காலம் - 16

426 38 43
                                    

அறையில் சமனமிட்டு அமர்ந்து கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதை போல் இரண்டு கண்களையும் மூடி மடியில் வைத்து கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டிருந்தாள் சபீ.. " இவ ஏன் இப்போ சிட்டிங் டன்ஸ் ஆடிக்கிட்டு இருக்கா " என்று யோசித்து கொண்டே அவளை நெருங்கிய அஃப்ரின் அவள் மண்டையிலே ஒரு கொட்டு வைத்தாள்...

அஃப்ரி : ஹே சபீலாஹ் என்ன டி ஆச்சு உனக்கு.. லூசு டைமாச்சு வா தூங்க போவோம்... அரண்டு விழித்த சபீ அஃப்ரியை கண்டு

சபீ : ம்ம் வா போலாம்... என அவளை பின் தொடர்ந்தாள்...

கூடத்தில் பாயில் அமர்ந்து மற்ற ஐவரும் பாட்டிலை சுழற்றி ட்ரூத் ஆர் டேர் விளையாடி கொண்டிருந்தனர்...

தமிழ் " என்ன விபரீதம் நடக்க போகுதோ " என புலம்பி விட்டு அவ்விடத்தாலிருந்து மறைந்தான்...

சபீ : தூங்கலையா...

சஹா : இல்ல டி ஒரு சின்ன கேம்... வா விளையாடுவோம்... என மடியில் தலையணையை வைத்து சோபாவில் காலை நீட்டி அமர்ந்தாருந்தவள் புன்னகைக்குடன் அழைக்க...

அஃப்ரின் : என்ன ட்ரூத் ஆர் டேரா... போரடிக்கும் டி... என சலிப்புடன் கூற...

சபீ : ஆமா... நம்மள பத்தி எல்லாமே நமக்கு தெரியும்.. இப்போ என்ன விளையாடுரது...

ஹனா : நாம எல்லாருமே நம்ம பத்து வயசு வர வேற வேற இடத்துல தான டி இருந்தோம்... அந்த பத்து வர்ஷத்துல என்ன நடந்துச்சுன்னு நாம பழச நினைக்க வேணாம்னு சொல்லி ஷர் பன்னிக்கல... சோ இப்போ அத யூஸ் பன்னிப்போம்...

அஃப்ரி : கொய்ட் இன்ட்ரெஸ்ட்டிங்... சரி வாங்க...

தஸ்னி : நா சுத்தி விடுரேன்... நா சுத்தி விடுரேன்.. என முன் வந்தவள் அந்த பாட்டிலை சுழற்ற... அனைவரும் ஆவலாய் பார்த்திருந்த நேரம்... பாட்டிலின் முன் பக்கம் ஹனாவிற்கும் பின் பக்கம் சபீயிற்கும் வந்தது...

ராதி : ஹனா நீ தான் கொஷின் கேளு....

ஹனா : ட்ரூத் ஆர் டேர் சபீமா...

சபீ : ம்ம் டெர்...

ஹனா : சரி பொழச்சு போ.. உன்னோட வென்னிலா ஐஸ்க்ரீம நீயே எங்களுக்கு ஊட்டி விடு என குறும்பாய் கூற... சமையலறைக்கு எழுந்து சென்ற சபீ வென்னிலா ஐஸ்க்ரீமை எடுத்து வந்து அனைவருக்கும் ஊட்டி விட்டாள்... நம் தோழிகள் ஆறுவரும் சபீயை அதிர்ச்சி பொங்க பார்க்க அவளோ எதையும் காட்டி கொள்ளாமல் அந்த பாட்டிலை சுற்றி விட்டு அவர்களை திசை திருப்பினாள்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now