி வந்து விடுவாள் அவள்... நேரம் போகும் வரை அங்கேயே அமர்ந்து புத்தகம் படிப்பாள்... எந்த அளவிற்கு என்றால் தமிழே " ஏன் டா அவளுக்கு அந்த இடத்தை காட்டினோம் " என தலையிலடித்து கொள்ளும் அளவு...

நம் ஆரு எதற்காவது அவளை அங்கு விட மாட்டேன் என அடம்பிடித்தாலும் அவளையும் இழுத்து சென்று மடியில் படுக்க வைத்து அவளை உறங்க வைத்து விட்டு இவள் புத்தகத்தில் மூழ்கி விடுவாள்...

பின் தமிழ் தான் இருவரையும் இழுத்து கொண்டு வர வேண்டும்... மனைவி செய்த அட்டூழியங்கள் பத்தாதென சனி கிழமை ஆனாலே தமிழின் தங்கைகளும் அந்த சுரங்கத்திற்குள் சென்று டேரா போட்டு விடுவார்கள்...

தமிழும் பிரபாவும் தான் இவர்களால் தலையை பிய்த்து கொண்டனர்... இவர்களின் நிலை இப்படியிருக்க... அன்று ஒரு வியாழக்கிழமை தன்னந்தனியாய் அந்த சுரங்கத்தில் அமர்ந்து ஏதோ கிருக்கி கொண்டிருந்தாள் தாஹினி...

அவளின் நேரம் சரியாக அங்கு ஒரு கூவல் தூரத்தில் ஒலிப்பதை போல் கேட்க... திடுக்கிட்டு எழுந்த தாஹினி யோசிக்காமல் இரயில் நிலையத்திற்கு ஓட... அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காது ஆமை வேகத்தில் வந்து நின்றது அந்த நீராவி இரயில்...

அதை கண்கள் நிறம்பிய ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தவளின் கவனத்தை ஈர்த்தது ஒரு அழுகுரல்....

மரணம் தொடரும்...

ஹாய் இதயங்களே... மகேந்திரனுக்கு அவனோட ஃபர்ஸ்ட் இன்ட்ரோல 26 வயசுன்னு சொல்லீர்ப்பேன்... பட் 24 தான்... கணக்கு தப்பாய்டுச்சு... மாத்தீடுவேன் டோன்ட் வரி... இன்னும் ஒரு ஐந்து எபிக்குள்ளையே ஃப்லஷ்பக் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்... இனிமே டக்கு டக்குன்னு மூவ் ஆஹும்... அடுத்த எபி ஜாலியா இருக்கலாம்... பட் அடுத்தடுத்த எபி எமோஷ்னலா இருக்கும்... அஸ் யு ஆல் நோ ... ஆரு குட்டி தான் ஃபர்ஸ்ட் இறந்து போவா... எனக்கே கஷ்டமா இருக்கு... ஆருவ மரணிக்க வைக்கனுமான்னு... பட் வேற வழியில்ல.... உங்கள்ட்ட சொல்லனும்னு தோனுச்சு... அடுத்த எபிய முடிஞ்சளவு சீக்கிரமே குடுக்குறேன்... டாட்டா

DhiraDhi

Continue Reading

You'll Also Like

8.1K 354 6
Initially posted in my Instagram account
18.6K 456 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
46 5 1
horror story
133 6 1
Hi frds ithu ennoda second story....இந்த கதை ஒரு மறுமம் பத்தின கதை இக்கதையை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாங்க ப்ரென்ஸ் என்ன நடக்குதுன்னு கத...